Latest Updates
-
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்..
கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ரமலான் நோன்பின் விதிமுறைகள்!!!
நோன்பு இருப்பது என்பது அல்லாஹ்வின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து, அல்லாஹ்வின் மீது அதிக ஈடுபாடு கொண்டு, நேர்மையை பின்பற்றி, அல்லாஹ்வின் கருணையைப் பெற மேற்கொள்ளும் ஒரு செயல். இது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையும் கூட.
மேலும் ரமலான் நோன்பை ஒவ்வொரு முஸ்லீமும் மேற்கொள்ளும் போது, அவரது மனம் மற்றும் உடல் நன்கு வலிமை அடையும். அதுமட்டுமல்லாமல், பருமடைந்த ஒவ்வொரு முஸ்லீமும் ரமலான் நோன்பு இருக்க வேண்டியது கடமையும் கூட.
நோன்பு இருக்கும் நேரத்தில் நம்மை அறியாமல் ஒருசில விஷயங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. அந்த விஷயங்களால் தவற செய்துவிட்டோமோ என பலரும் எண்ணலாம். ஆனால் ரமலான் நோன்பை மேற்கொள்வதற்கு ஒருசில விதிமுறைகள் உள்ளன. அதை சற்றுப் படித்துப் பாருங்கள்.

சஹர்
நோன்பை ஆரம்பிப்பதற்கும் முறை உள்ளது. எப்போதும் நோன்பை எதுவும் சாப்பிடாமல் ஆரம்பிக்கக்கூடாது. இதனால் அந்த நோன்பு செல்லாது. ஆகவே நோன்பு ஆரம்பிக்கும் முன் சகர் உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும். அதுவும் ஃபஜர் தொழுகை ஆரம்பிக்கும் முன் உணவை உட்கொண்டு விட வேண்டும்.

இஃப்தார்
எப்படி நோன்பு ஆரம்பிக்கும் முன் உணவை உட்கொள்ள வேண்டுமோ, அதேப்போல் சூரியன் அஸ்தமனம் ஆன உடனேயே தாமதப்படுத்தாமல் நோன்பை முடிக்க வேண்டும். இதுவும் முக்கியமான ஒன்று.

சாப்பிடுவது அல்லது குடிப்பது
நோன்பு இருக்கும் போது தெரியாமல் தண்ணீரோ அல்லது உணவையோ உட்கொண்டால், எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் நோக்கத்துடன் உணவையோ அல்லது நீரையோ குடித்தால், அது செல்லாமல் நோன்பை முறித்துவிடும்.

வாந்தி
நோன்பு காலத்தில் வாந்தி வந்தால், எந்த ஒரு குறையும் இல்லை. வாந்தி எடுத்த பின், மீண்டும் நோன்பை ஆரம்பிக்கலாம்.

குளிப்பது
நோன்பு காலத்தில் குளிப்பதால் எந்த ஒரு தவறும் இல்லை. நீங்கள் ஒரு வேளை அதிக வெப்பத்தை உணர்ந்தாலோ அல்லது அதிக தாகத்தை உணர்ந்தாலோ, குளியலை மேற்கொள்ளலாம்.

உடலுறவு
நோன்பின் போது உடலுறவில் ஈடுபட்டால், தொடர்ந்து 60 நாட்கள் நோன்பை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், 60 ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும்.

மாதவிடாய்
நோன்பு இருக்கும் காலத்தில் மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்துவிட்டால், நோன்பை துறக்க வேண்டும். மேலும் சிறு துளி தான் இரத்தக்கசிவு ஏற்படுகிறது என்று கூட நோன்பை மேற்கொள்ளக்கூடாது. மேலும் மாதவிடாய் முற்றிலும் நின்ற பின்னர் மீண்டும் நோன்பை ஆரம்பிக்கலாம்.

உணவை சுவைத்தல்
குடும்பத்திற்கு உணவை சமைக்கும் போது, உணவின் சுவையை சோதித்துப் பார்க்கலாம். இருப்பினும் அப்படி சோதிக்கையில் அதனை விழுங்கக்கூடாது. மேலும் உணவின் சுவையை சோதிக்கும் போது, உங்கள் எண்ணம் அதனை விழுங்க வேண்டுமென்று இருக்கக்கூடாது. முக்கியமாக சுவை பார்த்த பின்னர், வாயை நீரால் உடனே கழுவ வேண்டும்.

முத்தம்
நோன்பு இருக்கும் போது, துணைக்கு முத்தம் கொடுக்க அனுமதி உண்டு. ஆனால் உடலுறவில் ஈடுபடக்கூடாது.

ஊசி போட்டுக் கொள்வது
உடல்நிலை சரியில்லாவிட்டால், அதனை சரிசெய்ய மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும் தான். ஆனால் நோன்பு இருக்கும் போது, மாத்திரைக்கு பதிலாக ஊசிப் போட்டுக் கொள்ளலாம். இதனால் நோன்பிற்கு எவ்வித பாதிப்பும் நேராது.

உடலுறவிற்கு பின் குளியல்
இரவில் துணையுடன் உடலுறவில் ஈடுபட்டால், காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, சஹர் உணவை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது நீங்கள் அசுத்தமாக இருப்பதை உணர்த்தும்.



Click it and Unblock the Notifications
