Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
பார்ப்பதற்கு 'நச்'னு இருந்தாலும் இதுங்க தான் உலகிலேயே செம நச்சுமிக்க பாம்புகளாம்!!
பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் இருக்கும். ஏன் பாம்பு என்றால் எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் உலகில் அனைத்து பாம்புகளுமே மிகவும் நச்சுமிக்கவை என்று சொல்ல முடியாது. பாம்புகள் பார்ப்பதற்கு பயமுறுத்துபவையாக இருந்தாலும், அதனை சீண்டினால் மட்டும் தான், அது நம்மை தாக்குமே தவிர, அமைதியாக இருந்தால் ஒன்றும். செய்யாது.
உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் அசர வைக்கும் 10 பாம்புகள்!!!
இங்கு உலகில் உள்ள மிகவும் மோசமான, நச்சுமிக்க சில பாம்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் அதன் சக்தியைப் பற்றி படித்தால், நீங்களே அதிர்ச்சி அடைவீர்கள். இப்போது அப்படி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் உலகில் உள்ள மிகவும் மோசமான பாம்புகளைப் பற்றி பார்ப்போமா!!!

டைகர் பாம்பு (The Tiger Snake)
இந்த பாம்பு பெரும்பாலும் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளில் தான் காணப்படும். இந்த பாம்பின் தோலானது புலியைப் போன்று கோடுகளைக் கொண்டிருக்கும். இந்த பாம்பு ஒருவரை கொத்தினால், 1 மணிநேரத்திற்குள் நஞ்சுமுறிவை கொடுக்காவிட்டால், உடலில் விஷமானது பரவி, அவர் இறக்க நேரிடும்.

இந்தியன் க்ரைட் (Indian Krait)
இந்தியன் க்ரைட் என்னும் பாம்பானது இந்திய துணைக்கண்டங்களில் பெரும்பாலும் அதிகம் காணப்படும். இந்த பாம்பும் மிகவும் கடுமையான விஷத்தைக் கொண்டவை. இந்த பாம்பு கொத்தினால், வலியெல்லாம் தெரியாது. ஆனால் 1 மணிநேரத்திற்குள் முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், மூச்சுத்திணறி இறப்பை சந்திக்கக்கூடும். ஏனெனில் இதன் நஞ்சானது முதலில் சுவாச மண்டலத்தைத் தான் தாக்கும். மேலும் இவை இருட்டான இடங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

இந்திய நாகப்பாம்பு
இந்திய நாகப்பாம்பும் உலகில் உள்ள மிகவும் மோசமான பாம்புகளில் ஒன்றாகும். மேலம் இந்த பாம்பின் விஷயத்தில் மிகவும் ஆபத்தான கார்டியோ டாக்ஸின் இருப்பதால், இது கொத்திய 1 மணிநேரத்திற்குள் அந்த விஷத்தை முறிக்கும் சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால், நிச்சயம் இறக்க வேண்டியது தான்.

ரஸ்ஸல்ஸ் வைப்பர் (Russell's Viper)
ரஸ்ஸல்ஸ் வைப்பர் மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை கிழக்கு ஆசியாவில் குறிப்பாக பர்மாவில் உள்ள 80 சதவீத மக்களை இந்த பாம்பு கொத்தியுள்ளது. இந்த பாம்பின் வலுவான நியூரோ டாக்ஸின் நஞ்சினால், இதற்கு உடனே போதிய மருத்துவத்தை கொடுக்காவிட்டால், மூச்சுத்திணறி இறக்கக்கூடும்.

இன்லாந்து தைப்பான் (The Inland Taipan)
இன்லாந்து தைப்பான் பெரும்பாலும் ஆஸ்திரேலியா பகுதியில் நிறைந்து காணப்படும். இவ்வகை இனம் உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு இனமாக கருதப்படுகிறது. இந்த பாம்பின் விஷம் மிக கொடிய விஷமாகும். இந்த பாம்பு கடித்து 6 நிமிடம் முதல் 45 நிமிடத்திற்குள் இறக்க நேரிடலாம்.

கருப்பு மம்பா (Black Mamba)
உலகிலேயே மிகவும் வேகமாக ஊர்ந்து செல்லக்கூடிய பாம்பு என்றால் அது கருப்பு நிற மம்பா தான். இந்த பாம்பு கடித்தால், கடுமையான வலி ஏற்படுவதுடன், 45 மணிநேரத்திற்குள் விஷமுறிவு கொடுக்காவிட்டால், இறக்கக்கூடும். மேலம் இந்த பாம்பு 8-8.5 அடி நீளம் இருப்பதுடன், ஒரு மணிநேரத்திற்குள் 14 மைல் தூரத்தைக் கடக்கும் சக்தி கொண்டது.

பெல்சர்ஸ் கடல் பாம்பு (The Belchers Sea Snake)
இந்த பாம்பு கடலில் வாழும்,. இதுவும் மிகவும் கொடிய நஞ்சினைக் கொண்டது. இந்த பாம்பு ஆறு அடி நீளம் கொண்டது. இந்த பாம்பின் நஞ்சானது நாகப்பாம்பை விட ஆறு மடங்கு சக்தி வாய்ந்தது. இது கடித்து 20 நிமிடத்திற்குள் சிகிச்சை மேற்கொண்டு நஞ்சினை நீக்காவிட்டால், இறக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications
