கிருஷ்ண ஜெயந்தி 2019: ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி பலரும் அறிந்திராத 10 தகவல்கள்!!!

By Ashok CR

இந்த வருட கிருஷ்ண ஜென்மாஷ்டமி வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கிறது. மகாபாரதத்தின் முக்கியமான கதாபாத்திரமான ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாமல் மகாபாரத கதை முழுமை பெறாது. ஸ்ரீ கிருஷ்ணர் கதாபாத்திரத்தின் மீது காதலில் விழாதவர்களே இருக்க முடியாது. சொல்லப்போனால், பகவத் கீதையின் வடிவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் வார்த்தைகள் ஞானம் மற்றும் எழுச்சியை உண்டாக்கும் விதத்தில் அமையும். ஆன்மீக வழியில் மிகப்பெரிய குணப்படுத்துபவர்களில் இவரும் ஒருவராக விளங்கினார்.

கிருஷ்ணரின் ராசலீலை பற்றிய அதிர்ச்சியூட்டும் தொன்மங்கள்!!!

அர்ஜுனருக்கு வாழ்க்கை பயிற்சியாளராகவும், ஆளுமை வளர்ச்சி தலைவராகவும் விளங்கினார். அர்ஜுனனுக்கு வழி தெரியாமல் தவித்த நேரத்தில், கிருஷணர் தான் அவரின் கடமைகளை நினைவுப்படுத்தினார். கிருஷ்ணரைப் பற்றி நாம் பல விஷயங்கள் தெரிந்து வைத்திருந்த போதிலும், நமக்கு தெரியாத சில தகவல்களும் இருக்கின்றன.

கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு பற்றிய கதை!

கிருஷ்ணருடைய பல குணாதிசயங்களில், அவரின் தன்னியல்பு மற்றும் சமயோஜித புத்தி தான் மிகவும் சிறந்தவைகளாக கருதப்படுகிறது. மனித இனத்திற்கு இவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பாக பகவத் கீதை கருதப்படுகிறது. கிருஷ்ணர் சித்தரித்துள்ள பல வகையான எண்ணற்ற குணங்களை போல், புராணத்தில் வேறு எந்த ஒரு கதாபாத்திரமும் சித்தரிக்கப்படவில்லை. சரி கிருஷ்ணரைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா. தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை: 1

உண்மை: 1

16,108 பெண்களின் கணவனாக இருக்கும் அதிர்ஷ்டத்தை ஸ்ரீ கிருஷ்ணர் பெற்றார். முதல் 8 மனைவிகளின் பெயர்களை நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால் ஆயிரக்கணக்கான மனைவிகளுக்கு பாதுகாவலராக இருந்தது பலருக்கும் தெரியாது.

உண்மை: 2

உண்மை: 2

அவருக்கு 80 பிள்ளைகள் பிறந்தன. நம்மில் பலருக்கும் பிரத்யும்னா பற்றி தெரிந்திருக்கும். ஆனால் அவரின் பிற மகன்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.

உண்மை: 3

உண்மை: 3

ராதையுடனான அவரின் காதலைப் பற்றி எந்த ஒரு பழங்கால சமயத்திரு நூல்களும் குறிப்பிடவில்லை. கிருஷ்ணர் மற்றும் ராதையின் அனைத்து காதல் அத்தியாயங்களும் நம்மை மகிழ்விக்கும் படி அமைந்துள்ளது. ஆனால் சமயத்திரு நூல்கள் எதுவும் இவரின் காதல் கதைகளைப் பற்றி குறிப்படவில்லை என்று சில வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

உண்மை: 4

உண்மை: 4

ஏகலைவன் என்பது வேறு யாருமல்ல, ஸ்ரீ கிருஷ்ணரின் உறவினர் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. மகாபாரதத்தில் உள்ள பல கதாபாத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் தொடர்புகள் வெகு சுவாரசியமாகவும், சுவையாகவும் இருக்கும். ஆழமாக பார்க்கும் போது, பல முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள சுவாரசியமான முடிச்சுகள் நமக்கு தெரிய வரும்.

உண்மை: 5

உண்மை: 5

மர்மம், அறிவு, விவேகம், கவர்ந்திழுக்கும் வசீகரம் போன்ற குணங்கள் மற்றும் தோற்றத்துடன் விளங்கினார் கிருஷ்ணர். அவரை யாராலும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. தனக்கு வருங்காலாம் எல்லாம் நன்றாக தெரிந்திருந்த போதிலும் அதை பயன்படுத்தி தற்போதைய நிகழ்வுகளை மாற்ற அவர் எப்போதும் முயற்சித்ததில்லை என்பது மற்றொரு அருமையான தகவலாகும். அவரின் தத்துவ ஆழம், அவரின் குணாதிசயங்களோடு ஒன்றாக சேரும்.

உண்மை: 6

உண்மை: 6

அர்ஜுனரும், கிருஷ்ணரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்ட போது, சிவபெருமான் தலையிட்டு இந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். ஸ்ரீ கிருஷ்ணர் பற்றிய மற்றொரு சுவாரசியமான தகவல் இது. இந்த சண்டையைப் பற்றி மிகப்பெரிய அத்தியாயமே எழுதப்பட்டுள்ளது. ஆனால் நம்மில் பலருக்கும் அவர்கள் இருவரும் போட்டுக் கொண்ட சண்டை பற்றித் தெரியாது.

உண்மை: 7

உண்மை: 7

அர்ஜுனனுக்கு பகவத் கீதை விளக்கப்பட்ட போது, ஆஞ்சநேயரும் உடன் இருந்துள்ளார் என்பது ஸ்ரீ கிருஷ்ணர் பற்றிய மற்றொரு அறிந்திராத தகவலாகும். தேரின் கொடியில் ஆஞ்சநேயர் ஒரு சின்ன வடிவில் இருந்துள்ளார்.

உண்மை: 8

உண்மை: 8

கிருஷ்ணருக்கு பாண்டவர்கள் தாய் வழி சொந்தம். மேலும் கிருஷ்ணரின் தங்கை அர்ஜுனனை திருமணம் செய்தார்.

உண்மை: 9

உண்மை: 9

கிருஷ்ணரின் சக்தி வாய்ந்த ஆயுதமாக விளங்கியது சுதர்சன சக்கரம். அதனை அவர் நிதானத்துடன் பயன்படுத்தினார். கூர்மையான வட்ட வடிவில் இருந்த அவரின் ஆயுதத்தில் கூர்மையான 108 விளிம்புகள் இருந்தது. இதனை முழுமையான ஆயுதம் என பழங்கால நூல்கள் தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கை மீண்டும் கொண்டு வர கிருஷ்ணர் இதனை பயன்படுத்தினார். இந்த சக்கரத்தை கொண்டு அவர் பல அசுரர்களுடன் சண்டையிட்டுள்ளார்.

உண்மை: 10

உண்மை: 10

ஒரு வேட்டைக்காரனின் அம்பு தன் காலில் பட்ட போது தான் அவர் கடைசியாக மூச்சு விட்டது என்பதும் கூட பலருக்கும் தெரிந்திராத தகவல்களில் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion