இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா?

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் எப்படி தனித்துவமானவர்களாக இருக்கிறார்களோ அதேபோல ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். சில மாதங்களில் பிறந்தவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள். ஏனெனில் ஒருவர் பிறக்கும் மாதம் அவர்களின் ஆளுமையிலும், தோற்றத்திலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

Top 4 Most Lovable Birth Months

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைவரையும் ஈர்க்கக்கூடிய நான்கு மாதங்கள் உள்ளன. இந்த மாதங்களில் பிறந்தவர்களிடம் அற்புதமான திறமைகளின் கலவை உள்ளது. இது அவர்களுக்கு விவரிக்க முடியாத அழகு, அரிய வகை ஈர்ப்புத் தன்மை மற்றும் சிறந்த ஆளுமை ஆகியவற்றை வழங்குகிறது. நீங்கள் இந்த மாதங்களில் பிறந்தவராக இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி, ஏனெனில் நீங்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கேத் தெரியாமல் உங்களை விரும்புபவர்கள் பலர் இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் தனித்துவமானவர்கள். அவர்கள் ஆழமான சிந்தனை, மர்மமான ஈர்ப்பு ஆகியவற்றின் கலவையாக அமைந்திருப்பதால், அவர்கள் ஒரு வித்தியாசமான, தனித்துவமான ஆளுமையாகத் திகழ்வார்கள். அவர்களின் தொலைநோக்கு சிந்தனையும், கற்பனைத் திறனும், படைப்பாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த சிறப்பான திறன்களால் பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் மீது மற்றவர்கள் ஈர்க்கப்படுவது இயல்பானதே. அவர்களுக்கு இணையற்ற கவர்ச்சியும், அனைவரையும் எளிதில் கவரக்கூடிய வெளிப்படையான மனப்பான்மையும் உள்ளது. மேலும் அவர்களின் தோற்றம் பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகளுக்குக் கூட மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கும் வகையில் தனித்துவமானதாக இருக்கும்.

மே

மே மாதத்தில் பிறந்தவர்கள் யாராலும் தவிர்க்க முடியாதவர்களாக இருப்பார்கள். வசீகரிக்கும் தோற்றமும், நகைச்சுவை ஆற்றலும் அவர்களுக்கு அனைவரையும் ஈர்க்கும் கவர்ச்சியைக் கொடுக்கிறது. அவர்களின் அறிவுப்பூர்வமான உரையாடல்களும், இயற்கையான வசீகரமும் அவர்களை யாராலும் வெறுக்க முடியாதவர்களாக மாற்றுகிறது. அவர்கள் புத்திசாலியாக இருக்கும் அதேநேரத்தில், ஆச்சரியத்தை ஏற்படுத்துபவராகவும் இருப்பதால், அவர்கள் மீது எல்லோரும் ஈர்ப்புக் கொள்வார்கள். அவர்களுடன் இருப்பவர்கள் அவர்களுக்கேத் தெரியாமல் இவர்கள் மீது ஈர்ப்புக் கொள்வார்கள்.

செப்டம்பர்

செப்டம்பர் மாதத்தில் பிறந்வர்கள் மற்றவர்களை மெல்ல மெல்ல ஈர்க்கும் இயல்புடையவர்கள். அவர்கள் அமைதியான அதே சமயம் நேர்த்தியான அழகைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் உடை முதல் நடத்தை வரை அனைத்திலும் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். இதுவே ஒருவரை ஈர்க்கப் போதுமானதாக இருந்தாலும், அவர்களின் ஆளுமையும், நடந்து கொள்ளும் விதம்தான் மக்களை அதிகம் கவர்கின்றன. மற்றவர்களுக்குத் தேவைப்படும்போது உறுதுணையாக இருப்பதில் பெருமை கொள்ளும், அக்கறையுள்ள மற்றும் கவனிப்புத் திறன் அவர்களிடம் இயற்கையாகவே இருக்கும். அடக்கம், அமைதி மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அணுகுமுறையைக் கொண்டிருப்பதால் அவர்கள் ஈர்ப்பவர்களாக மட்டுமில்லாமல் அனைவராலும் மதிக்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

அக்டோபர்

அக்டோபர் மாதம் பிறந்தவர்கள், அவர்களின் ஆளுமை, தோற்றம் மற்றும் ஆற்றல் ஆகியவை அனைவரையும் ஈர்க்கிறது. அவர்களின் ஆளுமை காதல் மற்றும் அழகைத் தூண்டுகிறது, அதேசமயம் மற்றவர்களை எளிதில் அடிபணிய வைக்கும் அதிகாரமிக்க தோரணையும் அவர்களிடம் உள்ளது. அவர்களின் மயக்கும் அழகாலும், ஆளுமையாலும் அவர்கள் எங்கு சென்றாலும் மக்கள் திரும்பிப் பார்ப்பார்கள். அவர்களின் காந்த சக்தியால் அவர்கள் எங்கு சென்றாலும் அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவார்கள். அவர்களின் சமூகத் திறன்கள் ஈடு இணையற்றவை, இது மற்றவர்களின் அன்புக்கு அவர்களை தகுதியானவர்களாக மாற்றுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, June 12, 2026, 20:10 [IST]
Desktop Bottom Promotion