Latest Updates
-
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
"இந்து" மதமா? மனித இனத்தின் பரிமாணமா? அறிவியல் ஒப்பீடுகள்!!!
மதம் என்ற வழக்கு இன்றைய நிலையில் வேறுப்பட்ட பொருள் அர்த்தத்தில் கையாளப்பட்டு வருகிறது. கூட்டாக வாழும், வாழ்ந்த ஓர் இனம் பின்பற்றிய நெறிமுறைகள், வாழ்வியல் முறைகள், இலக்கணங்கள் போன்றவற்றின் கஅடிப்படை தான் மதமாக மாறியிருக்கலாம்.
இந்துக்களின் கீதை, கிறிஸ்துவர்களின் பைபிள், இஸ்லாமியர்களின் குரான் போன்ற அனைத்தும் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், ஒழுக்க நெறிமுறைகள் பற்றியும் தான் கூறுகின்றன. எனவே. மதம் என்ற சொல் மனித இனத்தின் ஒவ்வொரு பரிமாணத்திலும் ஓர் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
அந்த வகையில், பல நூற்றாண்டுகளுக்கு முன் குமரி கண்டத்தில் தோன்றிய மனித தோற்றத்திற்கு பிறகு ஏற்பட்ட பரிமாணம், இப்படி தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறைகள், வாழ்வியல் முறைகளை பின்பற்றிய ஓர் கூட்டம் அல்லது இனம் இந்துக்களாக இருக்கலாம். நம்மவர்கள் அன்று பின்பற்றி வந்த யோகா, தெய்வ வழிபாடுகள், வாழை இலையில் உண்ணும் வழக்கம் போன்றவற்றின் மூலக்கரு மனிதர்களின் ஆரோக்கியத்தை சார்ந்தும், குறித்தும் தான் இருந்திருக்கிறது.
இனி, நமது முன்னோர்கள் பின்பற்ற கூறிய நெறிமுறைகள் மற்றும் வாழ்வியல் முறைகள் மருத்துவ அறிவியலோடு எவ்வாறு ஒத்துப்போகிறது என்று பார்க்கலாம்....

மரம்
நமது முன்னோர்கள் வேப்பமரம், ஆலமரம் போன்றவற்றை சுற்றி வர சொல்லி கூறியிருக்கின்றனர். காலப்போக்கில் இது தெய்வீக வழிபாடு என்று மருவி இருந்தாலும். இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் என்னவென்றால், அதிகாலையில் வேப்பமரம் மற்றும் ஆலமரத்தை சுற்றிவரும் போது இந்த மரங்களின் அருகாமையில் நாம் சுவாசிக்கும் காற்று நமது உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் தன்மையுடையது என்பது தான் உண்மை.

யோகா
மனிதர்களின் மனநிலையும், உடல்நிலையும் ஒருநிலைப்படுத்தும் செயல்பாடு தான் யோகா. யோகா பயிற்சியினால் உங்கள் உடல் மற்றும் மனதில் ஏற்படும் எந்த பதிப்பையும் சரி செய்ய முடியும். இதை என்றோ அறிந்து கற்பித்து சென்றுள்ளனர் நமது முன்னோர்கள்.

கோயில்
முற்காலத்தில் கட்டிய கோயில்கள் எல்லாம் அறிவியல் சார்ந்து கட்டப்பட்டது. கோயிலின் மூலஸ்தானம், புவியில் காந்த அலைவரிசையின் புள்ளியில் அமையும் படி கட்டமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது அவ்விடத்திற்கு வந்து செல்லும் நபர்களுக்கு நன்மை விளைவிக்கும். இவ்வாறு வந்த செல்வதற்காக கட்டமைக்கப்பட்ட இடம் தான் கோவில்.

துளசி
தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுபெறும். இதற்காக தான் அணைத்து வீடுகளிலும் துளசி செடி வளர்க்க சொல்லி கூறப்பட்டிருக்கிறது. இதுவும், கால போக்கில், சாதி, மதம் என்ற வட்டத்திற்குள் சிக்கி, சாதியின் இலட்சினை ஆகிவிட்டது.

வேதம்
ஒரு சில கூற்றுகள், இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள வேதங்கள், உடல்நல பாதிப்புகளை சரி செய்யவும், இரத்த அழுத்தத்தை சமநிலை படுத்தவும் உதவுவதாக கூறுகின்றன. ஆனால், இவற்றை பின்பற்றும் முறையை நாம் முற்றிலும் மறந்துவிட்டோம். இவை யாவும் மருத்துவம் சார்ந்தும், மனிதர்களின் ஆரோக்கியத்தை சார்ந்துமே இருந்திருக்கின்றன.

கை
நாம் மணமக்களை, நற்காரியங்களின் போது வாழ்த்தும் போது கைகளை அவர்களது தலைமேல் அழுத்தி வாழ்த்துகிறோம் என்று தெரியுமா? நமது உள்ளங்கையில் இருந்து பாசிடிவ் எனர்ஜி வெளிப்படும். நேரடியாக பலர் இவ்வாறு செய்யும் போது, இது உங்கள் மூளைக்கும், உடலுக்கும் நன்மை விளைவிக்கும் விதமாக அமைகிறது.

வாழை இலை
வாழை இலை இயற்கையானது மற்றுமின்றி குளுமையானதும் கூட, இது உடலுக்கும் நல்லது, உபயோகித்து வீசிய பிறகு இயற்கையும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் மக்கிவிடும்.

மஞ்சள்
மஞ்சள் ஓர் சிறந்த ஆன்டி-பயாடிக் ஆகும். இது, நோய் கிருமிகள், அலர்ஜிகள் ஏற்படாமல் இருக்க உதவும்.

பசுஞ்சாணம்
பசுவின் சாணத்தை வீடு கழுவ பயன்படுத்தியதற்கு, இது நச்சுகளை தவிர்க்க உதவுகிறது. சிறந்த நச்சுக்கொல்லியாகவும் செயல்படுகிறது.

கோமியம்
கோமியதிற்கும் நச்சுகளை கொள்ளும் தன்மை இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், கோமியம் இதய நலத்திற்கும், உடலில் சேரும் விஷத்தன்மையை போக்கவும், அழிக்கவும் கூட உதவுகிறதாம்.

தோப்புகரணம்
மனநிலையை சுறுசுறுப்பாக்கவும், கற்றுக்கொள்ளும் திறனையும் அதிகரிக்க உதவுகிறது தோப்புக்கரணம்.

நெய் விளக்கு
சில கூற்றுகள், நெய் விளக்கு பாசிடிவ் எனர்ஜிகளை அதிகப்படுத்தும் என கூறுகின்றன. இதன் காரணத்தினால் தான் வீடுகளில் நெய் விளக்குகள் ஏற்ற கூறியிருக்கின்றனர்.

ஓம்
இதயத்துடிப்பை சீராக்கவும்,மனநிலையை இலகுவாக்கவும் இதவுகிறது ஓம் என்ற சொல். இது மதம் மட்டுமின்றி மற்ற மதங்களில் கூட ஓம் போன்ற சார்புடைய வார்த்தைகள் வழக்கத்தில் இருக்கின்றன. உதாரணமாக கிறிஸ்துவர்களின் ஆமென்.

சங்கநாதம்
சங்கநாதத்தில் இருந்து வெளிவரும் ஒலி அலைகள் நம்மை சுற்றி இருக்கும் பூச்சிகளை கொள்ளும் தன்மையுடையதாம்.



Click it and Unblock the Notifications