உங்கள் காதலிக்கான முதன்மையான 9 கிறிஸ்துமஸ் பரிசுகள்!!!

By Ashok CR

ஒவ்வொரு வருடத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது காதலர்களும் நண்பர்களும் பல பரிசுப் பொருட்களை ஒருவருக்கொருவர் பரிசளித்து மகிழ்வர். அதனால் ஒவ்வொருவருக்கும் ஆர்வங்கள் ஏற்பட்டு சந்தோஷ களிப்புடன் திகழ்வார்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலையில் பரிசுப் பொருட்களை பிரித்து பார்க்க குழந்தைகள் விருப்பப்படுவார்கள். உங்கள் பெற்றோர்கள் அல்லது குழந்தைகளுக்கேற்ற பரிசுகளை வாங்குவது ஒரு வகை என்றால் உங்கள் காதலிக்காக பரிசுப் பொருட்கள் வாங்குவது என்பது மற்றொரு வகை.

நீங்கள் தேர்வு செய்யும் பரிசு பொருட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும். அது உங்களை பற்றியும் உங்களுக்கு அவள் எவ்வளவு முக்கியம் என்பதையும் விளங்கும். நீங்கள் அவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு அளிக்கும் பரிசு பொருட்களை வைத்து தான் அவர்கள் உங்களையும் அவர்கள் மீதான உங்கள் உறவையும் அவர்கள் மதிப்பிடுவார்கள். நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் காதலின் அளவை வெளிப்படுத்தும் வகையிலும் அது அமையும். அர்த்தமுள்ள பரிசுகளை கொடுக்கும் போது அவர்கள் மீதான உங்கள் காதலின் அளவையும் அவர்களை நீங்கள் எந்தளவு புரிந்து வைத்துள்ளீர்கள் என்பதையும் அது தெளிவாக காட்டும். அப்பேற்பட்ட பரிசுப் பொருட்களை வாங்குவது ஒன்றும் பெரிய கம்பு சுத்தும் வேலை இல்லை. ஆனால் அதற்காக அதனை அவ்வளவு சுலபமாகவும் கருதி விட முடியாது.

உங்கள் காதலிக்கு எந்த மாதிரியான பரிசுப் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள அதிகளவில் ஆர்வமும், அவள் பேசுவதை கவனிக்கும் திறனும் இருக்க வேண்டும். எந்த பொருட்களை பரிசளித்தால் அவள் அளவுக்கடந்த ஆனந்தத்தை பெறுவாளோ அதனை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் காதலிக்கு எந்த மாதிரியான பொருளை பரிசளிப்பது என்பதை தீர்மானிக்க முடியவில்லை என்றால் உங்கள் அறிவுக்கு எட்டிய வரையில், அவர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும் பொருளை தேர்ந்தெடுங்கள் அல்லது அவர்களுக்கு என்னென்ன தேவை என்ற பட்டியலை அவர்களிடமே கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். எந்த ஒரு பாதகமின்றி உங்கள் உறவை தொடர இதனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பைகள்

பைகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உங்கள் காதலிக்கு பாதுகாப்பான பரிசை கொடுக்க வேண்டுமானால் பையை தேர்ந்தெடுக்கலாம். பொதுவாக பெண்களுக்கு பைகள் என்றால் பிரியம். அதிலும் எத்தனை பைகள் இருந்தாலும் அவர்களுக்கு அதன் மீதான தாகம் குறைவதில்லை. அதனால் அவர்களிடம் எத்தனை பைகள் இருந்தாலும் அதனை பற்றி கவலைப் படாமல் இன்னொரு பையை அவர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.

கை கடிகாரங்கள்

கை கடிகாரங்கள்

கடைசி நிமிட ஷாப்பிங் செய்ய தான் நேரம் இருக்கிறது என்றால் மற்றுமொரு பாதுகாப்பான பரிசுப்பொருட்கள் பட்டியலில் கை கடிகாரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். பல பெண்களுக்கு கை கடிகாரங்கள் கலக்ஷன் வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இதில் இன்னொரு நன்மையையும் அடங்கியுள்ளது; நீங்கள் வாங்கும் கை கடிகாரம் எப்படியிருந்தாலும் சரி, அவர்களின் ஏதாவது ஒரு உடையோடு அது கண்டிப்பாக ஒத்துப்போகும்.

கைப்பேசி

கைப்பேசி

உங்கள் காதலிக்கு தொழில்நுட்பத்தை பற்றி அவ்வளவாக தெரியவில்லை என்றால் இந்த பரிசுப் பொருளை அளித்து அவர்களை குஷிப்படுத்தலாம். பல அழகிய கைப்பேசிகள் இன்று சந்தையில் கிடைக்கிறது. அதனுடன் சேர்த்து ஸ்டைலாக இருக்கும் கைப்பேசிகளை தேர்ந்தெடுங்கள். இந்த பொருளை கொடுப்பதால் நீங்கள் எப்போதும் அவர்களுடன் தொடர்பில் இருக்க விரும்புவதை அது தெளிவாக எடுத்துக்காட்டும்.

சுற்றுலாப் பயணம்

சுற்றுலாப் பயணம்

உங்கள் காதலிக்கு ஒரு சுற்றுலாப் பயணத்தை கூட பரிசாக அளிக்கலாம். நீங்கள் இருவருமே செல்ல விரும்பிய ஒரு விடுமுறை தளத்தை தேர்ந்தெடுத்து அதனை கிறிஸ்துமஸ் பரிசாக அவர்களுக்கு அளித்து அவர்களை ஆச்சரியப்படுத்துங்கள். எப்படியானாலும் அது விடுமுறை காலம் வேற, அதனால் இதனை பரிசாக அளிக்க இது தகுந்த நேரமாகவும் இருக்கும்.

உள்ளாடைகள்

உள்ளாடைகள்

எப்படி பார்த்தாலும் இது மரபு சார்ந்த பரிசு பொருட்கள் கிடையாது. ஆனால் இந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கருவாக கொண்ட உள்ளாடைகள் சில கடைகளில் கிடைக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கொஞ்சம் கலகலப்பு இருந்தால் தப்பில்லையே.

நகைகள்

நகைகள்

உங்கள் இருவரின் நெருக்கத்தை பொறுத்து அல்லது உங்கள் காதல் எந்த நிலையில் உள்ளதோ அதனை பொறுத்து நகைகளை பரிசாக கொடுக்கலாம். உங்கள் காதல் சரியான நிலையில் பயணிப்பதால், நகைகளை பரிசாக கொடுப்பது சரியாக இருக்கும் என நினைத்தால் தயங்காமல் கொடுங்கள்.

அழகு சாதனங்கள்

அழகு சாதனங்கள்

பெண்கள் சம்பந்தப்பட்ட அழகு சாதனங்கள் என்றாலும் அது பாதுகாப்பான பரிசுப் பொருட்களாகவே பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் தங்களிடம் எவ்வளவு இருந்தாலும் சரி, மேலும் புதிய பொருட்களை வைத்துக் கொள்ள அவர்கள் தயங்குவதில்லை.

நீங்களே சமைத்த உணவு

நீங்களே சமைத்த உணவு

உங்கள் காதலிக்காக நீங்களே சமைத்தால், அதுவும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கியமான தினத்தின் போது சமைத்தால், அவர்கள் அப்படியே அசந்து போய் விடுவார்கள் தானே. நீங்கள் சமைத்த உணவை அன்று இரவு இருவரும் சேர்ந்து சாப்பிட்டு பொன்னான நேரத்தை ஒன்றாக செலவிடுங்கள்.

ஷாப்பிங் டேட்

ஷாப்பிங் டேட்

அனைத்து வகையான பரிசுப்பொருட்களையும் ஏற்கனவே கொடுத்து விட்டீர்களா? அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையா? கவலையை விடுங்கள். அவர்களை ஒரு ஷாப்பிங் டேட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். ஷாப்பிங்கின் போது பொருட்களை பரிசளித்தால் எந்த பொண்ணுக்கு தான் பிடிக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, December 17, 2013, 13:15 [IST]
Desktop Bottom Promotion