Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
அதிகம் கோபம் கொள்ளும் ஆசிரியரை கையாளுவது எப்படி?
ஒரு மாணவராக உங்களுக்கு அதிகமாக வீட்டுப்பாடம் கொடுக்கும் அனைத்து ஆசிரியர்களுமே கொடுமை படுத்தும் ஆசிரியர்களின் வகையறாக்களின் கீழ் வந்து விடுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. உண்மையிலே கொடுமை படுத்தும் கஷ்டமான வகை ஆசிரியர்களை பற்றி இங்கே பார்க்க போகிறோம். பாடம் கற்பிக்கும் துறையை மிகவும் விரும்பினாலும் கூட சில ஆசிரியர்களால் மாணவர்களை பொறுமையாக கையாள தெரியாது. அவர்களே சகித்து கொள்ள முடியாத ஆசிரியர்கள் பட்டியலில் அடங்குவார்கள்.
அப்படிப்பட்டவர்கள் மாணவர்களுடன் தெளிவான மனநிலையில் நடந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் டீனேஜ் பருவத்தில் உள்ளவர்கள் என்பதால் உண்மையான சூழ்நிலையை உணர்ந்து கொள்ள ஒரு முறைக்கு இரண்டு முறை உங்கள் எண்ணங்களை அலசுங்கள். சில நேரம் ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்களுக்கு ஒரு ஆசிரியரை பிடிக்காமல் போகலாம். ஆனால் அவைகளையெல்லாம் ஓரமாக வைத்து விட்டு ஒரு ஆசிரியர் உண்மையிலேயே கஷ்டப்படுத்துவரா என்பதை நிலைமையை வைத்து புரிந்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களை கேட்டால், சில ஆசிரியரால் தங்கள் பள்ளி வாழ்க்கையையே திகிலாக உள்ளது என்று கூறுவார்கள். ஒரு மாணவராக அவ்வகை ஆசிரியர்களை சமாளிக்க உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். கஷ்டமான ஆசிரியர்களை டீனேஜ் மாணவரான நீங்கள் கையாள சில டிப்ஸ் உள்ளது. உங்கள் குறைகளை எல்லாம் உன்னிப்பாக கவனியுங்கள். பின் இவ்வகை கஷ்டமான ஆசிரியர்களை கையாளுவது மிகவும் கஷ்டம் என்று நீங்கள் உணர்ந்தால் கீழ் கூறிய எளிய, ஆனால் சிறந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
எரிச்சல் ஊட்டாதீர்கள்
எரிச்சலை உண்டாக்கினால் உங்கள் ஆசிரியர் கோபத்தின் உச்சிக்கே போய் விடுவார் என்று தெரிந்தால் நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது நல்லது. பொறுமையாக இருப்பது என்பது ஒவ்வொரு டீனேஜ் மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான டிப்ஸாகும். உங்கள் ஆசிரியர் நிலைமையை மோசமாக மாற்றும் அளவிற்கு ஒரு சூழ்நிலையை நீங்களாகவே உருவாக்கி விடாதீர்கள்.
குறைபாடற்ற மாணவராக நடந்து கொள்ளுங்கள்:
குறை கூறிக் கொண்டிருக்கும் ஆசிரியரை கையாள வேண்டுமானால், அந்த ஆசிரியர் சம்பந்தப்பட்ட அனைத்திலேயும் நீங்கள் ஒரு குறைபாடற்ற மாணவராக மாறி விடுங்கள். வீட்டுப்பாடங்களை தினமும் செய்து, ஒழுக்கமாகவும் பணிவாகவும் நடந்து கொள்ளுங்கள். பல ஆசிரியர்களுக்கு குறைபாடற்ற ஒழுக்கமான மாணவர்களையே பிடிக்கும். அதனால் இந்த டிப்ஸை பின்பற்றி கஷ்டமான ஆசிரியர்களை சுலபமாக கையாளலாம்.
உரையாடல்
நேரடியான அணுகுமுறையை பயன்படுத்த வேண்டுமென்றால், அதற்கு உங்கள் ஆசிரியரிடம் நேரடியாக பேசி விடுவதே சிறந்த வழியாகும். உங்கள் இருவருக்கும் இடையே தவறான புரிதல் இருந்தால் சுலபமாக அதனை சரி செய்து விடலாம். வெளிப்படையாக பேசினால் பிரச்சனைகள் எல்லாம் தெளிவாகி தீர்வு கிடைத்து விடும்.
பெற்றோர்களை உட்படுத்துங்கள்:
உங்கள் பிரச்சனைகளை உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள். பல நேரங்களில் இவ்வகையான சூழ்நிலைகளை உங்கள் பெற்றோர்கள் சுலபமாகவும் சிறப்பாகவும் தீர்த்து வைத்து விடுவார்கள். உங்கள் பெற்றோரை உங்கள் ஆசிரியர் அல்லது தலைமை பொறுப்பில் வகிப்பவரிடம் நேரடியாக பேச சொல்லுங்கள். டீனேஜ் மாணவர்கள் இந்த டிப்ஸை பயன்படுத்தினால் பிரச்சனைகளை சுலபமாக தீர்த்து விடலாம்.
தலைமை பொறுப்பு வகிப்பவரை சந்தியுங்கள்
உங்கள் ஆசிரியரிடம் நேரடியாக பேசியும் உங்கள் பிரச்சனைகள் தீரவில்லை என்றால் தலைமை பொறுப்பு வகிக்கும் உங்கள் பள்ளியின் முதல்வரை சந்தியுங்கள். ஆனால் உங்கள் ஆசிரியை பற்றி ஆணித்தனமான புகார் இருந்தால் மட்டுமே முதல்வரிடம் பேசுங்கள்.
பொறுமையாக இருங்கள்
பொறுமையாக இருக்க கற்றுக் கொள்வது என்பது அனைத்து டீனேஜ் மாணவர்களுக்கும் வழங்கப்படும் பொதுவான ஒரு அறிவுரை. கஷ்டமான ஒரு ஆசிரியரை கையாளுவதற்கும் இதனையே கடைப்பிடிக்க வேண்டும். அவரிடம் எதிர்த்து பேசாமல் அமைதியாக இருங்கள். எதிர்ப்பார்க்காத நேரத்தில் திடீரென அவரிடம் மோசமாக நடந்து கொள்ள கூடாது.
விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
ஒவ்வொரு ஆசிரியருக்கும் தன்னுடைய மாணவர்கள் சில ஒழுங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனை நன்றாக புரிந்து கொண்டு அவர்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்களோ அவைகளை பின்பற்றுங்கள். கஷ்டமான ஆசிரியர்களை கையாள இதுவும் கூட ஒரு சிறந்த வழியாகும்.



Click it and Unblock the Notifications