லிபோசக்ஷன் சிகிச்சை மூலம் உடல் எடை ககுறைத்த 8 நடிகர், நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நடிகர்கள் மட்டும் திடீரென தங்கள் கெட்டப்பை, உடல் அளவை ஏற்றி இறக்கி வியக்க வைப்பார்கள். இது ரசிகர்கள் மட்டுமில்லாமல் சாதாரண மக்களையும் பல சமயங்களில் வியப்பில் ஆழ்த்தும். ஆனால், எல்லா நடிகர்களும் உடல் எடை குறைக்க விக்ரம் போல கடினமாக உடலை வருத்திக்கொண்டு உழைப்பதில்லை.

Eight Celebs Who Reduced Their Weights Through Liposuction

ஆம், சிலர் சில சிகிச்சைகள் மேற்கொண்டும் தங்கள் உடல் எடையை எளிதாக குறைத்து விடுகிறார்கள். அப்படி, உடல் எடை குறைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய நடிகர், நடிகைகள் பற்றி இனிக் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர்

என்.டி.ஆர்-ன் பேரன் தான் ஜூனியர் என்.டி.ஆர். இவர் ஒரு நல்ல டான்சர். ஆரம்ப காலத்தில் இவர் மிகுந்த உடல் பருமனுடன் காணப்பட்டார்.

ஆனால், திடீரென இவர் ஸ்லிம் லுக்கிற்கு மாறினார். அதற்கு காரணம் லிபோசக்ஷன் எனும் உடல் எடை குறைப்பு சிகிச்சை தான்.

நயன்தாரா!

நயன்தாரா!

நடிகைகள் மத்தியில் பிளாஸ்டில் சர்ஜரி செய்து கொள்வது இயல்பாக காணப்படும். ஆனால், ஐயா, சந்திரமுகியில் இருந்த நயன் கஜினி காலக்கட்டத்தில் மிகவும் உடல் எடை கூடியிருந்தார்.

இதை இவர் லிபோசக்ஷன் தெரபி மூலமாக குறைத்துள்ளார். மேலும், தனது அழகை மெருகூட்ட பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்துள்ளார் நயன்தாரா.

மஞ்சு விஷ்ணு!

மஞ்சு விஷ்ணு!

தெலுங்கு திரையுலகின் நுழையும் போது மஞ்சு விஷ்ணு கொளுகொளுன்னு இருந்தார். ஆனால், அதன் பிறகு உடல் எடை குறைக்க காரணமாக இருந்தது லிபோசக்ஷன் சிகிச்சை முறைதான்.

ஆர்த்தி அகர்வால்!

ஆர்த்தி அகர்வால்!

உடல் எடை குறைத்து மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசையில் லிபோசக்ஷன் சிகிச்சை எடுத்துக் கொண்ட ஆர்த்தி அகர்வால், திடிரென ஏற்பட்ட இதய கோளாறால் லிபோசக்ஷன் சர்ஜரி செய்த ஒரு மாதத்திற்குள் பரிதாபமாக இறந்தார்.

இவரது இறப்புக்கு லிபோசக்ஷன் சர்ஜரி தான் காரணம் எனவும் பலர் கூறியிருந்தனர்.

ஹரி கிருஷ்ணா!

ஹரி கிருஷ்ணா!

பழம்பெரும் நடிகர் ஹரி கிருஷ்ணாவும் தனது மகன் ஜூனியர் என்.டி.ஆர் போல லிபோசக்ஷன் முறையில் உடல் எடை குறைத்திருக்கிறார். சிகிச்சைக்கு பிறகு இவர் கண்டுபிடிக்க முடியாதவண்ணம் மாறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ ஹரி!

ஸ்ரீ ஹரி!

தனது நடிப்பாற்றல் மூலம் தெலுங்கு திரையுலகில் நல்ல பெயர் பெற்ற ஸ்ரீ ஹரி பாடி பில்டிங் செய்து நல்ல உடற்கட்டு கொண்டிருந்தவர்.

இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவர் கல்லீரல் மற்றும் மஞ்சள் காமாலை காரணமாக இறந்தார். இவரும் லிபோசக்ஷன் சிகிச்சை எடுத்துக் கொண்டவர் தான்.

சுனில்!

சுனில்!

தெலுங்கு காமெடி நடிகர் சுனில் நகைச்சுவையில் பின்னி பெடலெடுப்பவர். இவருக்கும் ஹீரோ ஆசை வந்தது. சிக்ஸ் பேக் எல்லாம் வைத்தார். ஆனால், இவர் இந்த சிக்ஸ் பேக்கை வெறும் உடற் பயிற்சியால் மட்டும் பெறவில்லை. இதற்காக லிபோசக்ஷன் சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார்.

திவ்யவாணி!

திவ்யவாணி!

சினிமா மற்றும் சீரியல் நடிகையான திவ்யவாணி தென்னிந்தியா படங்களில் அதிகம் நடித்தவர். இவர் தனது உடல் பருமனை லிபோசக்ஷன் சிகிச்சை மூலம் தான் குறைத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eight Celebs Who Reduced Their Weights Through Liposuction

Eight Celebs Who Reduced Their Weights Through Liposuction
Story first published: Friday, November 18, 2016, 11:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter