ஒவ்வொரு இந்தியனும் தலை வணங்க வேண்டிய இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு வாழ்ந்து வந்த இந்திய நாட்டை வியர்வை மற்றும் செந்நீர் சிந்தி, இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் தலை வணங்க வேண்டியது மிகவும் முக்கியம். அத்தகைய இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கலந்து கொண்டு, அவர்களுள் பலர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

அப்படி நம் நாடு சுதந்திரம் அடைய அரும்பாடு பட்ட பெண்களை நினைவுகூறும் வகையில், தமிழ் போல்ட் ஸ்கை ஒவ்வொரு இந்தியனும் தலை வணங்க வேண்டிய சில இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனைகளைப் பட்டியலிட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இராணி வேலு நாச்சியார்

இராணி வேலு நாச்சியார்

தமிழ்நாட்டின் சிவகங்கை பகுதியின் ராணியான வேலுநாச்சியார் 18 ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடினார். மேலும் முதன் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக முதலில் ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண் விடுதலைப் போராட்ட தலைவியும் இவரேயாவார். இவர் பல மொழிகளைக் கற்றவர். இவரது பெற்றோர் இவரை ஆண் வாரிசு போன்றே வளர்த்தனர்.

கிட்டூர் ராணி சென்னம்மா

கிட்டூர் ராணி சென்னம்மா

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் ராணி சென்னம்மா. கர்நாடக மாநிலத்தில் பிரிட்டிஷ்காரகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய இவர், இறுதியில் தன் உயிரை இழந்தார். மேலும் இன்றளவும், கர்நாடகத்தில் துணிச்சலான மற்றும் வீரப் பெண்மணிகளுள் ஒருவராக திகழ்கிறார்.

ராணி லட்சுமிபாய்

ராணி லட்சுமிபாய்

ஜான்சி நாட்டின் ராணியான இவர் இந்திய கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக பெரும் படைகளைத் திரட்டி, விடுதலைப் போரில் தீவிரமாக இறங்கினார். மேலும் இந்திய விடுதலைப் போராட்ட பெண்மணிகளுள் துணிச்சல்மிக்க சிறந்த பெண்மணிகளுள் ஒருவராகவும் திகழ்கிறார்.

ஜானகி ஆதி நாகப்பன்

ஜானகி ஆதி நாகப்பன்

மலேசியாவைச் சேர்ந்த இவர், இந்திய விடுதலைக்காக சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி லட்சுமிபாய் படையின் துணை தளபதியாக இருந்து, இந்தியா பர்மா எல்லையில் துப்பாக்கி ஏந்திய போர் வீராங்கனையாக இருந்தவர். மேலும் இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசிய பெண்மணி இவரே ஆவார்.

 சரோஜினி நாயுடு

சரோஜினி நாயுடு

இந்திய சுதந்திர போராட்டத்தில் தேச பிதாவான மகாத்மா காந்தியுடன் தண்டி யாத்திரையில் ஈடுபட்டவர் தான் சரோஜினி நாயுடு. இவர் சிறந்த எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர். மேலும் உத்திர பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும் இவரே ஆவார். இவரது பிறந்த நாளைத் தான் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம்.

விஜயலட்சுமி பண்டிட்

விஜயலட்சுமி பண்டிட்

ஜவஹர்லால் நேருவின் சகோதரியான இவருக்கும், நாட்டுப்பற்று அதிகம். நம் நாட்டில் ஒரு ஆண்கள் தொண்டாற்றிய பின், ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் ஜனாதிபதியானார். இவர் மிகவும் சிறந்த எழுத்தாளர், ராஜதந்திரி, அரசியல்வாதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Women Freedom Fighters We Salute

Here are some of the famous indian women freedom fighters we salute. Take a look...
Story first published: Tuesday, May 19, 2015, 16:04 [IST]
Subscribe Newsletter