7 பிரபல அரசியல்வாதிகளின் அந்தரங்க காதல் விவகாரங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

காதல் ரஜினியின் பன்ச் வசனத்தை போன்றது, அது எப்போது வரும், எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வரும்.

ஆனால், கள்ளத்தனமாக வருவது தான் குற்றம். திருமணத்திற்கும் பிறகும் கூட வேறு காதல், காதல் உறவுகள் அனைவரின் வாழ்விலும் வருவது இயல்பு தான்.

ஆனால், திரை அல்லது அரசியல் பிரமுகர்கள் வாழ்வில் இது வந்துவிட்டால் உலக அளவில் பிரபலம் அடைந்துவிடும். அவர்களது பெயர் நார்நாராக கிழிந்துவிடும். அதிலும் இந்தியா போன்ற ஒருவருக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் இருக்கும் (இருந்த) நாட்டில் சொல்லவே வேண்டாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பில் கிளிண்டன்!

பில் கிளிண்டன்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் ஹிலாரி கிளிண்டனை மனதிருந்த போதிலும், வெள்ளை மாளிகையில் இன்டர்னாக வந்திருந்த 22 வயது மோனிகா லெவின்ஸ்கி எனும் பெண்ணுடன் காதல் வயப்பட்டார்.

வெள்ளை மாளிகையில், அமெரிக்க பிரதிநிதிகள் இதுக்குறித்து அரசியல் குற்றச்சாட்டுகள் எழுப்பினர். இந்த அவதூறு கடந்த 1998-ம் ஆண்டு நடந்தது.

நேரு!

நேரு!

ஜவஹர்லால் நேருவும், மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன் இடையே கூட சில கிசுகிசுக்கள் பரவ இருக்கின்றன. இதுக்குறித்து மவுண்ட்பேட்டனின் மகள் ஒரு கடிதத்தை வெளியிட்டார் என்றும் சில செய்திகள் கிடைக்க பெற்றிருக்கிறது.

ஆனால், இவர்கள் இருவரும் ஆன்மீக ரீதியான கருத்துக்களை தான் பகிர்ந்துக் கொண்டனரே தவிர, இவர்கள் மத்தியில் வேறு தவறான உறவு ஏதும் இல்லை என அறியப்படுகிறது.

ஜான். எப். கென்னடி!

ஜான். எப். கென்னடி!

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி மர்மமான முறையில் இறந்த அமெரிக்க நடிகை மர்லின் மன்றோவுடன் காதல் உறவில் இருந்தார் என அறியப்படுகிறது.

இவர்கள் இருவரும் 1962-ம் ஆண்டு நியூயார்க்கில் ஒரு டின்னரில் தான் முதன்முறை பார்த்துக் கொண்டனர். அந்த டின்னருக்கு மர்லின் மன்றோவை கென்னடி தான் அழைத்தார் என்றும் கூறப்படுகிறது.

பிரான்சுவா ஹாலண்ட்!

பிரான்சுவா ஹாலண்ட்!

பிரான்சுவா ஹாலண்ட் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி. இவரது சொந்த வாழ்வில் பல இன்னல்களை சந்தித்துள்ளார்.

இவர் மூன்று முறை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் ஜூலி காயட் உடன் காதல் உறவில் இருப்பதாக ஊடகங்கள் செய்திகளை கசிந்துள்ளன.

இவருக்கு பாரிஸில் ஒரு அப்பார்ட்மெண்ட் இருப்பதாகவும். அங்கு தான் இந்த 41 வயது நடிகையை சந்தித்து வருகிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்!

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்!

உலகின் பிரபல அக்ஷன் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர். அமெரிக்க ஆளுநரும் கூட. இவருக்கு மில்ட்ரெட் பாட்ரிசியா, எனும் இவரது பணிப்பெண்ணுடன் நீண்டகால காதல் உறவு இருப்பதாகவும், இதனால் இவர் தனது மனைவியை பிரிந்தார் என்றும் கூறப்படுகிறது.

திக்விஜய் சிங்!

திக்விஜய் சிங்!

திக்விஜய் சிங் டிவி தொகுப்பாளினி அம்ரிதா ராயுடன் காதல் உறவில் இருப்பதாக செய்திகள் வெளியாயின. ஆஷா சிங்கின் மரணத்திற்கு பிறகு இவர் இதை உறுதி செய்தார். ஆரம்பத்தில் இதனால் இவர் பல குற்றசாட்டை எதிர்கொண்டார். கடைசியில் இவர் ஆகஸ்ட், 2015-ல் திருமணம் செய்துக் கொண்டார்.

சசி தரூர்!

சசி தரூர்!

சசி தரூர் மற்றும் சுனந்தா புஷ்கரின் காதல் கதை இந்திய ஊடகத்தில் மிகவும் பிரபலம். சசி தரூர்-ன் கடைசி (மூன்றாவது) மனைவி சுனந்தாவின் மரணம் இன்றளவும் மர்மமாக தான் இருந்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Famous Politicians and Their Affairs

Famous Politicians and Their Affairs, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter