ஜல்லிக்கட்டு பற்றி பலரும் அறியாத வரலாற்று உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளையை குறிக்கும் சொல்லாகும். காளையை ஓடவிட்டு அதை வீரர்கள் ஓடிபிடித்து அடக்குவது தான் ஜல்லிக்காடு, இதில் மிருகவதை இல்லை என்பது விளையாட்டு வீரர்களின் கருத்து. சொல்லப் போனால், காளை முட்டி உயிரிழந்த வீரர்கள் தான் அதிகம்.

கோனார்கள் எனப்படும் ஆயர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தான் ஜல்லிக்கட்டு அதிகமாக நடத்தப்படுகின்றது. மதுரை, பாலமேடு, புதுக்கோட்டை, நார்த்தாமலை, தேனீமலை போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு பிரபலமாகும்.

நன்றி: ஏறுதழுவுதல் வரலாற்று தகவல்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெயர் காரணம்

பெயர் காரணம்

சல்லி எனது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தை குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் இப்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் சல்லிக் காசு எனும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்பில் கட்டிவிடும் பழக்கமும் ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது. இந்த காரணங்களால் தான் சல்லிக்கட்டு என்ற பெயர் வந்து, பின்னாட்களில் ஜல்லிக்காட்டாக மாறியது.

வரலாறு

வரலாறு

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது.

வரலாறு

வரலாறு

கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள்

ஏழு காளைகளை அடக்கித் தன் மாமன் மகளான நப்பின்னை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அன்று முதல் காளையை அடக்கும் மாவீரனுக்கே, அந்த பெண்ணிற்கு பிடிக்கும் பட்சத்தில் ஆயர்(யாதவ்) குலத்தினர் தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். சங்க இலக்கியமான கலித்தொகை

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆய மகள்.

அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத

நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து

நைவாரா ஆய மகள் தோள்."

என்று பாடப்பட்டுள்ளது.

புலிக்குளம் காளை சிறப்பு

புலிக்குளம் காளை சிறப்பு

புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. சல்லிக்கட்டுக்கு என்று தனிச்சிறப்பாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம் . இது காங்கேயம் காளைகளை விட மிகவும் மூர்க்கமானது.

விஞ்ஞானிகள் வியப்பு

விஞ்ஞானிகள் வியப்பு

உலகளவில் இந்திய நாட்டின் பசுக்களின் பாலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதிலும் புலிக்குளம் இனப் பசுக்களின் பாலே சிறந்தது என்று விஞ்ஞானிகளால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

காளைப் போர்

காளைப் போர்

ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.

ஜல்லிக்கட்டு இடங்கள்

ஜல்லிக்கட்டு இடங்கள்

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பெரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About Jallikattu

Do you know about the lesser known facts about Jallikattu? read here in tamil.
Subscribe Newsletter