Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
உலக வரலாற்றில் பெரும் மாற்றங்கள் மற்றும் புரட்சி ஏற்படுத்திய கடிதங்கள்!!!
தற்போதைய வாட்ஸ்-அப் யுகத்தில் நாம் நேற்றைய ஃபேஸ்புக் சாட், ஈ - மெயில்களையே மறந்து வருகிறோம். இதில் இன்னும் எத்தனை பேருக்கு தந்தி, கடிதங்கள் போன்றவை நினைவில் இருக்கப் போகிறது. ஆனால், வரலாற்றில் பெரும் முக்கிய நிகழ்வுகளுக்கும், சில புரட்சிகளுக்கும் காரணமாக சில கடிந்தங்கள் இருந்திருக்கின்றன.
உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள் - திடுக் நடுக் தகவல்கள்!!!
இந்த கடிதங்களில், ஐன்ஸ்டீன், ஆபிரகாம் லிங்கன், காந்திஜி, மார்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றவர்களது கடிதங்களும். இந்திய விடுதலைக்கு காரணமாக அமைந்த கடிதம் மற்றும் முதலாம் உலகப் போர் மூண்டதற்கு காரணமாக இருந்த கடிதம் போன்றவற்றை பற்றி கூறப்பட்டுள்ளது....
உலகில் வன்முறை தலைவிரித்தாடும் அதிபயங்கர நாடுகள் - 2015

அணுகுண்டு சக்தி குறித்து ஐன்ஸ்டீன் கடிதம்
1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் நாள், அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஐன்ஸ்டீன் அனுப்பிய கடிதம். இந்த கடிதத்தில், "ஜெர்மனியின் நாசி படையினர் அணு ஆயுதங்களை போரில் உபயோகிக்க போகின்றனர். ஓர் சிறிய படகில் ஏற்றி வந்து நமது துறைமுகத்தில் வெடிக்க செய்தால் கூட, ஒட்டுமொத்த துறைமுகமும் சின்னாபின்னமாகிவிடும். எனவே, நீங்கள் முந்திக்கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்." இந்த கடிதத்தின் மூலமாக அமெரிக்க நாசி படையினருக்கு முன்பே அணுகுண்டுகளை கையாள முனைந்தது. இதற்கான மன்ஹாட்டன் ப்ராஜெக்ட் தொடக்கப்பட்டது. இதற்கு காரணமாக இருந்தவர் ஐன்ஸ்டீன்.

ஆபிரகாம் லிங்கன் தாடியின் இரகசியம்
1860ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாள் கிரேஸ் டேபெல் எனும் 11 வயது சிறுமி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனுக்கு ஓர் கடிதம் எழுதினாள். அதில்,"பெண்களுக்கு தாடி வைத்திருப்பவர்களை பிடிக்கும், உங்கள் முகம் தாடி இருப்பதால் தான் நன்றாக இருக்கிறது. மற்றும் பெண்கள் அவர்களது கணவர்களையும் உங்களுக்கு ஓட்டு போட கட்டாயப்படுத்தினர். இதனால் தான் நீங்கள் ஜனாதிபதி ஆக முடிந்தது." என்று குறும்பாக எழுதியிருந்தார். இதன் காரணமாக தனது தாடியை நிரந்தரமாக வைத்துக் கொண்டார் லிங்கன் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்திய விடுதலைக்காக காந்தி எழுதிய கடிதம்
1943ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் நாள் மத்திய செயலாளர் அலுவலகத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் (வீட்டு சிறையில் இருந்த போது), "நான் மிகவும் பெரிய இடத்தில் இருப்பதாக உணர்கிறேன், என்னை சுற்றி எதற்கு இவ்வளவு பாதுகாவலர்கள். இதனால் தேவையின்றி நிறைய மக்களின் வரிப்பணம் செலவாகிறது. எனவே, என்னை எந்த சிறையில் அடைத்து வைத்தாலும், நான் அங்கிருக்க தயாராக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். காந்தியின் இந்த அகிம்சை வழிதான் இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டது.

மார்டின் லூதர் கிங்கின் குடியுரிமைக்கான கடிதம்
கடந்த 1963ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் பொது மக்களுக்கு மார்டின் லூதர் கிங் ஜூனியர் எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தது, " யாரேனும் ஒருவர் கேட்கலாம், எப்படி சட்டத்தை உடைத்து மற்றவரை மதிக்க முடியும் என்று. இங்கு இரண்டு வகையான சட்டங்கள் இருக்கின்றன, ஒன்று நியாயமான சட்டம், மற்றொன்று அநியாயமான சட்டம், நான் அகஸ்டினின் அநியாய சட்டத்தை சட்டமாகவே ஒப்புக்கொள்ள மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் தான் மனித உரிமை இயக்கம் பிறக்க ஊன்றுகோலாக இருந்தது.

அமெரிக்காவிற்கு சுதந்திரம் கொடுத்த கடிதம்
1776ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் நாள் கான்டினென்டல் காங்கிரஸ், இங்கிலாந்து அரசர் கிங் ஜார்ஜிற்கு எழுதிய கடிதத்தில், "மனிதர்கள் அனைவரும் சமமாக வாழ்வதற்காக தான் படைக்கப்பட்டுள்ளனர். இதை எந்த சட்டமும், அரசும் அந்நியப்படுத்தமுடியாத. வாழ்வு, சுதந்திரம், மகிழ்ச்சி அனைத்தும் மக்களின் பொதுவுடமை" என்று கூறியிருந்தனர். இந்த கடிதத்தின் விளைவாக தான் இன்றைய அமெரிக்காவிற்கு சுதந்திரம் பிறந்தது.

ரிச்சர்ட் நிக்சன் ராஜினாமா கடிதம்
1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில். " நான் அமெரிக்க ஜனாதிபதி எனும் பதிவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க வரலாற்றிலேயே வாட்டர்கேட் எனும் ஊழலின் (Water Scandal) காரணமாக பதவி விலகியே ஒரே ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் தான் என்று கூறப்படுகிறது.

மூன்றான் கிங் ஹென்றியின் புரட்சிகரமான காதல் கடிதம்
1527ஆம் ஆண்டு கிங் ஹென்றி அன் (Ann) என்பவருக்கு எழுதிய கடிதத்தில், "உன் அன்பின் ஆதாரம் மிக பெரியது, அது என்னை உண்மையாக இருக்க வற்புறுத்துகிறது. உனக்கு நேர்மையாக இருக்கவும், காதலாக இருக்கவும் தூண்ட செய்கிறது." என்று கூறியிருந்தார். அந்த நேரத்தில் அவர் கேத்தரின் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மற்றும் அன் (Ann) கிங் ஹென்றியின் ஆறு மனைவிகளில் இரண்டாம் மனைவி ஆவர்.

முதலாம் உலகப்போரில் அமெரிக்காவை இணைத்த கடிதம்
1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் நாள் ஆர்தர் ஜிம்மெர்மன் மெக்ஸிகோவின் ஜெர்மன் தூதருக்கு ஓர் கடிதம் எழுதியிருந்தார். அதில், "நாங்கள் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக போர் தொடுக்க உத்தேசித்து வருகிறோம். அமெரிக்க இன்னும் நடுநிலையில் தான் உள்ளது, ஒரு வேளை இந்த முயற்சி வெற்றிப் பெறாவிட்டால் , மெக்ஸிகோவின் கூட்டணியோடு கைக்கோர்க்கலாம்." என்பது போல குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் ஆங்கிலேயர்களால் இடையில் கையாளப்பட்டு மார்ச் மாதம் முதல் நாள் ஊடகத்தில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாகவே ஏப்ரல் ஆறாம் தேதி அமேரிக்கா ஜெர்மனியோடு போரிடப்போவதாய் அறிக்கை வெளியிட்டது.



Click it and Unblock the Notifications