For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விவசாய புரட்சி ஏற்படுத்திய நம்மாழ்வார் பற்றிய தகவல்கள்!

|

இன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம். இந்தியாவின் முதுகெலும்பு உடைந்துவிடக் கூடாது என அயராது உழைத்த உயர்ந்த நெஞ்சம்.

சகாயம் ஐ.ஏ.எஸ் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!!

தமிழகத்தில் விவசாயத்தை, வேளாண்மையை பாதுகாக்க அரசையும் எதிர்த்து போராடிய பெருமகனார் தான் நமது பசுமைப் புரட்சியாளர் நம்மாழ்வார் ஐயா. பிறப்பில் இருந்து, இறப்பு வரை விவசாயமே மூச்சாக வாழ்ந்த மாமனிதர் நம்மாழ்வார்.

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!!

இனி, இவரை பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்தும், இவரது வரலாறு குறித்தும் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு

பிறப்பு

1938-ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் அருகாமையில் உள்ள இளங்காடு எனும் சிற்றூரில் பிறந்தவர் நம்மாழ்வார். இவரது தந்தை பெயர் கோவிந்தசாமி.

படிப்பு

படிப்பு

அண்ணாமலை பல்கலைகழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் நம்மாழ்வார். இவரது பணிகளை போற்றி, பெருமைப்படுத்தும் வகையில் காந்திகிராம பல்கலைகழகம் இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

போராட்டம்

போராட்டம்

பசுமைப் புரட்சியை ஆதரித்தும், விவசாய நிலங்கள் தொழில் மயமாக்கம் ஆவது, சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு அதிகரிப்பது போன்றவற்றை எதிர்த்தும் காரசாரமான விமர்சனங்களும், ஆக்கப் பூர்வமான மாற்று கருத்துகளையும் எடுத்துக் கூறியவர் நம்மாழ்வார் ஐயா.

 பசுமைப் புரட்சி

பசுமைப் புரட்சி

தமிழகத்தில் இயற்கை முறை வேளாண்மையை ஊக்குவித்தார். மரபணு மாற்றப்பட்ட விதைகளை எதிர்த்து, பாரம்பரிய விதைகளை வைத்து விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அனைவர் மத்தியிலும் விதைத்தார்.

பணிகள்

பணிகள்

1960-ம் ஆண்டு கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் ஆய்வு உதவியாளராக பணியாற்றினார். இங்கு பயனில்லா பணிகளுக்கு எதிர்த்து குரல் கொடுத்து மூன்று ஆண்டுகளிலேயே வெளியேறினார்.

பணிகள்

பணிகள்

1963-ம் ஆண்டு மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். இங்கும் மூன்று ஆண்டுகளில் தான் பணியாற்றினார் நம்மாழ்வார். பிறகு ஜப்பானிய சிந்தனையாளர் மசனோயு ஃபுக்குவோக்காவின் செயல்பாடு மற்றும் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார் ஐயா.

 எதிர்த்த போராட்டங்கள்!

எதிர்த்த போராட்டங்கள்!

  • பூச்சி கொல்லி பயன்பாடு
  • மீத்தேன் வாயு திட்டம், இந்தியா

  • மரபணு மாற்று சோதனைகள்

  • பி.டி. கத்திரிக்காய் அனுமதி

  • வெளிநாட்டு உணவு தானியங்கள் இறக்குமதி

  • விவசாய நிலங்களை வேறு வேலைகளுக்கு பயன்படுத்தல்
  • களப்பணிகள்

    களப்பணிகள்

    • சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்களை சீரமைப்பு செய்தது.
    • இந்தோனேசியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 30 பண்ணைகள் அமைத்தது.

    • 60-க்கும் மேற்பட்ட கரிம விவசாய (Organic) பயிற்சி மையங்களை தமிழகம் முழுவதும் அமைத்தது.

      மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து, உண்ணாவிரதம் இருந்தது.

    • மேலும், விவசாயம் மற்றும் வேளாண்மை குறித்து பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தியது.
    •  நம்மாழ்வாரின் படைப்புகள்

      நம்மாழ்வாரின் படைப்புகள்

      • தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
      • உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு
      • தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
      • நெல்லைக் காப்போம்

      • வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு

      • இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு

      • நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு

      • எந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு

      • பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு

      • நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு

      • மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
      • களை எடு கிழக்கு பதிப்பகம்
      •  நம்மாழ்வார் பெற்ற விருதுகள்

        நம்மாழ்வார் பெற்ற விருதுகள்

        • சுற்றுச் சூழல் சுடரொளி- தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
        • முனைவர் பட்டம் - காந்திகிராம பல்கலைக்கழகம்
        •  நம்மாழ்வார் உருவாக்கிய அமைப்புகள்

          நம்மாழ்வார் உருவாக்கிய அமைப்புகள்

          • 1979 - குடும்பம் அமைப்பு

          • 1990 - லிசா (LEISA Network)

          • 1990 - மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்

          • இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)

          • நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்

          • வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்

          • தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்
          • இறப்பு

            இறப்பு

            2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் நாள் அன்று, பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி எனும் சிற்றூர் பகுதியில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த பொது உடல்நல குறைவு காரணத்தால் இயற்கை எய்தினார் நம்மாழ்வார் ஐயா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Facts To Know About Agricultural Activist Nammalvar

Facts To Know About Agricultural Activist Nammalvar
Desktop Bottom Promotion