பல்வேறு நாடுகளில் பாலியல் பலாத்காரத்திற்கு கொடுக்கப்படும் தண்டனைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் பாலியல் பலாத்காரம் அதிகமாக நடந்து வருகிறது. இந்த வெட்ககேடான செயலில் ஈடுபடுபவர்கள் மனித மிருகங்கள் என்று தான் கூற வேண்டும். இப்படிப்பட்ட கேவலமான செயலை மக்கள் செய்யாமல் இருக்க வேண்டுமானால், முதலில் அந்நாட்டில் அதற்கான சட்டங்கள் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும்.

இப்படியொரு ஒரு கேவலமான செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால், பாலியல் பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க முடியும். இல்லாவிட்டால், குற்றவாளிகள் சிறை தண்டனை தானே என்று சாதாரணமாக எண்ணி, மீண்டும் மீண்டும் அச்செயலில் ஈடுபடுவார்கள்.

இப்போது இக்கட்டுரையில் வெவ்வேறு நாடுகளில் பாலியல் பலாத்காரத்திற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீனா

சீனா

சீனாவில் பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு மரண தண்டனை வழங்கப்படும். இன்னும் சில மோசமான குற்றவாளிகளுக்கு, ஆண்விதைகள் நீக்கப்படும்.

ஈரான்

ஈரான்

இந்த நாட்டில் கற்பழிப்பில் ஈடுபவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இப்படி கடுமையான தண்டனை இருந்தால் தான், இம்மாதிரியான செயலில் யாரும் ஈடுபடமாட்டார்கள் என அந்நாட்டில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து, நான்கு நாட்களில் தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் அல்லது தூக்கிலிட்டு மரணத்தை பரிசாக வழங்குவார்கள்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

இந்த நாட்டில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு, மரண தண்டனையோ அல்லது சுடவோ செய்யமாட்டார்கள். மாறாக, அவர்களுகு 15 வருடங்கள் கடுமையான சிறை தண்டனை வழங்கப்படும். குற்றவாளியின் மோசமான செயலைப் பொறுத்து, 30 வருடங்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் கூட சிறையிலேயே இருக்கக்கூடும்.

வட கொரியா

வட கொரியா

வட கொரியாவில் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் உடனே தண்டனை வழங்கப்படும். அதுவும் குற்றவாளியை அப்போதே நெற்றில் சுட்டு கொல்வார்கள் அல்லது ஆணுறுப்பை வெட்டி விடுவார்கள்.

ரஸ்யா

ரஸ்யா

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஸ்யாவில் கடுமையான சட்டங்கள் இல்லை. இங்கு, பாலியல் பலாத்காரம் செய்தால் 3-6 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். மோசமான சூழ்நிலையில் 10-20 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும்.

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் மோசமான மற்றும் அச்சத்தை வரவழைக்கும் படியான தண்டனை வழங்கப்படுகிறது எனலாம். ஏனெனில் அங்கு இச்செயலில் ஈடுபட்டால், பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டிவிடுவார்கள்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் பாலியல் பலாத்காரத்திற்கு மத்திய அரசின் சட்டத்தின் கீழ், சில வருட சிறை தண்டனை முதல் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டிய மரண தண்டனை வழங்கப்படும்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் பாலியல் பலாத்காரத்திற்கான சட்டம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் தான் இந்தியாவில் சமீப காலமாக பல பெண்கள் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்துள்ளனர். இருப்பினும், இந்திய அரசாங்கம் இப்படி கொடிய செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சில வருடங்கள் மட்டுமே சிறை தண்டனை வழங்குவதால், அச்சமின்றி மீண்டும் இச்செயலில் பலர் ஈடுபடுகின்றனர்.

பாலியல் பலாத்காரத்திற்கு சவுதியைப் போன்று மிகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான், யாரும் இந்த மாதிரியான வெட்கக்கேடான செயலில் ஈடுபடமாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Different Countries Punish The Rapists

Find out about how different countries punish the rapists. Giving severe punishment to rapists can help put an end to this shameful practice.