Latest Updates
-
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும்
இந்த ஓவியங்கள் உங்கள் படுக்கையறையில் உள்ளதா? உடனே அதை தூக்கி எறியுங்கள்..!
நம் வீட்டில் உள்ள நிறைய விஷயங்கள் நம் உடல் ஆரோக்கியம் மற்றும் உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்ப்பவை. இதுவரை நாம் வீட்டின் செல்வத்தை அதிகரிக்க, வீட்டினுள் வைத்திருக்கக்கூடாத பொருட்களைப் பற்றி கண்டோம்.
இப்போது கணவன் மனைவி உறவுகளுக்குள் விரிசல்களை ஏற்படுத்தும் சில ஓவியங்கள் குறித்து காணப் போகிறோம். இந்த ஓவியங்கள் வீட்டின் படுக்கையறையில் இருந்தால், அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும். சரி, இப்போது அந்த ஓவியங்கள் என்னவென்று காண்போம்.

குழப்பமான நவீன ஓவிய படங்கள்
உங்களுக்கு என்ன தான் குழப்பமான நவீன ஓவிய படங்கள் மிகவும் பிடித்திருந்தாலும், அதை வீட்டின் படுக்கை அறையில் வைக்காதீர்கள். அப்படி வைத்தால், அது தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல், அவர்களை குழப்பத்துடனேயே இருக்க வைக்கும்.

இரண்டு-மாஸ்க் கொண்ட ஓவியம்
இம்மாதிரியான ஓவியங்களை பெரும்பாலான வீடுகளில் காணலாம். இந்த ஓவியங்கள் படுக்கை அறையில் இருந்தால், அது தம்பதியர்கள் இருவரும் ஒரு பொய்யான மாஸ்க்கை அணிந்து பொய்யான வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுத்து, உறவை பாழாக்கிவிடும்.

பலதார மண ஓவியங்கள்
ஓவியத்தில் பலதார மணம் புரிந்த ஒரு ஆண் மற்றும் 4 அல்லது 5 பெண்கள் இருக்கும் படி இருந்தால், அம்மாதிரியான ஓவியங்களை படுக்கை அறையில் வைக்காதீர்கள்.

போர் காட்சி ஓவியங்கள்
போர் காட்சி ஓவியங்களை படுக்கை அறையில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் இறந்த சடலங்கள், குழந்தை அழுவது போன்ற அல்லது மக்கள் கூட்டமாக இறந்திருப்பது போன்ற ஓவியங்களையும் தவிர்க்க வேண்டும்.

வேட்டைக்காரர்கள் ஓவியங்கள்
வேட்டைக்காரர்கள் தங்கள் இரையைத் தேடுவது போன்ற அல்லது இரையை கொன்று அருகில் வைத்து சந்தோஷமாக இருப்பது போன்ற ஓவியங்கள், தம்பதிகளின் வாழ்க்கையில் பிரச்சனையைத் தான் அதிகரிக்கும். ஆகவே இம்மாதிரியான ஓவியங்களையும் தவிர்க்கக வேண்டும்.



Click it and Unblock the Notifications
