For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய இந்தியாவை பற்றி நாம் மறந்துக் கொண்டிருக்கும் தகவல்கள்!!!

தேசிய கொடியில் இருந்து, நமது நாட்டின் பெயர் காரணம் வரை நாம் மறந்துவிட்ட, மறந்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் பற்பல உள்ளன.

|

எத்தனை படுகொலைகள், எத்தனை இழப்புகள், எண்ணிக்கையற்ற அவமானங்களும், விதவை பெண்களும், சொந்த மண்ணில், கண்ணீரும், செந்நீரும் சிந்திய குடிமக்கள் மறைந்தாலும், அவர்களது நினைவுகள் இம்மண்ணை விட்டு விலகாது. போராடி பெற்ற சுதந்திரம் அல்ல இது, தாய் மானம் காக்க பெற்றது என நம்மில் நிறைய பேருக்கு தெரிவதில்லை.

ஆண்களின் வீரத்தை விலங்கிட்டு உடைத்தெறியவும், பெண்களின் மானத்தை படுக்கைக்கு இரையாக்கிக் கொள்ளவும் துணிந்த வெள்ளை அரக்கர்களை ஓட, ஓட விரட்ட வேண்டி பெற்ற சுதந்திரம், நமது நாட்டில் இன்றும் கூட அந்த அவல நிலை மாறாதிருப்பது, அழியாத பெரும் சோகம். சுதந்திரம் நம்மை நாமே ஆள்வதற்காக பெற்றதா? இல்லை, நம் நாட்டு மக்கள் எவருக்கும் அடிமையில்லை என்பதை நிலைநிறுத்த பெற்றது.

தேசிய கொடியில் இருந்து, நமது நாட்டின் பெயர் காரணம் வரை நாம் மறந்துவிட்ட, மறந்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் பற்பல உள்ளன. அவற்றில் சில சுதந்திர தினத்தன்று உங்களது நினைவுகளில் பதிந்து வைத்துக் கொள்ள....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேசியக்கொடி முதன் முதலில் ஏற்றப்பட்ட நாள்

தேசியக்கொடி முதன் முதலில் ஏற்றப்பட்ட நாள்

நமது தேசியக் கொடி முதன் முதலில் ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள், 1906ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள பர்சீ பேகன் ஸ்கொய்யர் (Parsee Bagan Square) எனும் இடத்தில் ஏற்றப்பட்டது. அன்றைய தினம் ஏற்றப்பட்ட தேசியக்கொடி சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் இருந்தது. அதில், சூரியனும், நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்தியா, பெயர் காரணம்

இந்தியா, பெயர் காரணம்

சிந்து நதியின் (Indus) பெயரில் இருந்து பெறப்பட்ட பெயர் தான் இந்தியா. சிந்து சமவெளியில் தான் மக்கள் முதல் முறையாக தோன்றினர் என்பதால் இப்பெயர் வைக்கப்பட்டது என சில கூற்றுகள் கூறுகின்றன. சம்ஸ்கிருத மொழியில் இந்தியா என்ல்றா பாரத் கனராஜ்ஜியா என்று பொருள்.

மூவர்ண கொடியின் பொருள்

மூவர்ண கொடியின் பொருள்

இந்திய மூவர்ணக் கொடியில், குங்குமப்பூ / காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும், வெள்ளை அமைதியையும், பச்சை நேர்மை, வளம், பேராண்மையையும் (வீரம்) குறிக்கின்றன.

கடந்த ஒரு லட்சம் வருடங்களில்

கடந்த ஒரு லட்சம் வருடங்களில்

இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் கடந்த ஒரு லட்சம் வருடத்தில் படையெடுத்து சென்றதில்லை என ஒருசில வரலாற்று கூற்றுகளில் கூறப்பட்டுள்ளது.

முதல் இந்திய தேசிய கொடியின் உருவம்

முதல் இந்திய தேசிய கொடியின் உருவம்

நமது தற்போதைய இந்திய தேசிய கொடியின் உருவத்தை உருவாக்கியவர் பின்காலி வெங்கய்யா என கூறப்படுகிறது. இவர் முதலில் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தை மட்டும் தான் சேர்த்திருந்தாராம். பிறகு காந்தி தான் நடுவில் வெள்ளை நிறத்தை மற்றும் அசோக சக்கரத்தை சேர்க்க கூறினார் என்றும் கூறுகிறார்கள்.

அரிசி, கோதுமையின் பிறப்பிடம்

அரிசி, கோதுமையின் பிறப்பிடம்

இந்தியா தான் அரிசி மற்றும் கோதுமையை அதிகமாக விளைச்சல் செய்யும் பூமி. இது கடந்த சில ஆண்டுகளாக இல்லை, உணவை சாப்பிட ஆரம்பித்த பல நூற்றாண்டுகளாக இந்தியா தான் சிறந்து விளங்குகிறது. ஆனால், நாம் இப்போது அந்த மண்ணை தான் கான்க்ரீட் கட்டங்களுக்கு இரையாக்கி அழித்து வருகிறோம்.

அதிக சாலைகள் கொண்ட நாடு

அதிக சாலைகள் கொண்ட நாடு

உலகிலேயே வைத்து அதிக சாலைகள் கொண்ட நாடு இந்தியா தான். ஏறத்தாழ 1.9 மில்லியன் மைல்கள் அளவிற்கு இந்தியாவில் சாலைகள் இருக்கின்றன. அதிற்கு இணையாக வீடுகள் இன்றி வாழும் சாலையோர மக்களும் இருக்கிறார்கள் என்பது தான் சோகம்.

அதிக மழை பொழியும் பூமி

அதிக மழை பொழியும் பூமி

மேகாலயாவில் இருக்கும் சிரபுஞ்சி எனும் இடத்தில் தான் உலகிலேயே அதிக மழை பொழிகிறது. ஏறத்தாழ 425 அங்குலம் மழையை அளவை வருடா வருடம் பெறுகிறது இந்த இடம். இது தென் அமெரிக்காவின் ட்ராபிகல் காடுகளில் பொழியும் மழையை விட ஐந்து மடங்கு அதிகமாம்.

உலகிலேயே பெரிய அஞ்சல் துறை

உலகிலேயே பெரிய அஞ்சல் துறை

இந்தியாவில் மொத்தம் 1,55,618 அஞ்சல் அலுவலகமும், 5,66,000 ஊழியர்களும் இருக்கிறார்கள். உலகிலேயே பெரிய அஞ்சல் துறை இந்தியாவுடையது தான்.

ஹிந்தி தேசிய மொழியல்ல

ஹிந்தி தேசிய மொழியல்ல

நிறைய பேர் ஹிந்தி தேசிய மொழி என தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.ஹிந்தி இந்தியாவின் அதிகார மொழி மட்டும் தான். முதன் முதலில் ஹிந்தி கடந்த 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் நாள் இந்தியாவின் அதிகார மொழியென அறிவிக்கப்பட்டது.

சுதந்திரம் பெற்ற போது தேசிய கீதம் இல்லை

சுதந்திரம் பெற்ற போது தேசிய கீதம் இல்லை

இந்தியா சுதந்திரம் பெற்ற போது தேசிய கீதமே இல்லை. ஆனால், நமது தேசிய மொழி 1911ஆம் ஆண்டே இயற்றப்பட்டது ஆகும். 1950ஆம் வருடம் தான் "ஜன கன மன.." பாடல் தேசிய கீதமாக வரையறுக்கப்பட்டது.

அதிக மசூதிகள் கொண்ட நாடு

அதிக மசூதிகள் கொண்ட நாடு

ஏறத்தாழ மூன்று லட்சம் மசூதிகள் இந்தியாவில் இருக்கின்றன. முஸ்லிம் நாடுகளையும் சேர்த்து, உலகின் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மசூதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. "ஜாதி, மத பேதமின்றி வாழும் ஒருமைப்பாடு போற்றும் இந்தியா..." என்பது வார்த்தைகளில் மற்றுமின்றி, வரும் நாட்களிலும் இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Facts To Know About Independent India

Every Indian should know these amazing facts about our India's Independence. Take a look.
Desktop Bottom Promotion