Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ரோஸ் டே, ப்ரப்போஸ் டே, சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, வேலன்டைன்ஸ் டே..அடடே!
உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகில் பிப்ரவரி மாதம் வரும் காதலர் தினமானது ஒரு பண்டிகை போன்று ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. அதிலும் அந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் காதலர்கள் தங்களது அன்பு, பரிசுகள் மற்றும் இதுப்போன்று இன்னும் பலவற்றை பகிர்ந்து கொள்வார்கள்.
பொதுவாக காதலர் தினம் என்றால் அனைவருக்கும் பிப்ரவரி 14 மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் காதலர் தினமானது பிப்ரவரி 7 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அது எப்படியென்று கேட்கிறீர்களா? அதைத் தான் உங்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை விரிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து உங்கள் காதலியுடன் காதலர் வாரத்தை சந்தோஷமாக கொண்டாடி மகிழுங்கள்.

பிப்ரவரி 7: ரோஸ் டே
காதலர் வாரத்தின் முதல் நாள் தான் 'ரோஸ் டே'. இந்நாளில் காதலர்கள் ரோஜாப் பூக்களை, அதிலும் காதலின் சின்னமான சிவப்பு நிற ரோஜாப் பூக்களை கொடுத்துக் கொள்வார்கள்.

பிப்ரவரி 8: ப்ரப்போஸ் டே
காதல் வாரத்தின் இரண்டாம் நாளன்று காதலர்கள் 'ஐ லவ் யூ' என்று தங்கள் காதலை வித்தியாசமான முறையில், ஆச்சரியப்படத்தக்க வகையில் ப்ரப்போஸ் செய்வார்கள்.

பிப்ரவரி 9: சாக்லெட் டே
காதலர் வாரத்தின் மூன்றாம் நாள் தான் 'சாக்லெட் டே'. இந்நாளில் தங்கள் துணைக்கு அவர்களுக்கு பிடித்த சாக்லெட்டுகளை வாங்கிக் கொடுப்பார்கள்.

பிப்ரவரி 10: டெடி டே
இந்நாள் பெண்களுக்கு மிகவும் ஸ்பெஷலான நாள். ஏனெனில் இந்நாள் தான் டெடி டே. பொதுவாக பெண்களுக்கு டெடி பியர் என்றால் கொள்ளை பிரியம். இந்த நாளில் காதலன் காதலிக்கு அழகான டெடி பியர் கொடுப்பார்கள்.

பிப்ரவரி 11: ப்ராமிஸ் டே
இது ஒவ்வொரு காதலர்களுக்கும் மிகவும் முக்கியமான மற்றும் ஸ்பெஷலான நாள். ஏனென்றால் இந்நாளில் காதலர்கள் இருவரும் தங்கள் உறவை சந்தோஷமாகவும், நம்பிக்கையுடனும் வளர்க்கும் வகையில் சத்தியம் செய்து கொள்வார்கள்.

பிப்ரவரி 12: ஹக் டே
ஹக் டே என்பது காதலர்கள் இருவரும் அனைத்தையும் மறந்து, நாம் இருவரும் எப்போதும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டுமென்று கட்டிப்பிடித்து கொண்டாடும் நாள்.

பிப்ரவரி 13: கிஸ் டே
காதலர் வாரத்தின் ஏழாம் நாள் தான் கிஸ் டே எனப்படும் முத்த மழை பொழியும் நாள். இந்த நாளன்று காதலர்கள் தங்கள் அன்பை முத்தத்தின் வாயிலாக வெளிப்படுத்துவார்கள். நீங்கள் எப்படி?

பிப்ரவரி 14: வேலன்டைன்ஸ் டே
இறுதியில் தான் வேலன்டைன்ஸ் டே என்னும் காதலர் தினத்தைக் கொண்டாடுவார்கள். இந்நாளில் காதலர்கள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவழித்து, அந்நாளை மறக்க முடியாத ரொமான்டிக் நாளாக கழிப்பார்கள்.



Click it and Unblock the Notifications