Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
அலுவலகத்தில் மகிழ்ச்சியோடு வேலையை செய்ய சில வழிகள்!!!
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் விலை உயர்வும், பணவீக்கமும் இன்றைய காலக்கட்டத்தில் வேலையை அவசியமாக்குகின்றன. ஒரு வேளை, நல்ல வேலை கிடைத்து விட்டால், அந்த வேலைக்கான சுற்று சூழல் இடத்திலும்,அந்த பணிக்கான வேலைகளிலுமே உங்களுடைய அதிக அளவிலான நேரம் செலவாகி விடும். இதனால் நீங்கள் பணி செய்யும் இடம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
நீங்கள் வேலை செய்யும் இடம் உங்களுக்கு வசதியாகவும் ஏற்றதாகவும் இருந்தால் மட்டுமே, உங்களால் நல்ல முறையில் வேலை செய்து. நல்ல ரிசல்டை கொடுக்க முடியும். நீங்கள்,தங்களுடைய மன அழுத்தம் மற்றும் கடுமையான குணத்திற்கு தடை போட்டுக் கொண்ட சில மக்களை அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.பொதுவாக இப்படி இருத்தலே மிகவும் நல்ல விஷயம். நீங்கள் உங்கள் வேலையில் மகிழ்ச்சியுடன் திகழ, சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
‘செய்யும் தொழிலை மகிழ்ச்சியோடு செய்தாலே சிறந்தது‘ என கூறுவது எளிது. ஆனால் அதை நடத்திகாட்டுவது சிறிது கடினம். பொதுவாக நீங்கள் உங்களது முதலாளியை எப்படி சமாளிப்பது என்றும், உங்களது நண்பர்கள் போல நடிக்கும் உங்கள் சக தொழிலாளர்களை எப்படி சமாளிப்பது எனவும் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணம் உங்களுடைய சுமையையே அதிகரிக்கும்.

இந்த எண்ணங்களில் நீங்கள் முழு கவனத்தையும் செலுத்திநீர்களானால், உங்களுடைய வேலைகள் சரிவர அமையாததோடு, உங்களுக்கும் மன அழுத்தம் ஏற்பட்டு விடும். சீக்கிரத்திலேயே, இது உங்களிடம், வேறு புது வேலைக்கான முயற்சியை தோற்றுவித்து விடும். அடிக்கடி வேலை மாற்றம் என்பது ஒரு ஆரோக்கியமான தீர்வா? உங்கள் வேலையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதற்கு தகுந்த நல்ல தீர்வை யோசிப்பதே சிறந்தது. வேலையை விட்டு விடுவது அல்ல.
யோசியுங்கள்! நீங்கள் உங்கள் வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியோடு இருக்க நாங்கள் இங்கே சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். உங்கள் பணியிடங்களின் சூழலில் ஏதேனும், பிரச்சனை இருப்பின் இதை படித்து, பயன் பெறுக.
உங்களுக்கென ஒரு நல்ல நண்பர்களை உருவாக்கல்
நீங்கள் வேலை செய்யும் இடங்களில், உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் ஒரு மன ஒன்றிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல கூட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது நிச்சயமாக உங்களுக்கு உதவி புரியும். வீட்டிலேயே எப்போதும் சாப்பிடுவதற்கு பதிலாக, உங்கள் உடன் வேலை செய்பவர்களோடு வெளியேசென்று அவ்வப்போது சாப்பிடலாம். வீட்டிலேயே சமைத்துக் கொண்டு வந்து, அனைவருடனும் பகிர்ந்து உண்ணலாம். இது உங்களுக்கு, உங்களுடன் வேலை செய்பவர்களுடன் நல்ல ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். இது நீங்கள் பணி புரியும் இடத்தில், நல்ல சந்தோஷமான சூழலைத் தோற்றுவிக்கும்.
சொந்த விஷயங்களை எப்போதும், பெர்சனலாகவே வைத்துக் கொள்ள வேண்டும்
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, முதற்காரணமாக, உங்களுடைய சொந்த விசயங்களை நீங்கள் பெர்சனலாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை உங்கள் வேலையோடு குழப்பிக் கொள்ளாதீர்கள். அது எல்லா விதத்திலும் உங்களுடைய பணித்திறமையை பாதித்து விடும். எனவே நீங்கள் பணியிடங்களில், மகிழ்ச்சியோடு இருக்க உங்கள் சொந்த விஷயங்களை உங்கள் வீட்டிலேயே விட்டு விட்டு வர வேண்டும்.
பழக்க வழக்கங்களே உயர்வை தீர்மானிக்கும்
நீங்கள் உழைப்பை வெறுத்தால், பின் உங்களுடைய வேலையும் உங்களுக்கு வெறுத்து விடும். அப்படியே எல்லாமே வெறுத்து விடும்.எனவே நீங்கள் நல்ல கொள்கையோடு இருந்தால் அது உங்களுடைய உயர்வை தீர்மானிக்கும். நீங்கள் வெறுப்பை உருவாக்கிக் கொண்டால், எல்லாமே வெறுத்து விடும். அதை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.இது நீங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியாகும். மேலும் இது நீங்கள் வேலை செய்யும் இடங்களில் சந்தோசமான நிலையை நிலவ சிறந்த டிப்ஸ் ஆகும்.
தனித்து இருத்தலை தவிர்க்க வேண்டும்
நீங்கள் பணி புரியும் இடங்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்தால், உங்களுடன் பணிபுரிபவர்களுடன், ஸ்நேக மனப்பான்மையுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சிநேக மனப்பான்மை உங்களுக்கு, துன்பங்கள் வரும் போது, கை கொடுக்கும். ஆனால் நீங்கள் யாரிடமும் ஒட்டாமல், தனித்து இருந்தால் அது உங்களுக்கு அலுவலகத்தில் பிரச்சனைகளையே தோற்றுவிக்கும்.
நன்றி சொல்லுதல்
உங்களுக்கு கிடைத்ததை நீங்கள் பெருமையாக நினைக்க வேண்டும்.உங்களுக்கு வேலை இருக்கிறது. சில நேரங்களில், நீங்கள் டைப் செய்வது கடினமாக இருந்தால், உங்கள் கோபத்தை ஆபீஸ் தொலை பேசியிலோ, கதவை வேகமாக மூடுவதிலோ காட்டுவீர்கள். எத்தனையோ மக்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். உங்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அதை நினைத்து நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். அதை நன்றியோடு நினைப்பதே, நீங்கள் உங்கள் பணியில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியாகும்.
நேர்மறையாக இருக்கவும்
அனைவருமே பணியில் பிரச்சனைகளை சந்திப்பர். நேர்மறையாக செயல்பட வேண்டும். நம்பிக்கையோடு செயல்பட்டால், விரைவில் நல்லது நடக்கும். நம்பிக்கையை இழக்கக் கூடாது. அனைத்தும் அதனதன் நேரத்தில் நடக்கும்.



Click it and Unblock the Notifications