Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
பொங்கல் அன்று இந்த பொருட்களில் ஒன்றை தானம் செய்தால் உங்க வீட்டில் பணக்கஷ்டம் எப்போதுமே வராதாம்...!
பொங்கல் பண்டிகை இந்தியா முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பொங்கல் இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தாலும் தமிழர்களுக்கு இது மிகவும் முக்கியமான விழாவாகும். சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அன்று இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையின் சிறப்பு அம்சங்களில் ஒன்று தானம் செய்வதும், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதும் ஆகும்.ஏழை, எளிய மக்களுக்கு இந்த நாளில் பல்வேறு பொருட்களை நன்கொடையாக வழங்குகின்றனர். மற்ற நாட்களை விட பொங்கல் தினத்தில் தர்மம் செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொங்கல் நாளன்று தானம் செய்ய வேண்டிய எளிய மற்றும் விலைகுறைவான பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எள் விதைகள்
சாஸ்திரங்களின்படி, பொங்கல் நாளில் எள் தானம் செய்வது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. விஷ்ணு, சூரியன், சனிதேவர் ஆகியோருக்கு எள் வைத்து வழிபடுகின்றனர். அதனால் இந்த நாளில் எள்ளை தானம் வழங்குவது இந்த கடவுள்களை மகிழ்ச்சியாக்கும்.
பழங்கள்
அனைத்து தானங்களிலும் பழங்கள் மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. அவை ஊட்டச்சத்தை வழங்குவதன் மூலம் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இந்து சடங்குகளின்படி, அன்னதானத்தை விட சிறந்த தானம் எதுவுமில்லை.
போர்வைகள்
பொங்கலின் போது வெதுவெதுப்பான போர்வைகளை தானம் செய்வதும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு போர்வைகளை தானமாக வழங்க வேண்டும். இவை தொடர்ந்து வரும் கடுமையான குளிர்காலத்தில் இருந்து அவர்களைப் பாதுகாக்க உதவும். பழைய, பயனற்ற அல்லது குப்பை பொருட்களை தானம் செய்வது நல்லதல்ல என்பதால் போர்வைகள் புதியதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெல்லம்
இனிப்பு சுவை கொண்ட வெல்லம், சர்க்கரையுடன் ஒப்பிடும்போது ஆரோக்கியமான விருப்பமாகும். பொங்கலன்று வெல்லம் தானம் செய்வதால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
ஆடைகள்
பொங்கலன்று ஏழைகளுக்கு தானம் செய்ய ஒரு ஜோடி ஆடைகள் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இந்த ஆடைகள் பழையதாகவோ, பயன்படுத்தப்பட்டதாகவோ அல்லது கிழிந்ததாகவோ இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எப்பொழுதும் புதிய ஆடைகளை தானம் செய்வதே பொருத்தமானதாக கருதப்படுகிறது. கம்பளி ஆடைகளை தானம் செய்வது, குளிர் காலநிலையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவைப்படுபவர்களுக்கு உதவும்.
பட்டம்
இந்தப் பண்டிகையின் சிறப்புச் சடங்குகளில் காத்தாடிப் பறக்க விடுவதும் ஒன்றாகும். எனவே, வண்ணமயமான காத்தாடிகள் பொங்கலின் போது குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் சிறந்த பரிசுகளில் ஒன்றாகும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு காத்தாடிகளை வழங்குவதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் பரப்பலாம்.
சில்வர் பாத்திரங்கள்
சில்வர் பாத்திரங்கள் மகர சங்கராந்தியின் போது தானம் செய்வதற்கு மிகவும் உகந்த பொருளாகும். அவை ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் குறிக்கின்றன. நன்கொடையாளரின் திறனைப் பொறுத்து புதிய உலோகப் பாத்திரம் வழங்கப்பட வேண்டும்.
பொங்கல் அன்று நன்கொடைகளை வழங்குவது புத்தாண்டைத் தொடங்க ஒரு நேர்மறையான குறிப்பு மற்றும் ஆண்டு முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வர முடியும். இருப்பினும், ஒரு நல்ல செயல் உங்கள் எல்லா பாவங்களையும் கழுவிவிடும் என்ற எண்ணத்துடன் தொண்டு செய்யாமல் இருப்பது முக்கியம்



Click it and Unblock the Notifications

