சர்ச்சைக்குரிய விளம்பரங்களில் நடித்து வம்பை விலைக்கு வாங்கிக் கொண்ட இந்திய நட்சத்திரங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பிரபலங்கள் நடித்த பல விளம்பரங்கள் சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கியுள்ளன. விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட வாசகங்கள், விளம்பரத்தில் வந்த காட்சி அமைப்புகள், பொய் வாக்குறுதிகள் என விளம்பரதாரர்களை விட பல காரணங்களால் விளம்பரங்களில் நடித்த நட்சத்திரங்கள் தான் சர்ச்சைகளில் சிக்குகின்றனர்.

இதனாலேயே, சமீபத்தில் பொய்யான, போலியான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்கள் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும். இல்லையேல் சட்டம் தன் கடமையை செய்யும் என்ற வகையில் அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சானா கான்!

சானா கான்!

அமுல் மோச்சோ எனும் உள்ளாடை விளம்பரத்தில் தான் முதன் முதலில் நடிகை சானா கான் நடித்தார். அந்த விளம்பரத்தில் பயன்படுத்திய ஒற்றை வாசகம், இவருக்கு பெரும் தலைவலியை தந்தது. வெளியான சில நாட்களிலேயே தடை செய்யப்பட்டது.

மிலிந்த் சோமன் மற்றும் மது

மிலிந்த் சோமன் மற்றும் மது

சூப்பர் மாடல்கள் மிலிந்த் சோமன் மற்றும் மது இருவரும், கடந்த 1995-ம் ஆண்டு ஒரு ஷூ விளம்பரத்தில் வெற்றுடம்புடன் ஒரு பாம்பை ஏந்தியிருக்கும் படி விளம்பரம் ஒன்றுக்கு போஸ் கொடுத்தனர். இந்த விளம்பரத்திற்கு பலதரப்பட்ட மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

ரன்வீர் சிங்!

ரன்வீர் சிங்!

காண்டம் விளம்பரம் ஒன்றில் ரன்வீர் சிங் நடித்தது ரசிகர்கள் மத்தியிலேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அமிதாப் - சச்சின்!

அமிதாப் - சச்சின்!

அமிதாப் - சச்சின் குளிப்பான ஒரு விளம்பரத்தில் நீண்ட காலமாக நடித்து வந்தனர். ஒரு நிகழ்ச்சியில் சிறுமி ஒருவர் ஆரோக்கியமற்ற பானத்தின் விளம்பரத்தில் நீங்கள் நடிக்கிறீர்களே என கேட்ட கேள்வியால் அந்த குளிர்பான விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார் அமிதாப்.

ஷாருக்கான்!

ஷாருக்கான்!

ஆண்களுக்கான அழகு சாதான பொருள் விளம்பரத்தில் ஷாரூக் நடித்து வந்தார். "Dar and Beautiful" என்ற பெயரில் ஆன்லைனில் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் பலரும் ஷாரூக்கை தான் வறுத்தெடுத்தனர். இந்த பிரச்சாரம் அமீர் கான் ஆதரித்து என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷய் குமார்!

அக்ஷய் குமார்!

ஜீன்ஸ் பிராண்ட் ஃபேஷன் ஷோ ஒன்றில், ராம்ப் வாக்கில் அக்ஷய் குமார் நடந்து வரும் போது, தன் மனைவியை பலர் மத்தியில், ஜிப் அணிவிக்க கூறினார். இந்த நிகழ்வுக்கு பின்னர் அக்ஷய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கனா!

கங்கனா!

கங்கனா அரை நிர்வாணமாக ஜீன் பேன்ட் விளம்பரத்தில் நடித்தது பரபரப்பை உண்டாக்கியது.

பிபாஷா பாசு, டினோ மொரியா!

பிபாஷா பாசு, டினோ மொரியா!

பிபாஷா பாசு, டினோ மொரியா ஒரு உள்ளாடை விளம்பரத்தில் மிக கவர்ச்சியாக நடித்து பெரும் பரப்பரப்பை உண்டாக்கியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bollywood Stars Whose Controversial Advertisements Gave Them Headache

Bollywood Stars Whose Controversial Advertisements Gave Them Headache
Story first published: Thursday, September 1, 2016, 12:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter