Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
பெரும்பாலும் யாரும் அறியாத ஆண், பெண் உடல் கூறு சார்ந்த தகவல்கள்!!!
பெரும்பாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களது மார்பகங்கள், பிறப்புறுப்பு மற்றும் கர்பப்பை போன்ற சில பாகங்கள் தான் உடல் கூறு வகையில் மாறுப்பட்டிருக்கிறது என்பது மட்டும் தான் நாம் அறிந்தது.
இடுப்பு பகுதி ஆண்களை விட பெண்களுக்கு பெரிது என்பது இன்னும் கொஞ்சம் பேர் அறிந்து வைத்திருப்பர்கள். ஆனால், நாம் வியக்கும் வகையில், பல உடல் உறுப்புகள், பகுதிகள் ஆண், பெண் இருபாலருக்கும் மத்தியில் வேறுப்பட்டு இருக்கிறது.
இந்த விஷயங்கள் பெரும்பாலும் மருத்துவர்கள் மட்டுமே அறிந்தது ஆகும். இனி, நீங்கள் அறிந்துக்கொள்ள.....

இரத்தத்தில் நீரளவு
பெண்களின் இரத்தத்தில் நீரின் அளவு அதிகமாக இருக்குமாம். இதனால் 20% சிவப்பு இரத்த அணுக்கள் குறைவாக இருக்குமாம். சிவப்பு இரத்த அணுக்கள் தான் உடலுக்கு ஆக்ஸிஜன் வழங்குகிறது. இதனால் தான் கூட்ட நெரிசல் அதிகமான இடங்களில் மற்றும் பொதுவாகவே பெண்களுக்கு அதிகமாக மயக்கம் அடைகின்றனர்.

நுரையீரல்
ஆண்களை விட பெண்களுக்கு நுரையீரல் சிறியதாக தான் இருக்குமாம். அதே போல, நுரையீரல் கொள்ளளவும், 30% ஆண்களை விட சிறியதாக தான் இருக்கிறது பெண்களுக்கு.

உற்சாகம்
ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாய் உற்சாகம் அடைகிறார்களாம். காரணம், அவர்களது உடலில் இருக்கும் ஓர் தனித்தன்மைக் கொண்ட குரோமசோமின் ஆற்றல் என்று கூறப்படுகிறது.

அதிக இறப்பு
நோய் காரணமாக பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக இறக்கின்றனர். மார்பக புற்றுநோய், பெண் பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் கட்டிகள் ஆகிய இந்த மூன்று நோய்களை தவிர மற்ற அனைத்து நோய்களின் காரணமாகவும், பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக மரணமடைகின்றனர்.

வெயிலை தாங்கும் தன்மை
ஆண்களை விட அதிகமாக வெயிலை தாங்கும் திறன் பெண்களுக்கு உள்ளதாம். இதற்கு காரணம், அவர்களது வளர்சிதை மாற்றத்தின் திறன் என்று கூறப்படுகிறது.

ஆண்களை விட பெரிய உறுப்புகள்
ஆண்களை விட பெண்களுக்கு வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால் போன்ற உறுப்புக்கள் பெரியதாக இருக்கும்.

முரட்டுத்தன்மை
பொதுவாக, பெண்களை விட ஆண்கள் 50% முரட்டுத்தன்மை அதிகமானவர்கள்.

இதயத்துடிப்பு
ஆண்களை விட பெண்களின் இதயம் அதிகமாய் துடிக்குமாம். ஆண்களுக்கு 72 என்றிருக்கும் பட்சத்தில், பெண்களுக்கு 80 என்ற கணக்கில் இருக்கும் என்கிறது மருத்துவம்.

பெண்களின் உடலமைப்பு
பெண்களுக்கு தலை சிறியதாக இருக்கும், ஆனால் முகம் அகலமாக இருக்கும் ,கால்கள் சிறியது, தண்டுவடம் பெரியது. மற்றும் ஆண்களின் பற்களை விட விரைவாக பெண்களின் பற்கள் விழுந்துவிடுமாம்.

ஒவ்வொரு செல்லிலும் வித்தியாசம்
ஆண், பெண்ணுக்கு மத்தியில் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் வித்தியாசமாக தான் இருக்குமாம். இதற்கு காரணம் வித்தியாசமான குரோமசோம் வடிவம் தான் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
