Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
கின்னஸ் சாதனைகள் மூலம் சாதனை செய்த இந்தியர் கின்னஸ் ரிஷி!
கின்னஸ் சாதனை செய்வதென்பது எளிய காரியமல்ல. நீங்கள் செய்யும் விஷயம் தனித்துவம் பெற்றிருக்க வேண்டும். அதன் முன்னர் யார் முயற்சி செய்திருக்கிறார்கள், முந்தைய சாதனை என்ன? அதை முறியடிக்க கடின பயிற்சி என பலவன செய்ய வேண்டும்.
சிலர் வேடிக்கையாக சில சாதனைகளும் செய்துள்ளனர். இவர்களுக்கே எல்லாம் அப்பாற்பட்ட மனிதர் தான் இந்தியாவை சேர்ந்த கின்னஸ் ரிஷி! இவரது இயற்பெயர் ஹர் பிரகாஷ். இவரது பிறந்தது 1942ம் வருடம், ஜூலை 7ம் தேதி. இவர் டெல்லியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூரமான பிட்சா டெலிவரி!
கின்னஸ் ரிஷி ஒருமுறை டெல்லியில் இருந்து கலிபோர்னியா வரை பயணித்து 10,286 மைல்கள் கடந்து ஓர் மியூசியத்தில் பிட்சா டெலிவரி செய்து கின்னஸ் உலக சாதனை செய்தார்.

தத்தெடுத்த குழந்தை!
கடந்த 2001-ம் கின்னஸ் ரிஷி, கின்னஸ் சாதனை செய்வதற்கென்றே இவரது மச்சானை தத்தெடுத்தார். மிக வயது அதிகமான குழந்தையை தத்தெடுத்த சாதனை தான் அது. இவர் தத்தெடுத்த குழந்தைக்கு வயது வெறும் 61. (தத்தெடுத்த போது)

கெட்சப் குடிப்பது!
ஓர் பாட்டில் கெட்சப்பை வெறும் நாற்பது நொடிகளில் குடித்து மற்றுமொரு விசித்திரமான கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார் கின்னஸ் ரிஷி!

சர்க்கரை கியூப் டவர்!
உயரமான சர்க்கரை கியூப் டவர் எழுப்பி ஓர் கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார் கின்னஸ் ரிஷி. இவர் எழுப்பிய சர்க்கரை கியூப் டவரின் உயரம் 64 அங்குலம் ஆகும்.

ஸ்ட்ரா!
ஒருமுறை வாயில் அதிகப்படியான ஜூஸ் ஸ்ட்ராக்கள் வைத்து கின்னஸ் உலக சாதனை புரிய தனது மொத்த பற்களையும் துச்சமாக பிடுங்கி எறிந்தார் கின்னஸ் ரிஷி! இந்த சாதனையின் போது, 755 ஸ்ட்ராக்கள் வாய்க்குள் அடக்கினார் கின்னஸ் ரிஷி!

டாட்டூ!
உடலில் அதிகமான டாட்டூக்கள் குத்திக் கொண்ட சாதனையும் கின்னஸ் ரிஷி வசம் தான் இருக்கிறது. மொத்தம் 85 நாடுகளின் தேசிய கொடிகள், மூன்று நபர்களின் முகங்கள் உட்பட 499 டாட்டூக்கள் குத்திக் கொண்டுள்ளார்.

ஸ்கூட்டர்!
ஒருமுறை கின்னஸ் ரிஷி 1001 மணிநேரம் தொடர்ந்து ஒட்டி சாதனை புரிந்துள்ளார்.

உலக சாதனை!
இதுவரை இவர் மொத்தம் 25 உலக சாதனைகள் தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 8 கின்னஸ் உலக சாதனை ஆகும்.



Click it and Unblock the Notifications
