Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
சட்ட விரோதமாக மக்கள் சாப்பிடும் அழிந்து வரும் உயிரின உணவுகள்!!!
நீங்கள் மிகவும் அதிகமாக பயணங்கள் செய்பவராக இருந்தால் உங்களுக்கு சாகசங்கள் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காக இருக்கும்! வீடுகளில் தவறாக கருதப்படும் பல்வேறு செயல்களும் இது போன்ற பயணங்களில் சர்வ சாதாரணமாக பின்பற்றப்பட்டு வரும். இதில் மிகவும் கவர்ச்சியான பகுதியாக இருப்பது அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும் வித்தியாசமான உணவுகளே. சட்டப்படியானதா அல்லது சட்டத்திற்கு புறம்பானதா என்ற கவலைகள் இல்லாமல் பல்வேறு வகையான உணவுகளை சாப்பிட நீங்கள் விரும்புவீர்கள். மேலும், சில உணவகங்களும் சட்டத்திற்கு புறம்பானது என்று கருதப்படும் தடை செய்யப்பட்ட உணவுகளை முக்கியமான விருந்தினர்களுக்கு வழங்குவதை பெருமையாக கருதி செயல்பட்டு வருகின்றன.
உலகில் உள்ள பார்களில் விற்கப்படும் விந்தையான உணவுகள்!!!
பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை உணவாக சாப்பிடுவது சட்டத்திற்கு புறம்பானதாகும். எனினும், ருசியான சாப்பாட்டை மட்டுமே கருத்தில் கொள்ளும் பலருக்கும் இது போன்ற விஷயங்களில் அக்கறையில்லை. நீங்கள் ஒரு ஆர்வமான பயணியாக உலகைச் சுற்றி வரும் வேளைகளில், அற்புதமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை. இந்த விருப்பங்களை எப்படி திருப்த்திப்படுத்துவது? இதனை சத்தமில்லாமல் கடத்தல் என்று சொல்லலாம். இந்த செயல்களை செய்ய பலரும் ரிஸ்க் எடுக்கவும் மற்றும் இந்த பழக்கங்களை விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர்.
பழங்குடியினரின் விநோதமான உணவுகள்!!!
மேலும், மருத்துவ குணங்களுக்காகவும் இந்த உணவுகளை மக்கள் சாப்பிடுகின்றனர். பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் தத்தம் நாடுகளில் உள்ள உணவு தொடர்பான சட்டங்களை ருசிக்காக மீறவும் முயற்சி செய்து வருகின்றனர். எப்படியாயினும், அழிந்து வரும் உயிரினங்களைக் காக்கும் பொருட்டாக நம் நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உணவு தொடர்பான சட்டங்களை கடைபிடிக்க வேண்டும். இது போல அழிந்து வரும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும் சில சட்டத்திற்குப் புறம்பான உணவுகளைப் பற்றி இங்கே விவரித்துள்ளோம்.

ஓர்டோலன்ஸ் (Ortolans)
சிறிய வகை பாடும் பறவையினத்தைச் சேர்ந்த ஓர்டோலன்ஸ் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ள பறவையாகும். இந்த பறவையை சாப்பிடுவது சட்டத்திற்கு புறம்பானது. இந்த பறவையை யாராவது வேட்டையாடுவதை பிரான்சில் கண்டால் மிகவும் அதிகமான அபராதம் விதிக்கப்படுகிறது. நிலைமை இப்படியிருக்கையில், ஒரு டஜன் ஓர்டோலன்ஸ் பறவைகளை நியூயார்க் நகரத்திற்கு கடத்திச் சென்று சாப்பிட்ட வழக்கு இன்றும் நடந்து வருகிறது.

லயன் பர்கர் (சிங்கக் கறி)
கோடைக் காலங்களில் சமையல்காரர்கள் லயன் பர்கர்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் காண முடியும். இன்றைய நாட்களில் சிங்கக் கறி மிகவும் முதன்மையான உணவுகளில் ஒன்றாக மாறி வருகிறது. இது மனிதர்கள் சாப்பிடும் இயற்கைக்கு மாறான உணவுகளில் ஒன்றாகும்.

ஆமை முட்டை மற்றும் இறைச்சி
ஆசிய உணவு அட்டைகளில் அடிக்கடி காணப்படும் வகையறாக்களில் ஒனறு தான் ஆமை முட்டை மற்றும் ஆமை கறி ஆகியவை. சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆமை வகைகளில் பலவற்றையும் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்த்திருந்தாலும் இந்த அவல நிலை தொடர்ந்து வருகிறது. ஆமையினம் அழிந்து வருகிறது.

ப்ளூஃபின் டுனா (Bluefin Tuna)
இந்த உயிரினம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது, ஆனாலும் சுவையான உணவுகளில் முதன்மையான இடத்தில் உள்ளது. இதுவும் மனிதர்கள் சாப்பிடும் வித்தியாசமான உணவுகளில் ஒன்றாகும். இந்த மீன்களை காப்பாற்ற சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாங்கோலின் (Pangolins)
மருத்துவ குணங்களுக்காக மனிதர்களால் சாப்பிடப்பட்டு அழிந்து வரும் உயிரினங்களின் வரிசையில் அடுத்து வருவது பாங்கோலின். தாய்ப்பாலை அதிகரிக்கவும், புற்றுநோயை குணப்படுத்தவும் முடியும் என்பது தான் இந்த விலங்குகளின் அழிவுக்கு காரணமாக உள்ளது.

பாம்புகள்
சீனாவில் சாப்பிடப்பட்டு வரும் பாம்புகளில் பலவும் இன்று அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலை நோக்கி படமெடுத்து ஓடி வந்து சேர்ந்துள்ளன. சீனாவில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் செய்பவர், தன் ஓட்டலின் பின் பகுதிக்கு சென்று சில பாம்புகளை அழகாக பிடித்து, அற்புதமாக சமைத்து சில நிமிடங்களிலேயே தனது வாடிக்கையாளருக்கு கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவது சாதாரணமாக நடக்கும் விஷயமாக உள்ளது. சீன மக்களின் இந்த பசிக்காக சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் கூட பாம்புகள் எல்லைகளைத் தாண்டி சீனாவிற்கு கடத்திக் கொண்டு செல்லப்படுகின்றன.

உடும்பு
உடும்பும் மனிதர்களால் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டு உணவாகி வரும் உயிரினமாகும். இந்த உயிரினத்தை சாப்பிட்டதற்காக ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தவறுக்கு தண்டணையை அவர்கள் பஹாமாஸ் சிறையில் அனுபவித்து வருகின்றனர்.

சிலந்திகள்
மனிதர்கள் சாப்பிட்டு வரும் அழிந்து வரும் உயிரின உணவுகளில் ஒன்றாகவும், வித்தியாசமான உணவுகளில் ஒன்றாகவும் சிலந்திகள் உள்ளன. இந்த அழிந்து வரும் உயிரினங்களுக்கான பட்டியலில் முதலில் வரும் உயிரினமாக சிலந்திகள் உள்ளன. இன்றும் கூட உலகளவில் பல இடங்களிலும் சுவையான உணவுகளில் ஒன்றாக சிலந்திகள் பரிமாறப்பட்டு வருகின்றன.
பயணங்கள் செய்வது உற்சாகமாக இருப்பதோடு, ருசியாகவும் கூட இருக்கிறது. எனினும், இயற்கையை சீரழிக்காமலும், வருங்கால சந்ததியினரை மனதில் கொண்டு உயிர் சமநிலையை அழிக்காமலும் இருக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மனிதர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக அழிந்து வரும் உயிரினங்களை உணவாக உண்பதும், வேட்டையாடுவதும், மனிதர்கள் அவர்களுக்கு அவர்களே சவக்குழிகளை வெட்டிக் கொள்வதைப் போன்றதாகும்.



Click it and Unblock the Notifications
