For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் மஹாளய அமாவசை அன்று பித்ருக்களை வணங்கி தர்ப்பணம் விட வேண்டும்?

|

எல்லா மாதங்களிலும் அமாவாசை வருகின்றன. ஆனால், புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை மட்டும் தனி சிறப்பு பெற்றிருக்கிறது. ஆம், எல்லா மாதங்களில் வரும் அமாவாசை அன்றும் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரலாம்.

ஆனால், அப்படி தர இயலாதவர்கள் கூட இந்த மஹாளய அமாவாசை அன்று கொடுத்தால் முழு பயனும் அடையலாம் என கூறப்படுகிறது. அப்படி என்ன தான் மஹாளய அமாவாசையின் சிறப்பு என இந்த கட்டுரையில் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஹாளய அமாவாசை சிறப்பு!

மஹாளய அமாவாசை சிறப்பு!

மஹாளயபட்சம் நமது முன்னோருக்கு உரியதாக கருதப்படுகிறது. ஆத்மா வை புத்ர நாம ஆஸீத் எனும் வேதம், நமது முன்னோர்கள் இந்த உலகை விட்டு சென்றாலும் கூட நமது சந்ததியோடு தொடர்பு கொண்டு தான் இருப்பார்கள். எனவே, அவர்களை வழிப்பட வேண்டியது அவசியம் என கூறுகிறது. இந்த வழிப்பாடு ஒரு நன்றி செலுத்தும் விதம் ஆகும்.

பலன்!

பலன்!

மேலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் அமாவாசை போன்ற முக்கியமான நாட்களில் அவரவர் சந்ததி வாழும் இடத்திற்கு வந்து ஆசீர்வாதம் செய்வார்கள் என ஞான நூல்கள் கூறுகின்றன.

எனவே, இந்த நாட்களில் அவர்களை வழிப்பட்டால், ஆரோக்கியம், வளம் போன்ற எல்லா செல்வங்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

மஹாளய அமாவாசை ஏன்?

மஹாளய அமாவாசை ஏன்?

சாதாரண அமாவாசை நாட்களில் பொதுவாக தர்ப்பணம் கொடுப்பார்கள், ஆனால் மஹாளயபட்ச அமாவாசை அன்று தான் பெற்றோர் மட்டுமின்றி, அவரது முன்னோர்கள், உறவினர் என அனைவருக்கும் ஒன்று சேர்த்து தர்ப்பணம் தருவார்கள்.

முக்கியமாக அகால மரணம் அல்லது கருவிலேயே இறந்தவர்களுக்கு இந்த அமாவாசை நாளில் தர்ப்பணம் தருவது அந்த ஆத்மாக்களை நிம்மதி அடைய செய்யும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

எல்லா நாட்களும்!

எல்லா நாட்களும்!

மஹாளயபட்சத்தில் எல்லா நாட்களிலும் தர்பணம் செய்யலாம். ஆனால், இயலாதவர்கள் அமாவாசை என்று செய்யலாம் என கூறப்படுகிறது. இது இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் சந்ததி அவர்களது முன்னோர்களின் ஆசீர்வாதம் பெறுவதற்காக.

மஹாளயபட்ச காலம்!

மஹாளயபட்ச காலம்!

சூரியன் கன்யா ராசியில் இருந்து சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள காலம் தான் மஹாளயம்.

இந்த காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும்?

இந்த காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும்?

சிறப்பு பூஜைகள், ஏழை எளியவர்களுக்கு தானம், தர்மம், அன்னதானம், பசுவிற்கு கீரை, புல், பழங்கள் போன்றவை அளித்து வந்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Important Info About Mahalya Amavasai

Importance Info About Mahalya Amavasai, read here in tamil.
Desktop Bottom Promotion