Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
Carrot Coconut Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது நாளை காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தேங்காயும், கேரட்டும் உள்ளதா? அப்படி இருந்தால் ஒரு சூப்பரான ஸ்பெஷல் தேங்காய் சட்னியை செய்து விடலாம்.

இதுவரை நீங்கள் வழக்கமான தேங்காய் சட்னியைத்தான் இட்லி, தோசைக்கு செய்திருப்பீர்கள். ஆனால் இந்த தேங்காய் கேரட் சட்னி வழக்கமான தேங்காய் சட்னி போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த தேங்காய் கேரட் சட்னி வழக்கமான தேங்காய் சட்னியை விட ஆரோக்கியமானது. இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி உப்புமா, பொங்கல் போன்றவற்றுக்கும் சூப்பர் சைடிஷாக இருக்கும்.
உங்களுக்கு அட்டகாசமான கேரட் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பொடியாக நறுக்கிய கேரட் - 1/2 கப்
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- பச்சை மிளகாய் - 3
- பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 இன்ச்
- பொடியாக நறுக்கிய பூண்டு - 2 பல்
- சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- தேவையான அளவு உப்பு
- புளி விழுது - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- கடுகு - அரை ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- எண்ணெய் - ஸ்பூன்
செய்முறை:
- முதலில், ஒரு கடாயை மிதமான தீயில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும். அதனுடன் 1 ஸ்பூன் கடலைப்பருப்பைச் சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர், அந்தப் பருப்பை ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.
- பின்னர் அதே கடாயில் நறுக்கிய கேரட், மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதனுடன் அரை ஸ்பூன் சீரகத் தூள் சேர்த்து, மூடியால் மூடி வைக்கவும். சில நிமிடங்கள் வேகவிடவும்.
- சில நிமிடங்களுக்குப் பிறகு, கடாயில் உள்ள காய்கறிகளை ஒரு மிக்ஸி ஜாடிக்கு மாற்றி ஆறவிடவும். அடுத்து, துருவிய தேங்காய் மற்றும் வறுத்த கடலைப்பருப்பை அதில் சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை அனைத்தையும் அரைக்கவும்.
- பின்னர் புளி விழுது மற்றும் உப்பு சேர்த்து இன்னொரு முறை அரைக்கவும்.
- சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும். கடுகு, சீரகம் பொரியத் தொடங்கியதும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும்.
- கறிவேப்பிலை மொறுமொறுப்பாக மாறியதும், அத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து, அந்தத் தாளிப்புக் கலவையைச் சட்னியின் மீது ஊற்ரீ நன்றாகக் கிளறவும். அவ்வளவுதான் சூப்பரான கேரட் தேங்காய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications