Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
சோழ பேரரசின் வீழ்ச்சியை பற்றிய வரலாற்று தகவல்கள்!!
சோழ இராஜ்ஜியம் என்பது பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூன்று முப்பெரும் குலத்தவரான சேரர், பாண்டியர், சோழர்களில் ஓர் பெரும் பகுதியை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆண்டு பெரும் இராஜ்ஜியம் ஆகும். பொதுவாக நெல் இயற்கையாக அல்லது மிகுதியாக விளையும் பூமி சோழர் நாடெனும் பெருமை பெற்று இருந்துது.
முதலாம் குலோத்துங்க சோழன் பற்றி பலரும் அறிந்திராத சரித்திர தகவல்கள்!!!
கடற்படை கொண்டு சமுத்திரம் தாண்டி மண்ணை ஆண்ட பெருமை கொண்டவர்கள் சோழர்கள். வெற்றிக்கு இணையான தோல்வியையும் தழுவி தான் ஆகா வேண்டும் என்பது இயற்கையின் நியதி. என்னதான் பாரத தேசியம் முழுவதையும் ஆண்ட இராஜ்ஜியம் எனிலும் கூட, 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சோழர் இராஜ்ஜியம் வலுவிழந்து போனது.....
பலரும் அறியாத அதிராஜேந்திர சோழன் பற்றிய வரலாற்று தகவல்கள்!!!

முதலாம் குலோத்துங்கன்
முதலாம் குலோத்துங்கனுக்குப் பிறகு அவரது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆட்சி செய்து வந்தனர்.

ஒய்சாளர்களின் செல்வாக்கு
இந்த காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து காணப்பட்டனர். சோழ நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர தொடங்கியது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்து காத்திருந்தனர். இதே நேரத்தில் தெற்கே பாண்டியர்கள் வலிமை பெற்றனர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்து இருந்தது. இவை அனைத்தும் சோழர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

கங்கைகொண்ட சோழபுரம் மீது போர்
1216 -ல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர்.

இரண்டாம் நரசிம்மன் ஆதரவு
சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான்.

பாண்டியர்கள் எழுச்சி
மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்றார்கள்.

நிலைகுலைந்து போன சோழ இராஜ்ஜியம்
பாண்டியர்களிடம் சந்தித்த தோல்விக்கு பிறகு சிற்றரசர்கள் நிலைக்கு போன்று நிலைகுலைந்து போயினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிவிட்டது.



Click it and Unblock the Notifications
