Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்-ல் இருந்த இந்திய நடிகர், நடிகைகள்!
"அட, லிவ்-இன் ரிலேஷன்ஷிப் எல்லாம் இப்ப சகஜம்ப்பா, அதுவும் இந்த ஐ.டி பசங்க எல்லாம் இதுல ரொம்பவே மூழ்கிட்டாங்க.." என சிலர் கூறுவார்கள். இது 100% உண்மையற்றது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் இருக்கத் தான் செய்கிறது, அங்கொன்றும், இங்கொன்றுமாக.
ஆனால், சமூகத்தில் நாம் ஒருவரை பற்றியே பலரிடம், பல இடங்களில் பேசுவதால் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் அதிகமாக உள்ளது போன்ற ஓர் மாயை நிலவுகிறது.
பிரபலங்கள் மத்தியில் இது கொஞ்சம் சாதாரணம் என்ற அளவில் ஆகிவருகிறது. காதல் - திருமணதிற்கு மத்தியில் இருவரும் ஒன்றாக வாழ்வது இயல்பு என்ற போக்கு கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. லிவ்-இன் உறவில் இருந்து திருமணம் செய்துக் கொண்டவர்களைவிட, பிரிந்து சென்றவர்கள் தான் அதிகம்.
சில பிரபலங்கள், திருமணம் செய்த பிறகும் கூட வேறு நபருடன் லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர்...

பிரபுதேவா - நயன்தாரா
மும்பையில் நயன்தாராவும், பிரபுதேவாவும் லிவ்-இன் உறவில் இருந்ததாக பல செய்திகள் வெளியாகின. இவர்கள் திருமணம் செய்துக் கொள்வார்கள் என்று தான் எதிர்பார்த்தனர். இதற்காக நயன் மதம் மாறினார் என்றும் கூறப்பட்டது. ஆனால், கடைசியில் இருவரும் பிரிந்துவிட்டனர்.

சித்தார்த் - ஸ்ருதி ஹாசன்
தெலுங்கு சினிமாவில் சிறந்த ஜோடியாக திகழ்ந்தவர்கள் இவர்கள். இவர்கள் இருவரும் லிவ்-இன் உறவில் இருந்ததாக பரவலாக செய்திகள், கிசுகிசுக்கள் வந்துக் கொண்டிருந்தன. இவர்கள் காதலிப்பதாகவும், திருமணம் செய்துக் கொள்வார்களாம் கூட சில கிசுகிசுக்கள் வந்தன. ஆனால், இவர்கள் இருவரும் இப்போது பிரிந்து தனித்தனியே தான் இருக்கிறார்கள்.

போனி கபூர் - ஸ்ரீதேவி
திருமணம் செய்துக் கொள்ளும் முன் இவர் லிவ்-இன் உறவில் இருந்ததாகவும், அதன் பிறகு தான் திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், திருமணத்திற்கு முன்னரே ஸ்ரீதேவி கருவுற்றார் எனவும் அப்போது சில வதந்திகள் உலாவிக் கொண்டிருந்தன.

சுஷாந்த் சிங் ராஜ்புத் - அங்கிதா
லிவ்-இன் உறவில் இருந்து இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என பலரும் நினைத்தனர். ஆனால், சுஷாந்த் சிங் ராஜ்புத் - அங்கிதா இருவரும் பிரிந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்று!

சைப் அலி கான் - ரோசா கேட்டலனோ
சைப் அலி கான் - ரோசா கேட்டலனோவும் லிவ்-இன் உறவில் இருந்தனர். ஆனால், பின்னாளில் பிரிந்துவிட்டனர்.

சைப் அலி கான் - கரீனா கபூர்
லிவ்-இன் உறவில் இருந்த பிறகு தான் சைப் அலி கான் - கரீனா கபூர் திருமணம் செய்துக் கொண்டனர். இப்போது இவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

ராஜேஷ் கன்னா - டினா முனிம்
ராஜேஷ் கன்னா - டினா முனிம் லிவ்-இன் உறவில் இருந்தனராம். ஆனால், ராஜேஷ் கன்னா டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்துக் கொண்டார்.

ராஜேஷ் கன்னா - அனிதா அத்வானி
டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்துக் கொண்ட பிறகு, அனிதா அத்வானிவுடன் லிவ்-இன் உறவில் ராஜேஷ் கன்னா இருந்துள்ளார்.

லாரா தத்தா - கெல்லி டோர்ஜி
லிவ்-இன் உறவில் இருந்த லாரா தத்தா - கெல்லி டோர்ஜி-யும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. பின்னலில் லாரா தத்தா மகேஷ்பூபதியை திருமணம் செய்துக் கொண்டார்.

அமீர் கான் - கிரண் ராவ்
லிவ்-இன் உறவில் இருந்து திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வரும் மற்றுமொரு ஜோடி அமீர் கான் - கிரண் ராவ்.

குணால் - சோஹா அலி கான்
லிவ்-இன் உறவில் இருந்த இவர்கள் இருவரும், இப்போது திருமண பந்தத்தில் இனைந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஜான் ஆபிரகாம் - பிபாஷா பாசு
அனைவரும் அறிந்த கதை தான் இது. ஹாட்டான ஜோடி திருமணம் செய்துக் கொள்வார்கள் என்று பார்த்தல், பிரிந்துவிட்டனர்.

அனுராக் காஷ்யப் - கல்கி
அனுராக் காஷ்யப் - கல்கி லிவ்-இன் உறவில் இருந்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். ஆனால், இது நிலைக்கவில்லை. இருவரும், விவாகரத்து செய்துவிட்டனர்.

அமீஷா பட்டேல் - விக்ரம் பட்
அமீஷா பட்டேல் - விக்ரம் பட் முதலில் லிவ்-இன் உறவில் தான் இருந்தனர். பிறகு திருமணம் செய்துக் கொண்ட ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆதித்யா - கங்கனா
ஆதித்யா - கங்கனா லிவ்-இன் உறவில் இருந்து, பிறகு பிரிந்தவர்கள்.

அபய் தியோல் - ப்ரீத்தி தேசாய்
லிவ்-இன் உறவில் இருந்து, பிறகு திருமணம் செய்துக் கொண்டு இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் அபய் தியோல் - ப்ரீத்தி தேசாய் இருவரும்.

கமல் - சரிகா
பேசி வைத்தே, திருமணம் வேண்டாம் என, ஒன்றாக வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு. சரி, திருமணம் செய்துக் கொள்வோம் என இல்லறத்தில் இணைந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக இவர்கள் பிரிந்துவிட்டனர்.
திருநெல்வலி இருட்டு கடை அல்வா..!!



Click it and Unblock the Notifications
