Latest Updates
-
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா?
'பொய் சொல்வதை ஏன் தவிர்க்க வேண்டும்' என்பதற்கான காரணங்கள்!!!
'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது' என்பது நம் இன்றளவும் பயன்படுத்தும் வழக்குமொழி. போஜனம் (உணவு) கிடைக்குமோ, இல்லையோ, பொய் சொன்னால் நம்முடைய நம்பகத்தன்மை காலாவதியாகிவிடும். இதனால் குடும்பம், பணியிடம் மற்றும் பல இடங்களில் மதிப்பிழந்து போய், உண்மையிலேயே போஜனத்திற்கு துன்பப்பட வேண்டி வரும்.
இன்றைய காலத்தில், பெரும்பாலானவர்களின் பிரச்சனையாக இருப்பது பொய் சொல்வது தான். இந்த பழக்கம் உங்களுடைய வாழ்க்கையை மிகவும் கடுமையாக பாதிக்கும். உங்களுடைய நண்பர்கள், மிகவும் விருப்பமானவர்கள் மற்றும் அருகிலுள்ளவர்கள் என அனைவருடைய நம்பிக்கையையும் தகர்த்து விடும் விஷயமாக பொய் உள்ளது. மேலும், பொய் சொல்லுவதால் மிகவும் மோசமான உளவியல் மற்றும் வாழ்க்கைப் பிரச்சனைகளும் வரக்கூடும்.
இந்த நிலை மாறாமல், நெடு நாட்களுக்கு பொய்யையே சொல்ல வேண்டிய சூழலையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பழக்கத்தின் விளைவுகளை எதிர்கொள்ளுவதை விட, பொய் சொல்லுவதை குறைப்பதும், தவிர்ப்பதும் எளிதான விஷயம் என்று நான் நினைக்கிறேன். பொய் சொல்வதால் உங்களுடைய மகிழ்ச்சியும், விருப்பமும் பாதிப்பதை அனுமதிக்காதீர்கள். உங்களுடைய ஆளுமையை மெதுவாகக் கொல்லும் விஷம் தான் 'பொய்' என்பதை என்னால் நிரூபிக்க முடியும். எனவே, பொய் சொல்வதை ஏன் தவிர்க்க வேண்டும் என்ற 7 காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுஙகள்.

உண்மையே வீரம்!
மிகவும் சிக்கலான பொய்யை சொல்வதை விட, மிகவும் மோசமான உண்மையை சொல்வது வீரமாக கருதப்படும். உறுதியான மற்றும் புத்திசாலியான மனிதர்களின் முன்நிறுத்தப்படும் முதன்மையான விஷயம் உண்மை என்பதை நீங்கள் அறிந்த கொள்ள வேண்டும். உண்மையை மட்டுமே பேசுவது மிகவும் கடினம் என்று நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அதுவும் உணர்வுகள் மற்றும் உறவுகளில் இதை மறுக்கவே முடியாது. ஆனால், நீங்கள் இதிலும் கூட உண்மையை சொன்னால், அந்த நண்பர், மனிதர் உங்களுடைய வீரத்தை மதித்திருப்பார்.

நம்பிக்கையை தகர்த்துவிடும்
'நீ என்னிடம் பொய் சொன்னால் நான் வருத்தமடைகிறேன், இப்பொழுதிலிருந்து நான் உன்னை நம்ப மாட்டேன்' என்று பிரெடெரிக் நீட்சே ஒருமுறை சொல்லியிருந்தார். பொய்யர்களை யாரும் நம்புவதில்லை என்பதையே இந்த வார்த்தைகள் குறிப்பிடுகின்றன. எனவே, பொய் சொல்பவர்கள் தங்களுடைய அதிகாரத்தை இழந்து, மதிப்பை இழந்து விடுவார்கள் என்பது திண்ணம். உண்மையை பேசும் மனிதரை அவரை சுற்றியுள்ளவர்கள் மிகவும் போற்றுவார்கள். நம்பிக்கையுடன் இருப்பது என்பது மிகவும் சிறந்த குணமாக இருப்பதால், உங்களுடைய தன்னம்பிக்கை மேலும் வளர உண்மை உறுதுணையாகும்.

குறைந்த மன அழுத்தம்
நீங்கள் உண்மை பேசும் போது, உங்களுடைய மனம் மிகவும் இலேசானதாகவும் மற்றும் சோர்வடையாமலும் இருக்கும். ஏனெனில், நீங்கள் சொல்லிய பொய் வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் உங்களிடம் இல்லை. மேலும், உண்மையை சொல்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, சிந்தனை சக்தி கூர்மையாகி விடுகிறது. எனவே, உங்களுடைய மன அழுத்தத்தின் அளவை குறைக்க விரும்பினால், உண்மையை உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக வைத்திருங்கள். மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழும் மனிதர்களின் உடலில் மட்டுமே 'மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள்' உற்பத்தியாகும். எனவே, உண்மையை சொல்வது உங்களை மிகவும் ஓய்வாகவும், அமைதியாகவும் வைத்திருக்கும்.

மனப் போராட்டங்கள்
பொய் சொல்வதால் உங்களுக்குள் பல்வேறு விதமான மனப் போராட்டங்களும், அழுத்தமும் உருவாவதால், உங்களுடைய எண்ணங்களை அவை பெரிதும் பாதித்து, மேலும் பல பிரச்சனைகளை வரவழைக்கின்றன. மேலும், பொய் சொல்லும் போது, ஒரு பொய்யை காப்பாற்றும் பொருட்டாக, அடுக்கடுக்காக மேலும் பல பொய்களை செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இதன் மூலம் மனப்போராட்டங்கள் உருவாகி, எதையுமே செய்ய முடியாத நிலைக்கு நாம் மாறி விடுகிறோம். அது மட்டுமல்லாமல், உங்களுடைய தன்னம்பிக்கை மற்றும் சுய-மதிப்பு ஆகியவற்றுக்கும் பொய் வேட்டு வைத்து விடும்.

பெரிய பிரச்சனைக்கான அறிகுறி 'பொய்'
எல்லா நேரங்களிலும் பொய் சொல்லும் மனிதர்கள் இருக்கிறார்கள். பேச்சுவார்த்தையின் பொருள் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி இதில் அக்கறை இருப்பதில்லை. இந்த மனிதர்கள், சாதாரணமாக பொய் சொல்லத் தூண்டப்படும் நிலைக்கு ஆளாகி, இதனை ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த வகையில் நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டால், வல்லுநர்களின் உதவியை நாடிச் செல்லுங்கள். இதன் மூலம், உளவியல் ரீதியாக பொய் சொல்வதற்கு நீங்கள் அடிமையாகும் நிலையிலிருந்து, உங்களை விலகி இருக்கச் செய்ய முடியும்.

திருப்தியற்ற வாழ்க்கை
பொய்யர்கள் தங்களுக்காகவே 'வெற்றிகரமான' வாழ்க்கை வரலாறு ஒன்றை உருவாக்குவதை நீங்கள் அறிந்திருக்கலாம், ஆனால் தங்களுக்குள் திருப்தியில்லாத போலி வாழ்க்கையை வாழ்வதை அவர்கள் உணர்ந்திருப்பதில்லை. அவர்களுடைய வெற்றிகள் எல்லாம் ஒன்றுமற்ற விஷயங்கள் என்பதை உணர்ந்து, உண்மையான விஷயங்களில், வெற்றிகளில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் பொய் சொல்லுவதை விட்டு விடும் போது, நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கான கதவு உடனடியாக திறக்கும்.

'பொய்' பிரச்சனை தீர்க்காது
அண்டப்புளுகுகளை அள்ளி விட்டு விட்டால் மட்டும் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா என்ன? ஆம், என்று நீங்கள் சொன்னால் மிகப்பெரிய தவறை செய்து, பிரச்சனையை இரண்டு மடங்காக்குகிறீர்கள் என்று நாங்கள் சொல்வோம். எந்தவொரு சூழலிலும், நேர்மை தான் சிறந்த கொள்கை என்பதை மறந்து விடாதீர்கள். எனவே, பொய் சொல்லும் மோசமான விளையாட்டை நிறுத்தி விட்டு, உண்மையை சொல்லத் தொடங்குங்கள். உங்களுடைய செயல்களின் விளைவை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்.
பொய் சொல்லுவது மிகவும் ஆபத்தானது மற்றும் அழிவைத் தரக் கூடியது ஆகும். எனவே, இந்த பழக்கத்தை நிறுத்த உங்களால் முடிந்ததை செய்து மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் வாழத் தொடங்குங்கள்.



Click it and Unblock the Notifications











