சீதா தேவியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில அற்புத தகவல்கள்!!!

By Ashok CR

ஜனக் ராஜாவின் வளர்ப்பு மகளான சீதா தேவி ராம பிரானின் மனைவியாவார். இவர் தான் மகரிஷி வால்மீகியால் எழுதப்பட்ட ஹிந்து மத காவியமான ராமாயணத்தின் கதாநாயகி. இவர் உலக சௌகரியங்களுக்குக் காரணமாக உள்ள லஷ்மி தேவியின் அவதாரம் என கூறப்பட்டாலும் கூட, தன் கணவனைப் பின் தொடர்ந்து, சீதா தேவி 14 வருட காலம் வனவாசம் அனுபவித்தார். இதனால் விசுவாசத்திற்கும், பொறுமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்.

ராமாயணம், மகாபாரதம் என இரண்டிலும் வந்த முக்கிய கதாப்பாத்திரங்கள்!!!

மிதிலா அரசாட்சியின் ராஜாவான ஜனக், நிலத்தை உழும் போது இந்த அழகிய குழந்தையைக் கண்டெடுத்தார். அவரை தன் சொந்த மகளாக மிகுந்த அன்பு, பாசம், அக்கறையுடன் வளர்த்தார். அவருக்கு ஜானகி என பெயர் சூட்டி, அயோத்யாவின் ராஜகுமாரரான ராமருக்கு அவரை மணம் முடிந்து வைத்தார். இவர் உலகத்தின் அனைத்து சுகங்களையும் விட்டு விட்டு, தன் தந்தையின் வார்த்தையைக் காப்பாற்ற, தன் கணவனுடன் அரண்மனையில் இருந்து வனவாசம் சென்றார்.

ராமர் தனது அவதாரத்தை எப்படி முடித்தார் என்பது தெரியுமா?

இந்த வனவாசத்தின் போது தான், சீதா தேவியின் அழகால் மதிமயங்கிய ராவணன், அவரை கடத்தினான். அத்தகைய கஷ்டமான நேரத்திலும் கூட அவர் அமைதியாக, பொறுமையாக, தைரியமாக அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு, தன் கற்பையும் மரியாதையையும் கூட காப்பாற்றி கொண்டார். தான் மீட்கப்பட்ட பிறகும் கூட, தன் புனிதத்தன்மையை நிரூபிக்க அவர் தீக்குளித்தார்.

ஆஞ்சநேயரின் பிறப்பு பற்றிய ரகசியம்!

சீதா தேவி என்பவர் தூய்மை, நம்பகம், நல்லொழுக்கம், பக்தி மற்றும் ஒரு மகளாக, மனைவியாக, தாயாக பெண்கள் கொண்டிருக்க வேண்டிய பண்புகள் ஆகியவற்றின் சின்னமாக திகழ்ந்தவர். சீதா தேவியைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தாத சில தகவல்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளாரா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகவல் 1

தகவல் 1

"சீதா" என்ற பெயருக்கு சமஸ்கிருதத்தில் வரப்பு என அர்த்தமாகும். நிலத்தை உழும் போது ஜனக் ராஜாவால் கண்டெடுக்கப்பட்டதை குறிக்கும் வகையில் இந்த பெயர் அவருக்கு சூடப்பட்டது. பூமியின் வளத்தை குறிக்கும் வேத தெய்வத்துடனும் இதற்கு தொடர்பு உண்டு.

தகவல் 2

தகவல் 2

அவர் பூமி மாதாவின் தாயாகவும் கருதப்படுகிறார். அதனால் அவரை பூமிஜி என்றும் அழைக்கின்றனர். வனவாசம் சென்ற போது அவர் வைதேகி என அழைக்கப்பட்டார். ஸ்ரீ ராமரின் மனைவி என்பதால் ராமா என்றும் அழைக்கப்பட்டார்.

தகவல் 3

தகவல் 3

சீதா தேவியின் பிறப்பிடம் தொடர்பாக நீண்ட காலமாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது. சிலர் தெற்கு நேபாளத்தில் உள்ள மிதிலா அரசாட்சியில் அமைந்துள்ள ஜனக்பூர் என கூறுகின்றனர். இன்னும் சிலரோ பீகாரில் உள்ள சீதாமர்ஹி என கூறுகின்றனர்.

தகவல் 4

தகவல் 4

சீதா தேவியைப் பற்றி மற்றொரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று உள்ளது. அவர் வேதவதியின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். வேதவதி என்பவர் விஷ்ணு பகவானின் மனைவியாக வேண்டும் என நினைத்து, அவரை எண்ணி கடும் தவத்தில் இருந்த போது, அவரை ராவணன் பலவந்தப்படுத்தினார். அப்போது ராவணனின் அழிவிற்கு, தான் தன் அடுத்த ஜென்மத்தில் காரணமாக இருப்பதாக சபித்தார்.

தகவல் 5

தகவல் 5

ராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த முதல் பெண் தான் சீதா தேவி என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மண்டோதரிக்கு முதலில் பிறந்த குழந்தையால் தான் அவர்களின் மொத்த பரம்பரையே அழியும் என ஜோதிடர்கள் கணித்து இருந்தார்கள். அதனால் அவரைக் கடத்திய ராவணன், தூர தேசத்தில் அவரை புதைத்திடுமாறு ஆணையிட்டார். அதன் பின் தான் ஜனக் ராஜாவால் கண்டெடுக்கப்பட்ட அவர், மிதிலாவின் இளவரசியாக வளர்ந்தார்.

தகவல் 6

தகவல் 6

சீதாவைப் பற்றி தெரியாத மற்றொரு தகவல் ஒன்றும் உள்ளது. ராமாயணத்தின் சில பதிப்புகளில், மாயா சீதா (சீதா தேவியின் கற்பனை பதிப்பு) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி, மாயா சீதாவை தான் ராவணன் கடத்திச் சென்றார். உண்மையான சீதாவோ அக்னி பகவானிடம் அடைக்கலம் புகுந்தார். அவர் சீதா தேவியை பார்வதி தேவி தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து சென்றார்.

பின்னர், போர் முடிந்தவுடன் ராமரிடம் மீண்டும் திரும்பினார் சீதா. மாயா சீதா தான் அடுத்த ஜென்மத்தில் திரௌபதியாக பிறந்தார் என நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion