Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
உலகின் பார்வையில் இரண்டு வகையான இந்தியா!!!
இந்தியா என்றால் இப்படி தான். இந்திய மக்கள் இப்படி தான் அவர்களது வாழ்க்கையை வாழ்கிறார்கள், அவர்களது உணவு முறை வழக்கம் இப்படி தான் இருக்கும், உபசரிப்பு, வரவேற்பு இவ்வாறு தான் இருக்கும், இந்திய நாட்டின் செயல்பாடுகள் இவை தான் என உலக மக்கள் வட இந்தியாவை மட்டுமே கொண்டு இந்தியாவின் உருவம் இது தான் என்று சில தவறான பிம்பங்களை கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய வைக்கும், இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!
இல்லை, இந்தியா என்பது பரப்பளவில் மட்டுமின்றி மொழி, பாரம்பரியம், செயல்பாடுகள், பண்பாடுகள் என அனைத்திலும் பரந்துவிரிந்த நாடு என்பதை உலக மக்களில் சிலர் மட்டுமே அறிந்துள்ளனர். நம் நாட்டில் வளத்திற்கும் சரி, வாழ்வாதாரத்திற்கும் சரி பஞ்சமே இல்லை. ஆனால், அதை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்பது தான் கேள்வி குறி.
உங்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்திய இஸ்லாமியர்களைப் பற்றிய சில உண்மைகள்!
இனி, இந்தியாவின் மீதான உலக மக்கள் பார்வை மற்றும் உண்மை என உலகின் பார்வையில் இரண்டு வகையான இந்தியாவை பற்றி பார்க்கலாம்...

மொழி
உலக நாடுகளின் மத்தியில் இந்தியா முழுவதும் மக்கள் ஹிந்தி தான் பேசுகிறார்கள் என்ற ஓர் மனப்பான்மை இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் 120க்கும் மேற்ப்பட்ட முக்கிய மொழிகளும், 1500க்கும் மேற்பட்ட பேச்சு வழக்கு மொழிகளும் இருக்கின்றன. இவை அனைத்தும் இன்றளவும் புழக்கத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்பவெப்ப நிலை
இந்தியாவில் வெப்பம் அதிகம், இது சூடான நாடு என்ற கருத்து உலக மக்களிடையே இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஆறு சுற்றுசூழல் பருவங்கள் இருக்கின்றன என்பது தான் உண்மை.

கருப்பு நிறத்தில் இருப்பார்கள்
இந்தியர்கள் அனைவரும் கருப்பு அல்லது பழுப்பு (Brown) நிறத்தில் தான் இருப்பார்கள் என்ற எண்ணமும் இருக்கிறது. ஆனால் இதுவும் தவறான கருத்து, நம் நாட்டில் வெள்ளை, மாநிறம், பழுப்பு, கருப்பு என அனைத்து நிறங்களிலும் மக்கள் இருக்கிறர்கள்.

வாழ்க்கையை உணர முடியும்
உலக நாடுகளில் இருக்கும் மக்கள், இந்தியாவிற்கு வந்தால் வாழ்க்கையின் ஆழத்தை உணர முடியும், புரிதல் கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், இந்தியா ஆன்மீகத்தை வர்த்தகம் செய்யும் நாடில்லை என்பதை அவர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

வாஸ்கோடகாமா இந்தியாவை கண்டுபிடித்தார்
உலக மக்கள் இந்தியாவை வாஸ்கோடகாமா கண்டுபிடித்தார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் இந்தியாவை சென்றடைவதற்கான கடல் வழியை மட்டுமே கண்டுபிடித்தார், இந்தியாவை அல்ல.

உணவு
இந்தியர்கள் காரமான உணவை உட்கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் என்ற கருத்தும் உலக மக்களிடைய இருந்து வருகிறது. ஆனால், இது சில இடங்களில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

கேலியான ஆங்கில ஆச்சரிப்பு
இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பு கேலியாக இருக்கும் என்று உலக மக்கள் நினைப்பதுண்டு. ஆனால், இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பு தான் புரிந்துக் கொள்ள மிகவும் எளிமையானது.

நமஸ்தே
இந்தியர்கள் அனைவரும் "நமஸ்தே" என்று கூறித்தான் வரவேற்ப்பு செய்வார்கள் என்ற கருத்தும் உலக மக்களிடையே இருக்கிறது. ஆனால், பல முறைகளில் இதுவும் ஒன்று என்பது தான் உண்மை.



Click it and Unblock the Notifications