Latest Updates
-
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
யாரும் அறியாத அஜித் - விநாயகர் இரகசியம் - உங்களுக்காவது தெரியுமா?
நடிகர் அஜித்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினியை போலவே அதிகமான கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்பது தமிழக திரை ரசிகர்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த கடவுள் நம்பிக்கையா? அல்லது தானாக நடந்த நிகழ்வா என்று தெரியவில்லை, அஜித்தின் ஆரம்பக் காலக்கட்ட திரைபடங்களில் இருந்தே விநாயகர் துணை நன்கு செயல்படுகிறது.
தெறிக்க தெறிக்க ஷாலினியை காதலித்த அஜித்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!
நடிகர் அஜித்தின் திரைபடங்களில் விநாயகர் இடம்பெற்றால் அந்த படம் ஆஹா, ஓஹோ ரகத்தில் வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கிறது. ஒரு தடவை இரண்டு தடவை அல்ல, வேதாளம் படத்தையும் சேர்த்து இது தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - விநாயகர் கூட்டணி ஹேட்ரிக் அடித்துள்ளார்கள்.....
கார்மென்ட்ஸில் வேலை செய்த அஜீத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

வான்மதி
19 வருடங்களுக்கு முன்பு 1996 ஆண்டு ஜனவரி மாதம் 12 நாள் வெளியானது 'வான்மதி' திரைப்படம். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுவாதி என்பவர் நடித்திருந்தார். இயக்குனர் அகத்தியன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

"பிள்ளையார்பட்டி ஹீரோ நீதானப்பா கணேஷா..."
இந்த படத்தில் தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசையில் "பிள்ளையார்பட்டி ஹீரோ நீதானப்பா கணேஷா" என்ற விநாயகர் பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடல் இன்றளவும் அஜித்தின் ஹிட் லிஸ்டில் ஓர் அங்கமாக இருக்கிறது.

வெள்ளிவிழா கொண்டாடியது
கமர்ஷியலாக அஜித்துக்கு பெரும் வெற்றியை தேடித் தந்த படம் இது. 175 நாட்கள் ஓடி பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்த படம் இது.

அமர்க்களம்
அஜித்தின் ரீல் மற்றும் ரியல் வாழ்க்கை என இரண்டிலும் முக்கிய பங்காற்றிய படம் 'அமர்க்களம்' இந்த படத்தின் போது தான் அஜித் மற்றும் ஷாலினி காதலில் விழுந்தார்கள்.

"காலம் கலிகாலம் ஆகிபோச்சுடா..."
வான்மதியை தொடர்ந்து 'அமர்க்களம்' படத்திலும் விநாயகர் செண்டிமெண்ட் வர்க்கௌட் ஆகியது. இப்படத்தில் பரத்வாஜ் இசையில் இடம்பெற்ற "காலம் கலிகாலம் ஆகிபோச்சுடா..." பாடலுக்கு ராகவா லாரன்ஸ் நடனமாடி இருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது மட்டுமின்றி அஜித்தை ரீல் மற்றும் ரியல் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.

வேதாளம்
2015 தீபவாளிக்கு வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது வேதாளம். வீரம் படத்திற்கு அடுத்து இயக்குனர் சிவா மற்றும் அஜித் சேர்ந்திருக்கும் படமான வேதாளம், ரசிகர்களுக்கு நிஜமாகவே தல தீபாவளியாக அமைந்துவிட்டது.

"வீர விநாயகா..."
ராக்ஸ்டார் அனிருத் இசையில் "வீர விநாயகா.." பாடல் வேதாளம் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. 'வான்மதி', 'அமர்க்களம்' தொடர்ந்து ஹேட்ரிக் ஹிட் அடித்துள்ளது அஜித் - விநாயகர் கூட்டணி. பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் கலக்ஸனை வேதாளம் அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராண்ட் ஓபனிங்
முதல் நாளில் மட்டுமே 15.5 கோடி ரூபாய் வசூல் செய்து வேதாளம் திரைப்படம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. எது எப்படியோ... அஜித் - விநாயகர் கூட்டணி சக்கை போடு போடுகிறது.

மங்காத்தா
விநாயகர் பாடல் மட்டுமல்ல விநாயகர் பெயரை வைத்து நடித்தாலும் கூட அஜித்திற்கு ராஜ யோகம் தான் போல. தனது 50 படமான மங்காத்தாவில்விநாயக் என்ற பெயரில் அஜித் நடித்திருந்தார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.

வீரம்
மங்காத்தா மட்டுமல்ல, வீரம் படத்திலும் கூட அஜித் கதாப்பாத்திரத்தின் பெயர் விநாயகம் தான். இந்த படமும் அஜித்துக்கு வெற்றிக் கனியை பறித்து தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications