Latest Updates
-
கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
இந்திய காவியங்களும், மணிரத்னமும்!
மகாபாரதமும், இராமாயணமும் இந்தியாவின் பெரும் காவியங்கள். எண்ணிலடங்காத பல நற்சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் கருத்துக்களை அள்ளி தெளித்து செல்லும் கதை களம் கொண்டவை இவை இரண்டும்.
ஓர் கவிஞனாக, கதை ஆசாரியராக, கலைஞானியாக, இயக்குனராக விரும்பும் நபர்கள் இந்த இரு காவியங்களையும் படிப்பது, நல்ல முதிர்ச்சியை தரும். இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு இந்தியாவின் முதன்மை இயக்குனர்களில் ஒருவராக திகழும் மணிரத்னம் அவர்கள்.
உண்மை சம்பவங்கள் மற்றும் காவியங்களில் நடந்த நிகழ்வுகளை கொண்டு அனைவரும் எளிமையாக உணர்வு ரீதியாக ஒன்றிப்போகும் படியும், புரிந்துக் கொள்ளும் படியும் படம் இயக்க தெரிந்த வித்தகன் மணிரத்னம்!

மகாபாரதம்!
மகாபாரதத்தில் பாண்டவர்களின் அன்னை குந்தி தேவி. இவருக்கு துர்வாச முனிவர் அளித்த வரத்தால் சூரியனிடம் இருந்து மகனாக கர்ணன் பிறந்தார். ஆனால், அப்போது குந்தி தேவி திருமணமாகாதவர் என்பதால் கர்ணனை, கனத்த மனமுடன் ஆற்றில் ஓர் பெட்டியில் வைத்து மிதக்கவிட்டுவிடுவார்.

தளபதி!
இது தான் தளபதி படத்தின் முதல் காட்சி! முதல் காட்சியாக மட்டுமின்றி, தளபதி திரைக்கதையே கர்ணன், துரியோதனன் மற்றும் அர்ஜுனனை சுற்றி பிணைக்கப்பட்டதாக தான் இருக்கும். துரியோதனனை எதிர்த்து தான் அர்ஜுனன் வந்தான். ஆனால், இடையே கர்ணன் நட்பிற்காக போரிட்டு மரணமடைந்தான்.

தளபதியில் மாற்றம்!
தளபதி கதையை எழுதும் போது மணிரத்னம் அவர்கள் முடிவில், துப்பாக்கி சூட்டில் ரஜினி இறப்பது போன்று தான் எழுதியதாகவும், ரசிகர்கள் மத்தியில் இது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்பதாலும், வணிக ரீதியாகவும் கருதி முடிவில், மம்முட்டி இறப்பது போன்று மணிரத்னம் காட்சி அமைத்தார் என கூறப்படுகிறது.

இராமாயணம்!
வனத்தில் சீதையின் அழகில் மயங்கி அவளை கடத்தி செல்வான் இராவணன். ஆயினும், விருப்பத்தை மட்டுமே கூறி அணுகினானே தவிர இராவணன் ஒரு போதும் சீதையிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சிக்கவில்லை என்று தான் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இராவணன் அவனது வாழ்வில் செய்த ஒரே தவறு மாற்றான் மனைவி மீது ஆசைப்பட்டது.

இராவணன்!
இராவணன் நற்குணம் படைத்தவன், எழுத்திலும், இசையிலும் பேரார்வம் மற்றும் திறமை வாய்ந்தவன். பெண்களையும் மதிக்க தெரிந்தவன், அதனால் தான் அவன் சீதையை ஒருபோதும் துன்புறுத்தவில்லை. இதையே தான் இராவணன் படத்திலும் மணிரத்னம் மிக சிறப்பாக இராவணன் என்பவனின் கதாப்பாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருப்பார்.

அழிவு!
என்னதான் நல்லவனாக இருப்பினும், காவியத்தில் வந்த ராவணன் மற்றும் இராவணன் படத்தில் தோன்றிய அக்கதாப்பாத்திரம் பெண்ணை கடத்தி தான் தங்கள் முடிவை தேடிக் கொண்டனர். மகாபாரதம், இராமாயணத்தில் வரும் நிகழ்வுகளை கதை களமாக கொண்டாலே நூற்றுக் கணக்கில் படங்களை இயக்கலாம். இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு இயக்குனர் மணிரத்னம்.

வரலாற்று நாயகன்!
காவியங்கள் மட்டுமின்றி, நமது வரலாற்றில் நடந்த உண்மை சம்பவங்களை கையாள்வதிலும், இயக்குனர் மணி ரத்னம் திறமை வாய்ந்தவர். அதற்கு அவரது படைப்புகளிலேயே நிறைய எடுத்துக்காட்டும் இருக்கின்றன.

உண்மை சம்பவங்களும், மணி ரத்னமும்!
1. நாயகன் - வரதராஜ முதலியார்;
2. குரு - திருபாய் அம்பானி ;
3. இருவர் - எம்.ஜி.ஆர் - கருணாநிதி;
4. பாம்பே - மும்பையில் 1992-93 ஆண்டு நடந்த வகுப்புவாத கலவரம்.



Click it and Unblock the Notifications