Latest Updates
-
பலரும் அறியாத இந்திய மசாலா பொருட்களும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்.! -
அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகம்: குபேரன் அருளால் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக மாறுமாம் -
சுக்கிரன்-சூரியன் உருவாக்கும் சுக்ராதித்ய யோகத்தால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
வெயிலை சமாளிக்க உதவும் சுவையான தர்பூசணி தோல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
கொளுத்தும் வெயிலால் உங்கள் முடி உடையாமல், கொட்டாமல் இருக்க இந்த எளிய உணவுகளை சாப்பிடுங்க -
வாஸ்து படி இந்த 5 இடங்களில் கடிகாரத்தை மாட்டுவது உங்களை துரதிர்ஷ்டசாலியாக மாற்றுமாம் -
புதன்-சூரியன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பிரியாணியை விட சூப்பரா இருக்கும் தக்காளி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
உலகில் உள்ள அருவெறுக்கத்தக்க மற்றும் விசித்திரமான அருங்காட்சியகங்கள்!
பொதுவாக அருங்காட்சியகங்களில் தனித்தன்மை வாய்ந்த வித்தியாசமான பொருட்கள் பாதுகாப்பாக மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். ஆனால் உலகில் நம்மை அச்சுறுத்தும் வகையிலும், முட்டாள்தனமாகவும் சில விசித்திரமான அருங்காட்சியகங்கள் உள்ளன.
உலகிலுள்ள சில விசித்திரமான உணவகங்கள்!
அந்த அருங்காட்சியகங்கள் குறித்து தான் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில அருங்காட்சியகங்கள் கேளிக்கைமிக்கவையாக இருந்தாலும், சில நம்மை அருவெறுக்கத்தக்க வகையில் இருக்கும்.
அகோரி சாதுக்கள் பற்றிய விந்தையான 10 உண்மைகள்!
சரி, இப்போது உலகில் உள்ள அந்த விசித்திரமான அருங்காட்சியகங்கள் குறித்துக் காண்போம்.

சுலாப் சர்வதேச கழிப்பறை அருங்காட்சியகம்
சுலாப் சர்வதேச கழிப்பறை அருங்காட்சியகம் பலருக்கும் சிரிப்பை வரவழைக்கும் வகையில் தான் இருக்கும். இந்த அருங்காட்சியகம் நம் டெல்லியில் தான் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 4,500 வருடங்களுக்கு முன்பு உபயோகப்படுத்தப்பட்டு வந்த கழிப்பறைகள் எல்லாம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Image Courtesy

ஐஸ்லென்டிக் பால்லோலாஜிக்கல் அருங்காட்சியகம்
இது மற்றொரு வித்தியாசமான ஓர் அருங்காட்சியகம். இங்கு பல்வேறு விலங்குகளின் ஆண்குறி பாகங்கள் உள்ளது. இந்த காட்சியகத்தில் 215-க்கும் மேற்பட்ட ஆண்குறிகள் உள்ளன. மேலும் இவை ஐஸ்லாந்தைச் சேர்ந்த நிலம் மற்றும் கடல் பாலூட்டிகளின் ஆண்குறி பாகங்கள் ஆகும்.
Image Courtesy

மோசமான ஓவிய அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகத்தை சுருக்கமாக MOBA என்று அழைப்பார்கள். இந்த அருங்காட்சியகத்தில் மிகவும் மோசமாக வரையப்பட்ட பல்வேறு ஓவியங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த அருங்காட்சியகத்திற்கு சென்றால் நீங்களும் உங்களுக்கு தெரிந்த ஓவியக் கலையை வெளிப்படுத்த தோன்றும்.
Image Courtesy

குன்ஷ்கமேரா, ரஷ்யா
உலகிலேயே நம்மை அச்சுறுத்தும் வகையில் உள்ள ஓர் அருங்காட்சியம் என்றால் அது ரஷ்யாவில் உள்ள குன்ஷ்கமேரா அருங்காட்சியகம் தான். ஏனெனில் இங்கு சிதைக்கப்பட்ட மனித சிசுக்கள் வினிகரில் பாதுகாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Image Courtesy

அவனோஸ் முடி அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகம் சிறிய குகைப் போன்று இருக்கும். இங்கு சுமார் 16,000-த்திற்கும் அதிகமான பெண்களின் கூந்தல் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
Image Courtesy

சர்வதேச மறைவிலங்கியல் அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகம் புராணக் கதைகள் மற்றும் சரிபார்க்கப்படாத உயிரினங்களின் மாதிரிகள் மற்றும் கலைப்பொருட்களுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கலைகளைப் பார்த்தால், நல்ல வேளை இவற்றில் எதுவும் நிஜத்தில் இல்லை என்ற சந்தோஷம் இருக்கும். ஏனெனில் அந்த வகையில் இவை பயங்கரமாக இருக்கும்.
Image Courtesy

இடைக்காலத்து சித்திரவதை கருவிகள் அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகத்தில் 100-க்கும் அதிகமான பலவிதமான இடைக்காலத்து சித்திரவதைக் கருவிகள் உள்ளன. இவற்றில் சில நம்மால் பார்த்ததுவும் புரிந்து கொள்ளும் வகையிலும், இன்னும் சில நம்மை குழப்பத்திற்குள்ளாக்கும் வகையிலும் இருக்கும்.
Image Courtesy

கன்சாஸ் முட்கம்பி அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகத்தில் 2,400-க்கும் அதிகமான பல வகையான முட்கம்பிகள் உள்ளன.
Image Courtesy



Click it and Unblock the Notifications











