மக்கள் இறந்த பிறகு பேயாவதற்கான சில காரணங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

இறந்த பிறகு ஏன் நாம் பேயாகிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா? உலகத்தில் உள்ள அனைத்து பண்பாடுகளும், அனைத்து சமுதாயனத்தினரும் பேயை நம்புகின்றனர். இதற்கு பலவித காரணங்கள் இருந்தாலும் கூட இந்தியாவில் பரவலாக நம்பப்படும் சில பொதுவான நம்பிக்கைகளைப் பற்றி பார்க்கலாம்.

நம்மில் பலருக்கும் பேய்கள் என்றால் பயம் தான். பேயைப் பற்றிய நினைப்பே நம்மை உறைய வைத்து விடும். இறந்த பிறகு நாம் அனைவருமே பேயாகி விடுவோம் என்ற எண்ணம் இன்னும் பயத்தை அதிகரிக்கவே செய்யும். பின்ன என்ன, இறந்த பிறகு நேராக சொர்க்கத்திற்கு போவதற்கு பதில் பேயாக சுற்றவா ஆசை இருக்கும். பேய்கள் என்றாலே இறை தன்மையற்ற, பயத்தை உண்டாக்கும் ஒன்று. அதனால் தான் நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட புனிதமான கொள்கைகளைப் பின்பற்ற முயற்சிக்கிறோம்.

அனைத்து மதங்களுமே நல்வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. இதனால் இறந்த பிறகு பேயாகாமல் இருக்கலாம் என்று நம்புகின்றனர். சரி, இறந்த பிறகு ஏன் பேயாவோம் என உங்களுக்கு வியப்பாக உள்ளதா? அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிறைவேறாத ஆசைகள்

நிறைவேறாத ஆசைகள்

இறந்தவர்கள் பேயாவதற்கு முதல் மற்றும் மிக முக்கியமான காரணமாக இருப்பது அவர்களது நிறைவேறாத ஆசைகளே. உலகத்தில் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் இதனை நம்புகின்றன.

ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது

ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது

உயிருடன் இருக்கும் போது ஆன்மீக சடங்குகளை பின்பற்றாதவர்கள், இறந்த பிறகு பேயாவார்கள் என சில கலாச்சாரங்கள் நம்புகிறது. அதனால் தான் நாம் உயிருடன் இருக்கும் போது நேர்மறையான ஆன்மீக சடங்குகளை தழுவி, அதன் படி நெறியான வாழ்க்கையை வாழ பல கலாச்சாரங்களும் மக்களை வலியுறுத்துகிறது. ஆன்மீக பாதையில் சென்று மோட்சத்தை பெறுமாறு நம் மூத்தவர்கள் நம்மை நச்சரிப்பதை கண்டிப்பாக நாம் பார்த்திருப்போம். நாம் சமநிலையுடனான வாழ்க்கையை வாழ்ந்திடவும், இறந்த பிறகு மோட்சத்தை அடைந்திடவும், ஒவ்வொரு மதமும் தங்களுக்கென சொந்தமான ஆன்மீக விதிமுறைகள் கொண்டிருக்கிறது. அறிவொளி பெற்ற மனிதன் பிறப்பு மற்றும் இறப்பிற்கு அப்பாற்பட்டவன் என சமயத் திருநூல்கள் கூறுகிறது.

பேராசைகளும்.. விட்டு பிரிய மனமில்லாமையும்..

பேராசைகளும்.. விட்டு பிரிய மனமில்லாமையும்..

பேராசைகள் கொண்டவர்கள் அல்லது பணத்தின் மீதும், சொத்தின் மீதும் அதிக காதலோடு இருந்தவர்கள் இறந்த உடனேயே பேயாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என சில சிந்தனை பள்ளிகள் கூறுகிறது. சொத்தின் மீதோ அல்லது மதுபானத்தின் மீதோ இணக்கத்தை ஏற்படுத்தியவர்கள் இறந்தவுடன் பேயாக மாறுவார்களாம். நிறைவேறாத ஆசைகள் போலவே, உலகத்தில் கிடைக்கும் சுக இன்பங்களின் மீது அவர்களின் ஆன்மா இணை பிரியாமல் இருக்கும். அதனால் தான் அவர்கள் இறந்தவுடன் அவர்களின் ஆன்மா பேயாக இவ்வுலகத்தை வலம் வரும். இப்போது புரிகிறதா நாம் ஏன் இறந்த பிறகு பேயாகிறோம் என்று? அதனால் தான் நாம் கொண்டிருக்கும் பாசம் மற்றும் அன்பை குறைத்து கொண்டு, காமம் மற்றும் பேராசை இல்லாமல் வாழ அனைத்து ஆன்மீக மரபுகளுமே நம்மை வலியுறுத்துகிறது. சொல்லப்போனால், ஆசைகளை மனிதனின் துன்பங்களுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது என பெரிய அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளனர்.

எதிர்மறையாக சிந்திக்கும் குணங்கள்

எதிர்மறையாக சிந்திக்கும் குணங்கள்

இறந்த பிறகு நாம் பேயாக மாறி விடுவோமோ? இப்படி எதிர்மறையாக சிந்திப்பவர்கள் தங்களின் மனதை நச்சுத்தன்மை மிக்கதாக மாற்றுகின்றனர். அப்படிப்பட்ட நச்சுத்தன்மை கொண்ட மனதை உடையவர்களுக்கு கோபம், பேராசை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறையான உணர்ச்சிகள் நிறைந்திருக்கும். ஒருவர் தன் வாழ்க்கையை எதிர்மறையான எண்ணங்களோடு நிரப்பியிருந்தால், அவர் இறந்த பிறகு பேயாகும் சாத்தியங்கள் அதிகம். அதனால் தான் என்னவோ நேர்மறையான எண்ணங்களோடு வாழ வேண்டும் என நம் முன்னோர்கள் கூறி வந்துள்ளனர். சொல்லப்போனால், நம் மனதையும் நம் சுற்றுவட்டாரத்தையும் நேர்மறையாக வைத்திருந்தால், இறந்த பிறகும் கூட அது நமக்கு உதவும். நேர்மறையான ஆற்றல்கள் நம் உடல் மற்றும் ஆன்மாவிற்கு நல்லதாகும்.

கடுமையான ஈகோ

கடுமையான ஈகோ

கடுமையான ஈகோ கொண்டவர்கள் கண்டிப்பாக இறந்த பிறகு பேயாக மாறி விடுவார்கள். அதற்கு காரணம் இந்த உலகத்தில் அவர் முடிக்காத வேலை இன்னும் பாக்கி இருக்கும். உடல் ரீதியான தன் கடமைகளை முடித்த பிறகு மட்டுமே ஒரு ஆன்மா இந்த உலகத்தை விட்டு விடை பிரியும். அதனால் தான் இவ்வகையானவர்கள் பேயாகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Reasons Why People Become Ghosts After Death

Do you know why people become ghosts after death? There are so many reasons but let us discuss a few of the common beliefs.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter