Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம்
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவராக விளங்கிய சாணக்கியர் மனித வாழ்க்கை குறித்த அவருடைய தனித்துவமான கொள்கைகளுக்காக மிகவும் புகழ்பெற்றவர். சாணக்கிய நீதி என்பது ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கைகள் மற்றும் அறிவுரைகளின் புகழ்பெற்ற தொகுப்பாகும், அவை எழுதப்பட்ட காலத்தில் இருந்ததைப் போலவே இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்துகின்றன, மேலும் அவை எதிர்காலத்திற்கும் பொருந்தும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த கொள்கைகள் மனித வாழ்க்கையை சரியான பாதையில் வழிநடத்த உதவுகின்றன.

சாணக்கியர் தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தொகுத்த நீதி சாஸ்திரத்தில் தொழில், நட்பு, திருமண வாழ்க்கை, செல்வம் மற்றும் பெண்களின் பண்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைப் பற்றி கூறியுள்ளார். சாணக்கிய நீதி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி விவாதிக்கிறது.
பொதுவாக பெண்களை விட ஆண்கள் வலிமையானவர்களாகக் கருதப்பட்டாலும் உண்மையில் பல விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கும் சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொறுமை
ஆண்களை விட பெண்கள் பலமடங்கு பொறுமை கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலும் பொறுமையிலும் பெண்கள் ஆண்களை விட சிறந்தவர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆண்களுக்குப் பொறுமை இல்லை, ஆனால் பெண்கள் எல்லாச் சூழ்நிலைகளையும் பொறுமையுடன் கையாள்வதால், 'க்ஷமய தாரித்ரி' என்ற பட்டத்தைப் பெறுகிறார்கள்.
புத்திக்கூர்மை
சாணக்கிய நீதியின் படி, ஆண்களை விடப் பெண்கள் அதிக புத்திக்கூர்மை வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். முக்கியமான விஷயங்களில் ஆண்கள் முடிவுகளை விரைவாக எடுக்கக்கூடும்; ஆனால், நுணுக்கமான விஷயங்களில் பெண்கள் புத்திசாலித்தனமாகச் சிந்தித்து முடிவெடுக்கிறார்கள்.
விட்டுக்கொடுப்பது
உறவுகளை சீராக காப்பாற்றுவதற்காகப் பெண்கள் அதிகமாவே விட்டுக் கொடுக்கிறார்கள், ஆனால் ஆண்கள் அதில்கோட்டை விடுகிறார்கள். கணவன்-மனைவி உறவாக இருந்தாலும் சரி, பிற உறவாக இருந்தாலும் சரி, கடினமான சூழ்நிலைகளிலும்கூட பெண்கள் விட்டுக் கொடுத்துக்கொண்டே உறவுகளை சிறப்பாகக் கையாளுகிறார்கள். குடும்பத்தையும் சமூகத்தையும் இணைப்பதில் பெண்களுக்கு அதிக ஆற்றல் உள்ளது. குடும்பத்தை ஒற்றுமையுடன் வைத்திருக்கவும், சமூகத்துடன் இணக்கமாகச் செயல்படவும் அவர்கள் ஆண்களை விட சிறப்பாகவே அறிவார்கள்.
முடிவெடுக்கும் திறன்
கடினமான சூழல்களில் பெண்கள் ஆண்களை விட சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர்கள். சிக்கல்கள் எழும்போது ஆண்கள் பெரும்பாலும் யோசிக்காமலே முடிவெடுக்கிறார்கள்; ஆனால் பெண்கள், அந்த சிக்கல்களை எவ்வாறு முறியடிப்பது என்று சிந்தித்து அதன் பிறகே முடிவெடுக்கிறார்கள்.
பேச்சாற்றல்
ஆண்களை விடப் பெண்களுக்குச் சிறந்த பேசும் திறன் உள்ளது, அவர்கள் தங்கள் சொற்களால் மற்றவர்களைக் கவரும் ஆற்றல் கொண்டவர்கள். அதனால்தான் குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் தந்தையின் பேச்சை விட தாயின் பேச்சைக் கேட்கிறார்கள், அதேபோல்தான் கணவர்களும் தங்கள் மனைவியின் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.



Click it and Unblock the Notifications

