Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
சியாச்சின் வீரன் ஹனுமந்தப்பா பற்றிய நெகிழ்ச்சியான தகவல்கள்!!
கடந்த 3-ம் தேதி சியாச்சினில் மெட்ராஸ் படைப்பிரிவை சேர்ந்த 10 நபர்கள் தங்கியிருந்த ராணுவச்சாவடி மீது பனிப்பாறை விழுந்ததில் வீரர்கள் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
இந்த பனிச்சரிவில் ஆறு நாட்கள் கடும் போராட்டத்திற்கு நடுவே உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஹனுமந்தப்பா.
ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய வைக்கும், இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!
இன்று நம்முடன் உயிருடன் இல்லை எனிலும் பல இராணுவ வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் எழுச்சியூட்டும் நபராக, வீரராக திகழ்கிறார் ஹன்மந்தப்பா.
இவர் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் தைரியமானவர், கடுமையான இடங்களுக்கு சென்று பணிபுரிய துணிந்து செயல்படக் கூடியவர் என பலர் கூறியுள்ளனர்.
இனி, சியாச்சின் வீரன் ஹனுமந்தப்பா பற்றிய நெகிழ்ச்சியூட்டும் தகவல்கள்...

பிழைத்த ஒரே நபர்
அது ஹனுமந்தப்பாவின்அதிர்ஷ்டமா, அவரது உடற்தகுதியா, மன தைரியமா என தெரியவில்லை. சியாச்சின் மலைச்சரிவில் சிக்கியவர்களில் தப்பி பிழைத்த ஒரே நபர் ஹனுமந்தப்பா தான்.

பிழைத்த ஒரே நபர்
அதிசயமாக உயிர் பிழைத்த ஹனுமந்தப்பாவிற்காக ஒட்டமொத்த தேசமும் வேண்டி வணங்க ஒன்றுப்பட்டது மக்கள் மத்தியில் இருக்கும் மனித நேயத்தை எடுத்துக் காட்டியது. அந்த கடும் குளிர்பனியில் அத்தனை நாட்கள் சிக்கி இருந்து மீண்டது நிஜமாகவே ஓர் அற்புதம் தான்.

மூன்று முறை நிராகரிக்கப்பட்டவர் ஹனுமந்தப்பா
இந்திய இராணுவத்தால் மூன்று முறை நிராகரிக்கப்பட்டவர் ஹனுமந்தப்பா. கர்நாடகாவின் பெடதூர் (Betadur) எனும் கிராமத்தை சேர்ந்தவர். மருத்துவம், உணவு, நீர், ஏன் போதியளவு ஆக்சிஜன் கூட இல்லாத இடத்தில் இருந்தபடி இந்தியாவில் பலருக்கு இன்று உத்வேகம் அளிக்க கூடிய முன்னோடியாக மாறி இருக்கிறார் ஹனுமந்தப்பா.

கடினமான இடங்களை தேர்வு செய்தார்
அமைதிகாக்கும் இடங்களில் இருப்பதற்கு பதிலாக, கடினமான இடங்களுக்கு சென்று பணிபுரியவே ஹனுமந்தப்பா தேர்வு செய்தார். கடந்த 2002-ம் ஆண்டு 19வது சென்னை ரெஜிமென்ட் பட்டாலியன் தேர்வானார் ஹனுமந்தப்பா.

வேலை செய்த இடங்கள்
பணியாற்றிய 13 ஆண்டுகளில், 10 வருடங்கள் கடினமான இடங்களில் தான் பணிபுரிந்தார் ஹனுமந்தப்பா. 2003 - 2006: ஜம்மு காஷ்மீர் எழுச்சி எதிர்ப்பு ஆப்ரேஷனிலும், 2008-2010 தீவிரவாதிகளை எதிர்த்த போராட்டத்திலும் பணிபுரிந்தவர்.

வீர மரணம்
ஹனுமந்தப்பா பிழைத்த செய்தி அவர் பிறந்த கிராமத்திற்கு வந்த போது, இவரது தந்தை கடவுள் ஹனுமனை நினைத்தே இவருக்கு இந்த பெயரை வைத்தேன் என்று கூறினார். இவரது இறப்பு ஓர் வீர மரணம் ஆகும்.

நிபுணர்கள் கருத்து
பனிச்சரிவில் 92% வரை புதைந்தவர்களை 15 நிமிடங்களில் மீட்டாள் தான் புத்துயிர் பெற வைக்க முடியும்.

நிபுணர்கள் கருத்து
இதுவரை இது போன்ற பனிச்சரிவில் 35 நிமிடங்களுக்கு மேல் சிக்கியவர்களில் 27% பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

நிபுணர்கள் கருத்து
பனிச்சரிவில் சிக்கியவர்கள் இறப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன்பே மூளை சாவு ஏற்பட்டுவிடும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நல்ல உடற்திறன் வல்லமை
நிமிடங்களில் உயிர் பிழைப்பதே கடினம் என்ற இடத்தில் ஆறு நாட்கள் வரை தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த ஹனுமந்தப்பாவை பற்றி நினைக்கையில் அவரது உடற்திறனும், மன தைரியமும் இதற்கு காரணம் என தெரிகிறது.

யோகா தெரிந்தவர்
இவர் தொடர்ந்து யோகா செய்து வந்தார். மற்றும் தனது உடன் பணிபுரியும் வீரர்களுக்கும் யோகா கற்றுகொடுத்து மூச்சு பயிற்சி அளித்துள்ளார்.

மூச்சு பயிற்சி தான் காரணம்
ஆறு நாட்கள் பனிச்சரிவில் சிக்கி மீண்டதற்கு இவரது யோகா பயிற்சி தான் முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆறு கிலோமீட்டர்
கர்நாடகாவில் தினமும் பள்ளிக்கு செல்ல ஆறு கிலோமீட்டர் நடந்தே செல்வாராம் ஹனுமந்தப்பா.

சிறுநீரகம் தர முன்வந்த பெண்
டெல்லி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹனுமந்தப்பாவுக்கு சிறுநீரகத்தை தானமாக தர நிதி பாண்டே என்ற இல்லத்தரசியும், ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏட்டும் முன் வந்தார்.



Click it and Unblock the Notifications
