Latest Updates
-
கோடைகாலத்தில் எடையை புயல் வேகத்தில் குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள் -
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க! -
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க! -
தமிழ்நாட்டில் இந்த கிராமத்திற்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லையாம் - இங்க அப்படி என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
வாஸ்து படி உங்கள் பாத்ரூமில் ஒரு கிண்ணம் உப்பை வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
தயிர் Vs. மோர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம்! -
சூப்பரான செட்டிநாடு பச்சை சுண்டக்காய் கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
வரகரிசி கஞ்சியும், முட்டை ஆம்லெட்டும் - எப்படி செய்றது-ன்னு பாத்து இந்த காம்போவை ட்ரை பண்ணி பாருங்க!
புராணங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அறிவியலா? கட்டுக்கதையா? - ஓர் பார்வை!!
நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கும், அதே தருணத்தில் "இதெல்லா நம்புற மாதிரியா இருக்கு.." என்று கொஞ்சம் யோசிக்கவும் வைக்கிறது. ஏனெனில் நாம் வாழும் இந்த அறிவியல் உலகம் அனைத்திற்கும் சான்றும், செயல்முறை விளக்கமும் கேட்கின்றது.
பெர்முடா முக்கோணத்தை பற்றிய அதிர்ச்சியான தகவல்கள்!!!
மறுபிறவி, தேவலோகம், சொர்க்கம் / நரகம், கடல் கன்னிகள், ஏலியன், பெர்முடா முக்கோணம், பேய் பிசாசுகள், உலகத்தின் அழிவு, கடவுள் இருக்கிறாரா? இல்லையா? பல விஷயங்களுக்கு இன்று வரை தெளிவான அறிவயல் கூற்றுகளோ, கோப்புகளோ இல்லை.
ஏலியன்கள் வாழும் கிரகங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட கோள்கள்!!!
சிலவற்றை ஆன்மிகம் ஏற்கிறது, சிலவற்றை அறிவியல் ஏற்கிறது. ஆனால், முழுமையாக இதில் எவையெல்லாம் அறிவியல், எவையெல்லாம் மூடநம்பிக்கை என்ற தெளிவு நம்மிடமும் இல்லை, அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடமும் இல்லை.... ஆய்வுகளும், ஆராய்சிகளும் மட்டுமே தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன.....

பேய், பிசாசுகள்
தமிழ் படங்களின் சமீபத்திய "ஹிட்டு" பேய், பிசாசுகள்!! உங்கள் நண்பர்களும், உறவினர்களும் கூட பேய்களை கண்டதாக உங்களிடம் கூறியிருக்கலாம். இறந்த உடல்கள் எழுந்து வருவது எல்லாம் படங்களில் மட்டும் தான் நடக்கும். ஆனால், ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக அறிவியல் ரீதியாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதன் இறக்கும் போதும் அவனது உடலில் இருந்து 21 கிராம் எடை குறைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதைப் பற்றி " தி 21 கிராம் தியரி" என்றே ஓர் பிரிவு உள்ளது.

பெர்முடா முக்கோணம்
இன்று வரைஅறிவியல் அறிஞர்களை திக்குமுக்காட வைக்கும் ஓர் இடம் என்றால் அது பெர்முடா முக்கோணம் தான். அந்த கடல் பகுதியில் நடக்கும் விசித்திரத்தை இன்றுவரை கண்டறிய முடியவில்லை. அந்த இடத்தல் நீர் வாயுலாகவும், வான் வாயுலாகவும் கடக்கும் எந்த கப்பலும், விமானமும் தொலைந்து போவது தான் அதிர்ச்சிக்குரிய விஷயமாகும்.

இறப்பிற்கு பின்னான வாழ்க்கை
இங்கு தான் சொர்க்கம், நரகம் என்ற பேச்சு எழுகிறது. இறந்த பிறகு நமது உடல் மண்ணோடு சிதைந்து போகிறது. ஆனால், ஆன்மா எங்கு செல்கிறது? நமது எண்ணங்களுக்கு ஓர் சக்தி இருக்கிறது. நீங்கள் தினமும் நினைக்கும் ஓர் எண்ணம், அது நிறைவடைய உதவும். உண்மையில் உங்களை அச்செயலை செய்து முடிக்க தூண்டும். அந்த தூண்டுதல் தான் உங்களை வெற்றியடையச் செய்கிறது. அப்போது, அந்த எண்ணங்களும், ஆன்மாவும் வாழ்ந்துக் கொண்டிருக்க சாத்தியம் இருக்கிறதா? ("மாசு" படம் மாதிரியே இருக்கே..)

ஏலியன்
ஆங்கிலப் படத்தில் மட்டுமே நாம் பெரும்பாலும் கண்ட இந்த ஏலியன்கள் உண்மையிலேயே பிரபஞ்சத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக அறிவியல் ரீதியாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போல பல சம்பவங்களும் நமது உலகில் நடந்துள்ளது.

கடவுள் இருக்கிறாரா?
நாத்திகம், ஆத்திகம் என பலர் இன்று சண்டையிட்டுக் கொண்டிருப்பதற்கு காரணமே கடவுளாகிய இவர் ஒருவர் மட்டும் தான். கோவில் = கோ + இல், அரசனின் இல்லம் என்று பொருள், கடவுள் = கடவு + உள், உள்ளத்தை கடந்து செல்லுதல் என்று பொருள். இது போல கடவுள் சார்ந்த பெயர்களை பிரித்து உண்மை பொருள் உணரும் போது அது அரசர்களையும், நமது உள்ளங்களையும் பற்றியும் தான் பொருள் தருகிறது. ஆயினும், பிரபஞ்சத்தின் உருவாக்கம் என்ற கேள்விக்கு பதில், நம்மை மிஞ்சிய சக்தி ஏதோ என்று இருக்கிறது என்று நம்ப வைக்கிறது!!!

உலக அழிவு
உலகின் அழிவிற்கும் நமது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஓர் வயதைக் குறித்து வைத்துள்ளனர். ஆனால், அது பல கோடியைத் தாண்டுகிறது. இந்நாள் வரை உலகில் தோன்றிய உயிரினங்கள் தான் அழிந்திருக்கிறதே தவிர, உலகம் அழிந்தது இல்லை என்பது தான் நாம் அனைவரும் கண்ட, கண்டுகொண்டிருக்கும் உண்மை.

மறுப்பிறப்பு
சில சமயங்களில் வரமாகவும், சில சமயங்களில் சாபமாகவும் நமது புராணங்களில் கூறப்பட்டிருக்கும் விஷயம் தான் மறுஜென்மம். மனோத்தத்துவ முறையில் பல நோயாளிகள் தாங்கள் தங்களது முந்தைய ஜென்மத்தை உணர்வதாக கூறியிருப்பது போன்றவை தான் மறுபிறப்பு என்று ஒன்று இருக்கலாமோ என்று என்ன வைக்கிறது. மற்றபடி மறுப்பிறப்பு பற்றிய அறிவியல் சார்ந்த எந்த கூற்றுகளும் இல்லை.

கடல் கன்னிகள்
இந்திய புராணங்களில் அதிசயிக்க வைக்கும் சில விஷயங்களில் ஒன்று, கடல் கன்னிகள்!! இரண்டு வருடங்களுக்கு முன்பு 2012 ஆண்டு "அனிமல் பிளானெட்" (Animal Planet) தொலைகாட்சியில் கடல் கன்னிகளைப் பற்றிய தகவல்கள் ஒளிப்பரப்பப்பட்டன. ஆனால், இறுதியில் அது வெறும் தொன்மையான (Myths) விஷயங்கள் தான் என்றுக் கூறப்பட்டது. முகப்புத்தகத்தில் கூட அவ்வப்போது கடல் கன்னிகளின் எலும்புக் கூடுகள் என்று கூட புகைப்படங்கள் பதிவு செய்யப் படுகின்றன. ஆனால், எதற்குமே, தெளிவான சான்றுகள் இல்லை என்பதே உண்மை.

காட்டேரிகள்
ஆங்கிலத்தில் "வேம்பையர்" (Vampire) என்றுக் கூறப்படும் காட்டேரிகளும் வெறும் கட்டுக்கதையாக தான் கருதப்படுகிறது. அறிவியல் சார்ந்த எந்த சான்றுகளும் இல்லை. ஆனால், காட்டேரிகள் பற்றய அனைத்து படங்களும், சீரியல்களும் தமிழகத்தில் இருந்து ஹாலிவுட் வரை வெற்றிப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











