Latest Updates
-
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Sun Transit In Gemini 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் ஜூன் 15 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். மேலும் இந்த மிதுன ராசியில் ஏற்கனவே புதன் பயணித்து வருகிறார்.

புதன் சொந்த ராசியில் இருப்பதால் பத்ரா ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்நிலையில் சூரிய பெயர்ச்சியால் அதே மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இப்படி மிதுன ராசிக்கு செல்லும் சூரியனால் ஒரே நேரத்தில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகியிருப்பது சற்று சிறப்பானது.
இந்த அரிய நிகழ்வின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்த இரட்டை ராஜயோகங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், நிதி நிலையில் உயர்வையும் காணவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய மற்றும் பத்ரா ராஜயோகங்கள் உருவாவதால், இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முடிவெடுக்கும் திறனும், உரையாடும் விதமும் மிகவும் திறம்பட இருப்பதால், சுற்றியிருப்பவர்களை ஈர்ப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய மற்றும் பத்ரா ராஜயோகங்கள் உருவாவதால், இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீண்ட காலமாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். அரசியலில் இருப்பவர்களுக்கு முக்கிய பதவி கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலை வெற்றிகரமாக முடிவடையும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய மற்றும் பத்ரா ராஜயோகங்கள் உருவாவதால், பணியிடத்தில் இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் பாராட்டப்படும். முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். குடும்ப தொழிலை செய்து வருபவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய மற்றும் பத்ரா ராஜயோகங்கள் உருவாவதால், இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வணிக பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் புதாதித்ய மற்றும் பத்ரா ராஜயோகங்கள் உருவாவதால், இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




