கல்லூரி வாழ்க்கையை 'மிஸ்' பண்ண வைக்கும் காரணங்கள்!!!

By Boopathi Lakshmanan

மாணவப் பருவத்தில் மறக்க முடியாத பல நினைவுகளைக் கொடுக்கும் பருவம் கல்லூரிப் பருவம். இன்றைய மாணவர்கள் தங்களுடைய கல்லூரிப் பருவத்தையும், பட்டப்படிப்பைப் பற்றியும் பேசும் போது மிகவும் சுறுசுறுப்பாகி விடுகிறார்கள். ஏனெனில், பட்டப்படிப்பிற்குப் பின்னர் வரும் வாழ்க்கையில் நாம் கார்பரேட் கம்பெனிகளுக்குச் சென்று வேலை செய்யும் வகையில் மறுபரிணாமம் எடுப்போம்.

எனவே, கல்லூரிப் பருவத்தில் நீங்கள் இருக்கும் போது அதில் கிடைக்கும் அனுபவங்களை நிறைய பெற வேண்டும். வேலைக்கு சென்று சேர்ந்த பின்னர் தான் கல்லூரிப் பருவம் எப்படிப்பட்டது என்று நீங்கள் உணர்வீர்கள். அதிலும் எந்த அளவுக்கு கல்லூரிப் பருவத்தை நீங்கள் 'மிஸ்' பண்ணியிருக்கிறீர்கள் என்றும் தெரிந்து கொள்வீர்கள்.

எதைப்பபற்றியும் கவலைப்படாத மற்றும் சுதந்திரமான வாழ்க்கை முறையை மாணவராக அனுபவித்து விட்டு, கார்ப்பரேட் உலகத்திற்குள் புதிதாக நுழையும் போது, கல்லூரி வாழ்வின் தாக்கங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும். இவ்வாறு கல்லூரி வாழ்க்கையை நாம் இழப்பதை நியாயப்படுத்தும் சில காரணங்கள் உள்ளன. இன்று தமிழ் போல்ட் ஸ்கை அது போன்ற சில எளிமையான காரணங்களைப் பற்றி உங்களுக்கு சொல்லப் போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோடைக்கால விடுமுறை

கோடைக்கால விடுமுறை

நீங்கள் கல்லூரி வாழ்க்கையை இழக்கக் காரணமா, அந்த வாழ்வில் கிடைக்கும் முடிவில்லாத விடுமுறைகளை, குறிப்பாக கோடைக்கால விடுமுறைகளை சொல்லலாம்.

சொந்த நேர ஒதுக்கீடு

சொந்த நேர ஒதுக்கீடு

ஒரு மாணவராக, உங்களுக்கான நேரப்பட்டியலை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள். அதை உங்களுடைய பெற்றோர்களும் உணர்ந்து, சேர்ந்து கொள்வார்கள். நாங்கள் சொல்வது சரியா?

படிக்கும் நேரத்தின் நன்மைகள்

படிக்கும் நேரத்தின் நன்மைகள்

படிக்கும் நேரத்தில் கிடைக்கும் நன்மைகளுக்காக சில நேரங்களில் நீங்கள் கல்லூரியை 'மிஸ்' பண்ணுவீர்கள். இது மிகவும் நல்ல காரணம் தான். நீங்கள் படிக்கும் மேஜையில் அமர்ந்து கொண்டு, வீட்டிலிருப்பவர்களை அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் வைத்து ஏற்கச் செய்வீhக்ள். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் குடும்பத்தார், உங்களுடைய விருப்பப்படி நடந்து கொள்வார்கள்.

'கட்' அடித்தல்

'கட்' அடித்தல்

வகுப்புகளுக்கு கட் அடித்து ஊர் சுற்றுவதில் தான் ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கையின் சுவாரசியம் அடங்கியுள்ளது. இந்த காரணத்திற்காவும் மாணவப் பருவத்தினர் கல்லூரி வாழ்க்கையை 'மிஸ்' பண்ணுவார்கள்.

பணம் ஒரு பொருட்டே அல்ல!

பணம் ஒரு பொருட்டே அல்ல!

கல்லூரிப் பருவத்தில் நீங்கள் கடனாளியாகும் சூழல் ஏற்படுவதில்லை. ஒரு கல்லூரி மாணவனுக்கு, பணம் சம்பாதிக்கவும் மற்றும் பாக்கெட் மணி பெறவும் பல வழிகள் உள்ளன.

வகுப்பில் தூக்கம்

வகுப்பில் தூக்கம்

நீங்கள் கல்லூரி வாழ்க்கையை இழக்க ஒரு காரணமாக வகுப்பறையில் தூங்கும் தூக்கம் உள்ளது. உங்களுடைய உடல் நலை சரியில்லை என்று எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லி விட்டு, தலையை தாழ்த்திக் கொண்டு, மீதி நேரத்தை உறக்கத்திற்காக செலவிடுவதையே இது குறிக்கிறது.

மாணவர்களுக்கான தள்ளுபடிகள்

மாணவர்களுக்கான தள்ளுபடிகள்

நீங்கள் மாணவராக இருக்கும் போது, பல்வேறு தள்ளுபடி சலுகைகள் உங்களைத் தேடி வரும். அது பியூட்டி பார்லருக்காகவோ அல்லது சினிமா டிக்கெட்களுக்காகவோ என எதுவாகவும் இருக்கலாம். இந்த காரணங்களுக்காக கல்லூரி வாழ்க்கையை கட் அடிக்காதவர்கள் யாராவது இருக்கிறீர்களா?!

கல்லூரியின் ஓய்வறைகள்

கல்லூரியின் ஓய்வறைகள்

நீங்கள் கல்லூரி வாழ்க்கையை இழக்க ஒரு காரணமாக கல்லூரியின் ஓய்வறைகளையும் சொல்லலாம். இந்த ஓய்வறைகளின் பொறுமையான வாழ்க்கை முறை கல்லூர்p

வாழ்க்கையின் கவனத்தை திசை திருப்பும். நீங்கள் நேரமாக எழுந்திருக்க வேண்டியிருந்தாலும், இந்த விஷயத்தை யாரும் பிடிக்கவில்லை என்று குறையாகவும் சொல்வதில்லை.

இரவில் தங்குதல்

இரவில் தங்குதல்

உங்களுடைய லேப்டாப்பில் சினிமா பார்க்கும் வேகத்தில், படிப்பதற்காக வெளியில் தங்கியிருக்கிறேன் என்று சொல்லியிருப்பீர்கள் அல்லவா? இதையும் கூட கல்லூரி வாழ்க்கையை இழக்க ஒரு காரணமாக சொல்லலாம்.

நீண்ட நேர தூக்கம்

நீண்ட நேர தூக்கம்

நீங்கள் மாணவராக இருக்கும் போது, காலையில் முதல் வகுப்பிற்கு செல்லாமல் இருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அந்த வகுப்பின் நோட்ஸ்களை கொடுக்கத் தான் நண்பர்கள் இருக்கிறார்களே!

காதல்

காதல்

நீங்கள் கல்லூரி வாழ்க்கையை மிஸ் பண்ணுவதை நியாயப்படுத்தும் சிறந்த காரணங்களில் ஒன்றாக காதல் உள்ளது. காதலில் விழுந்து விடுதல், டேட்டிங் செல்லுதல் என அனைத்தும் இதில் அடக்கம். மாணவர்களுக்கு மட்டுமே இது போன்ற வாழ்க்கைக்கான நேரம் இருக்கும்.

பயிற்சி

பயிற்சி

பல்வேறு வகையான பயிற்சி வகுப்புகளுக்கும், கள பயிற்சிகளுக்கும் செல்வதால் பெரும்பாலான மாணவர்கள் தங்களுடைய கல்லூரி வாழ்க்கையை மிஸ் பண்ணுகின்றனர்.

வேறு வேறு விதமான சூழல்களில் பணி புரியவும் மற்றும் தங்களுக்குத்தேவையானவற்றை தாங்களே பெற முடிவெடுக்கவும் இந்த பயிற்சிகள் உதவுவதால் மாணவர்களுக்கு இதனால் நன்மைகள் கிடைக்கின்றன.

பார்ட்டிகள்

பார்ட்டிகள்

நீங்கள் கல்லூரியை மிஸ் பண்ண காரணமாக சொல்லப்படும் விஷயங்களில் கல்லூரி பார்ட்டிகளையும் குறிப்பிடலாம். மறுநாளின் வகுப்பு மற்றும் வேலைகளைப் பற்றி கவலைப்படால் பார்ட்டியில் இரவு முழுவதும் கும்மாளமடித்து விட்டு, அடுத்த நாள் மதியம் வரையில் படுக்கையில் துயிலலாம்.

குறும்புகள்

குறும்புகள்

மாணவப்பருவத்தில் உள்ளவர்கள் எவரும் மறக்க இயலா வகையில் எண்ணற்ற குறும்புகளை செய்திருப்பார்கள். குறிப்பாக, விழாக்காலங்கள், முக்கியமான நாட்களான ஹோலி, முட்டாள்கள் தினம் போன்றவை அவர்களுடைய கல்லூரி வாழ்க்கையை தூக்கி சாப்பிட்டு விடும் நாட்களாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion