இந்த ஆவணி மாசம் மோசமாமே, காஞ்சி மடமே நல்ல காரியங்கள தள்ளி வைக்க சொல்லிட்டாங்களாம்!

Posted By:
Subscribe to Boldsky

ஆடி போய் ஆவணி வந்தா எல்லாம் டாப்பா வந்துரும் என்பார்கள். இது இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் கூட கைமேல் பலன் தந்துள்ளது கடந்த இரு தினங்களாக நாம் பார்த்து வருகிறோம். ஆனால், இந்த ஆவணியும் அவ்வளவாக சரியில்லை, சற்று மோசமானது என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

திருமணம், புதிய தொழில் துவங்குவது போன்ற சுபக் காரியங்களை தள்ளி வைத்துவிடுங்கள். அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என காஞ்சி மடத்தில் கூட சொல்லிவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படி என்ன இந்த ஆவணி மோசம்...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆவணி நல்லது தானே?

ஆவணி நல்லது தானே?

பொதுவாக ஆடி மாதம் சுப காரியங்கள் எல்லாம் நிறுத்தி வைத்து, ஆவணியில் துவங்குவது தான் வழக்கம். திருமணங்களில் இருந்து இடம், பொருள் வாங்குவது, தொழில் துவங்குவது என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். ஆனால், இந்த வருட ஆவணி மாதம் சற்று மோசம் என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.

அப்படி என்ன மோசம்?

அப்படி என்ன மோசம்?

ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை, இரண்டு பௌர்ணமி வருவது நல்லதல்ல என கூறப்படுகிறது. அப்படி ஒரே மாதல் இரண்டு பௌர்ணமி, அமாவாசை வந்தால் அந்த மாதத்தை மல மாதம் என அழைக்கிறார்கள்.

திருக்கணித பஞ்சாங்கம்!

திருக்கணித பஞ்சாங்கம்!

திருகனித பஞ்சாங்கத்தின் படி பார்க்கையில் இந்த ஆவணி மாதத்தில் ஆவணி 1-ம் தேதியும், 30-ம் தேதியும் இரண்டு பௌர்ணமி வருகின்றன. இதனால் காஞ்சி மேடம், வித்வத் சபையை சார்ந்தவர்கள் எல்லாம் கலந்து பேசி, இந்த ஆவணி மாதத்தில் சுப காரியங்களை நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளனர்.

அட இது மட்டுமில்லைங்க...

அட இது மட்டுமில்லைங்க...

இந்த இரண்டு அமாவாசை, பௌர்ணமி மட்டுமின்றி, குரு அஸ்தமனம், சுக்ர அஸ்தமனம் நிகழும் காலங்களிலும் திருமணம், புதிய தொழில் துவங்குவது போன்ற நல்ல காரியங்களை தள்ளி வைக்க வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

குரு அஸ்தமனம், சுக்ர அஸ்தமனம் அப்படின்னா என்ன?

குரு அஸ்தமனம், சுக்ர அஸ்தமனம் அப்படின்னா என்ன?

சுக்ரனும் சூரியனும் ஒரே வீட்டில் இருப்பதை ‘சுக்ர அஸ்தமனம்' எனவும், சூரியனும் குருவும் ஒரே வீட்டில் இருப்பதை ‘குரு அஸ்தமனம்' என்றும் கூறப்படுகிறது. இந்த நாட்களிலும் அவ்வளவாக நல்லதல்ல என்பதால், நல்ல காரியங்களை இந்த நாட்களில் தள்ளி வைத்து விடுங்கள் என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

அப்போ இந்த ஆவணியில எதுவுமே வேண்டாமா?

அப்போ இந்த ஆவணியில எதுவுமே வேண்டாமா?

சீமந்தம், மஞ்சள் நீராட்டு விழா, முடி காணிக்கை தருவது போன்ற காரியங்களை ஆட்சேபனை இல்லாமல் நடத்தலாம் என்றும், திருமணம் போன்ற ஏனைய மற்ற சுபக் காரியங்களை மட்டும் தள்ளி வைத்து விடலாம் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is This Year Aavani Month is bad For Auspicious things

Is This Year Aavani Month is bad For Auspicious things? read here in tamil
Please Wait while comments are loading...
Subscribe Newsletter