Just In
- 5 hrs ago
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு
- 6 hrs ago
உங்க குழந்தையோட ராசிப்படி... நீங்க அவர்கள இப்படி வளர்த்தாதான் பெரிய ஆள வருவாங்களாம் தெரியுமா?
- 6 hrs ago
உலகம் முழுவதும் பெரும்பாலான ஆண்களுக்கு மரணம் ஏற்பட இந்த 5 நோய்கள்தான் காரணமாக உள்ளதாம்... ஜாக்கிரதை!
- 7 hrs ago
இந்த உணவுகளை சாப்பிட்டா முடி அதிகமா கொட்டி சீக்கிரம் வழுக்கை வந்துடுமாம்..
Don't Miss
- News
40 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை குறிவைத்தார் என நினைக்கவில்லை! சரத்பவார் அதிர்ச்சி
- Movies
நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் எப்போது?.. சுடசுட வெளியான தகவல்!
- Sports
Breaking - ரோகித் சர்மா விலகல்.. பும்ரா, ரிஷப் பண்ட்க்கு புதிய பதவி.. பிசிசிஐ அதிரடி முடிவு
- Finance
கணவனை வாடகைக்கு விட்ட மனைவி.. அடபாவிகளா.. இப்படி கூடவா பண்ணுவாங்க..?!
- Automobiles
சொன்னபடியே 2வது காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திட்டாங்க... இதுவும் மேட்-இன்-சென்னை தயாரிப்புதாங்க!
- Technology
Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
22/02/2022: பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த அதிசய நாளின் சிறப்பு என்ன தெரியுமா?
இன்றைய தேதி மிகவும் அரிதான மற்றும் அபூர்வமான தேதியாகும், ஏனெனில் இது ஒரு பாலிண்ட்ரோம் மட்டுமல்ல, ஒரு ஆம்பிகிராமும் கூட. அரிய தேதி செவ்வாய் கிழமை வருவதால், மக்கள் அதை 'இரண்டுகளின் நாள்' என்று அழைக்கிறார்கள்.
22 பிப்ரவரி 2022 எண்ணில் 22/02/2022 என எழுதப்பட்டுள்ளது, எனவே, முன்னோக்கியும் பின்னோக்கியும் ஒரே மாதிரியாகப் படிக்கப்படுவதால் இது ஒரு பாலிண்ட்ரோம் ஆகும். அப்படியே தலைகீழாக இருப்பதால் அதுவும் அம்பிகிராம். இந்த தேதி மிகவும் அபூர்வமான ஒன்று.

அதிசய தேதி
இன்றைய தேதியான 22022022 இலிருந்து ஸ்லாஷை எடுத்தால், அதில் இரண்டு இலக்கங்கள் மட்டுமே இருப்பதைக் கவனிப்போம். 0 மற்றும் 2. பாலிண்ட்ரோம் மற்றும் ஆம்பிகிராம் ஆகியவை பிரிட்டிஷ் தேதி வடிவமைப்பில் (dd-mm-yyyy) வேலை செய்கின்றன, ஆனால் US தேதிக்கு அல்ல. பிப்ரவரி 22, 2022க்கான வடிவம் (mm-dd-yyyy).

எப்போது வரும்?
ஒரு முன்னணி இணையதளத்தின்படி, போர்ட்லேண்ட் பல்கலைக்கழகத்தின் மின் பொறியியல் பேராசிரியரான அஜீஸ் எஸ். இனான், mm-dd-yyyy வடிவத்தில், பாலிண்ட்ரோம் நாட்கள் ஒவ்வொரு மில்லினியத்தின் முதல் சில நூற்றாண்டுகளில் மட்டுமே ஏற்படும் என்று கணக்கிட்டுள்ளார்.

இதற்கு முன் தேதி எப்போது வந்தது?
டாக்டர் இனான் கூறியதாக ஒரு முன்னணி இணையதளம் மேற்கோள் காட்டியுள்ளது, "mm-dd-yyyy வடிவத்தில், தற்போதைய மில்லினியத்தில் (ஜனவரி 1, 2001 முதல் டிசம்பர் 31, 3000 வரை) 36 பாலிண்ட்ரோம் நாட்களில் முதலாவது பாலிண்ட்ரோம் அக்டோபர் 2, 2001 ஆகும் (10-02-2001) மற்றும் கடைசி நாள் செப்டம்பர் 22, 2290 (09-22-2290) ஆகும்."

21 நூற்றாண்டில் எத்தனை பாலிண்ட்ரோம் உள்ளது?
21 ஆம் நூற்றாண்டில் mm-dd-yyyy வடிவத்தில் 12 பாலிண்ட்ரோம் நாட்கள் உள்ளன. முதல் பாலிண்ட்ரோம் அக்டோபர் 2, 2001 (10-02-2001) அதேமாதிரி கடைசி பாலிண்ட்ரோம் செப்டம்பர் 2, 2090 (09-02-2090) தேதிகளில் வரும்.

dd-mm-yyyy வடிவத்தில் எப்போது வரும்?
dd-mm-yyyy வடிவமைப்பைக் கருத்தில் கொண்டு, நடப்பு நூற்றாண்டில் 29 பாலிண்ட்ரோம் நாட்கள் உள்ளன. முதலாவது 10 பிப்ரவரி 2001 அன்று (10-02-2001) கடைசியாக ஒரு லீப் நாளில் விழும்! 29 பிப்ரவரி 2092 (29-02-2092) 21 ஆம் நூற்றாண்டின் கடைசி பாலிண்ட்ரோமிக் நாளாகும்.