Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா?
குளிர்காலத்தில் படிப்பதற்கு ஏற்ற மிகச்சிறந்த புத்தகங்கள்!!!
'படிக்கும் பழக்கம் முழு மனிதனை உருவாக்குகிறது' என்ற வார்த்தை நம் வாழ்வில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. நாம் எந்த வகையான புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறோம் மற்றும் படிக்கிறோம் என்பதைப் பொறுத்து, நாம் எப்படிப்பட்ட மனிதன் என்பதை தீர்மானிக்க முடியும். நீங்கள் ஒரு புத்தகப்பிரியர் என்றால் குளிர்காலத்தில் எந்த புத்தகம் படிக்கலாம் என்று தேடிக் கொண்டிருப்பீர்கள். குளிர்காலம் ஜில்லிடும் குளிருடன், இழந்த காதலின் நினைவுகளையும் கொண்டு வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குளிர்கால காற்று உங்களிடம் சொல்வதற்கு சில கதைகளையும் மற்றும் அந்த காலத்தில் படிப்பதற்கான அற்புதமான புத்தகங்களையும் கொண்டு வந்தால், நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலி தான்.
ஒரு பரபரப்பான புத்தகமும், சுவையான காப்பியும் உங்கள் குளிர்காலத்தை மிகவும் சிறப்பானதாக மாற்றி விடும். வருடத்தின் குளுமையான பருவமாக இருக்கும் இந்த குளிர்காலத்தில் இண்டர்நெட்டில் படிப்பதற்கு நன்றாக இருக்கும் விஷயங்களை தேடவும் கூடும். உங்கள் வேலையை சுலபமாக்கவும், இது போன்ற புத்தகங்களை வாங்கி உங்களுடைய ஷாப்பிங் அற்புதமாக அமையவும், குளிர்காலத்திற்கு ஏற்ற சில புத்தகங்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம். மிகச்சிறந்த நிகழ்வுகள் பலவும் நிகழ்ந்துள்ள இந்த ஆண்டு, எழுத்துத் துறைக்கும் அற்புதமான ஆண்டாகவே இருந்துள்ளது. பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டும், இன்னும் சில நல்ல புத்தகங்கள் வெளவரவும் வரிசையில் காத்திருக்கும் ஆண்டாக இது உள்ளது. இந்த ஆண்டில் வெளிவந்திருக்கும் புத்தகங்களில் எதைப் படிக்கலாம், எதை விடலாம் என்று நீங்கள் குழம்பிப் போகும் அளவிற்கு நல்ல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
குளிர்காலத்தில் உங்கள் டேஸ்ட்டுக்கு மிகவும் ஏற்ற புத்தகத்தை கண்டறியவும், தேர்ந்தெடுத்து படிக்கவும் மேற்கொண்டு படிக்கத் தொடங்குங்கள்.

Elizabeth Strout and The Burgess Boys
ஜிம் மற்றும் பாப் என்ற இரு சகோதரர்களின் கதையை ஆசிரியர் சொல்லுவதாக இருக்கும் இந்த புத்தகமானது குளிர்காலத்தில் படிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும். டீன்-ஏஜ்-ல் உள்ள அவனுடைய சகோதரிக்கு ஒரு பிரச்னை வருகிறது. இந்த சகோதரர்கள் தங்களுடைய சகோதரியிடம் சென்று, அவளுடைய பிரச்னைகளை சமாளிக்க உதவுகிறார்கள். உண்மையிலேயே அது படிக்க வேண்டிய புத்தகமாகவும் மற்றும் நிறைய எதிர்பாராத திருப்பங்களுடனும் அந்த புத்தகம் இருக்கும்.

The Middle C
வில்லியம்.எச். காஸ் (William.H. Gass) என்ற ஆசிரியரால் எழுதப்பட்ட இந்த புத்தகம் ஒரு உண்மையான குளிர்கால பரிசாகும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந் புத்தகம், குளிர்காலத்தில் படிக்க ஏற்ற மிகச்சிறந்த புத்தகமாகும். மனிதனின் அடையாளத்தை நோக்கிய ஒரு முழுமையான தேடலாக இருக்கும் இந்த புத்தகம், உங்களுக்கு அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தரும். இந்த வருட குளிர்காலத்தில் இந்த புத்தகத்தை படித்து மகிழுங்கள்.

Maeve Binchy and A week in Winter
அருமையான வேலையைச் செய்திருக்கும் ஆசிரியர் மேவெ பின்ச்சியின் புத்தகம், இந்த ஆண்டின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக உள்ளது. அயர்லாந்தின் மேற்கு கடற்கரையில் நிகழும் பயணம் பற்றியதாக இந்த புத்தகம் உள்ளது. இந்த புத்தகத்தை நீங்கள் படிக்கத் தேர்ந்தெடுத்தால், மிகச்சிறந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்த அனுபவம் கண்டிப்பாக கிடைக்கும்.

The Love Song of Johny Valentine
உணர்வுகளின் அணிவகுப்பை நோக்கி உங்களை வழி நடத்திச் செல்லும் புத்தகமான இதனை எழுதியவர் டெட்டி வாய்னே என்ற ஆசிரியர். ஒரு சிறுவன் அவனாக இயல்பு நிலையில், இருப்பதற்காக யாரும் அவனுடைய விசிறிகளாக இருக்கவில்லை என்பதை உணருகிறான். இதுவும் குளிர்காலத்தில் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாகும்.

Tenth of December
ஜியார்ஜ் சாண்டர்ஸின் புத்தகங்களில் மிகச்சிறந்த ஒன்றாக இது உள்ளது. தொடர்கதையின் நான்காவது புத்தகமாக வந்திருக்கும் இந்த புத்தகத்தை குளிர்காலத்தில் படிக்க வேண்டிய சிறந்த புத்தகம் என்பதை உறுதியாக சொல்ல முடியும். நீங்கள் ஜியார்ஜ் சாண்டர்ஸின் புத்தகங்களை மிகவும் விரும்புபவர் என்றால் உங்களுக்கு அற்புதமான வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.

Middle Men
சிறு கதைகளை விரும்புபவராக நீங்கள் இருந்தால், இந்த புத்தகம் உங்களுக்கு மிகவும் ஏற்றது. குளிர்காலத்திற்கு மிகவும் ஏற்ற புத்தகமான இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக் கூடிய விஷயங்கள் அதிகம் உள்ளன. இந்த புத்தகத்தின் கதைத் தொகுப்புகள் உங்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். நன்றாக படித்து சிரித்து மகிழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஜிம் காவின் எழுதிய இந்த புத்தகம் உங்கள் வேட்கையைத் தணிக்கும்.
இந்த ஆண்டில் எண்ணற்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த புத்தகங்களைப் பட்டியலிடுவதும் மற்றும் அதில் உங்கள் இரசனைக்கேற்ற புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கத் துவங்குவதும் தான். இந்த புத்தகங்களைப் படித்து, அகமகிழ்வான வாசிப்பு அனுபவத்தைப் பெறுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.



Click it and Unblock the Notifications