Latest Updates
-
இட்லி, தோசைக்கு ஏற்ற க்ரீன் கார சட்னி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நவம்பர் 02, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
நவம்பர் 06-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பண மழை கொட்டப்போகுது! -
1/4 கிலோ கடலை மாவு இருந்தா, தீபாவளிக்கு 1 கிலோ சாப்ட்டான பூந்தி லட்டு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
நவம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப் போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து தூக்கிப் போடுங்க.. அப்ப தான் லட்சுமி தேவியின் அருள் கிட்டும்! -
November 2026 Tarot Predictions: உங்க பிறந்த தேதிப்படி நவம்பர் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா? -
ரோட்டுக்கடை சிக்கன் 65 மட்டும் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஊறுகாய் மற்றும் கருவாட்டை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? விளக்கும் டாக்டர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 100 நாட்களில் இந்த 5 ராசிக்காரங்க அசுர வளர்ச்சியை காண்பார்களாம்!
இந்த 4 வகை குரலில் நீங்க எப்படி பேசுறீங்கனு சொல்லுங்க? உங்களைப் பற்றிய ரகசியங்களை நாங்க சொல்றோம்...!
Personality Test: உங்கள் குரல் உங்களின் மறைக்கப்பட்ட ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதில் உங்களுக்கே சந்தேகம் இருந்தால், இந்த பதிவு உங்கள் குரலின் அடிப்படையில் நீங்கள் எந்த வகையான நபர் என்பதைச் சொல்லும் வாய்ப்பு உள்ளது.
உங்கள் அதிக சத்தமாகவோ அல்லது மிகவும் மென்மையாகவோ அல்லது தாழ்வாகவோ இருக்கிறதா அல்லது நீங்கள் வேகமாக பேசுகிறீர்களா அல்லது மெதுவாக பேசுகிறீர்களா? உங்கள் குரல் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் குரல் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது?
ஒருவரின் தோற்றத்தை அவரால் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் ஒரு கணிப்புக்கு வரலாம். ஆனால் அவர்கள் வாய் திறந்து பேசும்வரை காத்திருக்கவும், ஏனெனில் அவர்களின் குரல் உங்கள் எண்ணத்தை அடியோடு மாற்றலாம். நாம் எப்படிப்பட்டவர் என்பதை நமது குரல்கள் வெளிப்படுத்தலாம்.
ஒருவர் ஆதிக்கம் செலுத்தக்கூடியவரா, தன்னம்பிக்கை குறைந்தவரா அல்லது கெஞ்சி பேசக்கூடியவரா என்பதை அவர்களின் குரலும், அவர்கள் பேசும் தொனியும் வெளிப்படுத்தலாம். உங்களின் குரல் உங்களைப் பற்றி சொல்லும் சுவாரஸ்யமான தகவல்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
வேகமாக பேசுபவர்கள்
நீங்கள் எப்போதும் வேகமாகவும், சத்தமாகவும் பேசினால், நீங்கள் ஒரு வெளிப்படையான ஆளுமைக் கொண்டவர்கள். நீங்கள் ஒரு வேடிக்கையான மற்றும் உணர்ச்சி மனப்பான்மையுடன் விஷயங்களை அணுகலாம். நீங்கள் செயல் சார்ந்தவராகவும், விஷயங்களின் தத்துவார்த்த அம்சங்களில் கவனம் செலுத்தாதவராகவும் இருக்கலாம்.
எப்பொழுதும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பவராக நீங்கள் இருக்கலாம். நீங்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் சூடான விவாதங்களில் குதிக்கலாம். சில சமயங்களில், நீங்கள் தேவைக்கு அதிகமாக பேசலாம் அல்லது உங்கள் சொந்த ரகசியங்களை வெளிப்படுத்தலாம். உங்கள் ஆளுமையில் எப்பொழுதும் அமைதியில்லாமல் அவதிப்படுபவர்களாக இருப்பீர்கள்.
மெதுவாக பேசக்கூடியவர்கள்
நீங்கள் மெதுவாகவும் அமைதியாகவும் பேசினால், நீங்கள் ஒரு உள்முகமான அல்லது தெளிவற்ற ஆளுமை. நீங்கள் பேசும் போது நீண்ட இடைவெளி எடுக்கலாம். எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன் நீங்கள் விஷயங்களை தீவிரமாக யோசிக்கிறீர்கள்.
நீங்கள் கவனமாகக் கேட்க விரும்பலாம். மற்ற நபரையும் பேச அனுமதிப்பதால் நீங்கள் ஒரு நல்ல கேட்பவராகவும் இருக்கலாம். இருப்பினும், நீங்கள் சொல்வதில் பொறுமை அல்லது ஆர்வம் இல்லாதவர்களுக்கு சில சமயங்களில் நீங்கள் சலிப்பை ஏற்படுத்தலாம். உங்கள் ஆளுமை என்பது நீங்கள் எதைச் செய்தாலும் அதில் தீவிரமாகவும், ஆழமாகவும் இருப்பதை பற்றியது.
சத்தமாக பேசக்கூடியவர்கள்
உங்களின் குரல் வளம் மிகவும் சத்தமானதாக இருந்தால், நீங்கள் ஒரு ட்ரெபிள் மற்றும் அலறல் குரல் உள்ளவர்களாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் இடைவெளி விட்டு பேசக்கூடிய ஒருவராக இருந்தால், உங்கள் பார்வையாளர்களையோ அல்லது நேர்காணல் செய்பவர்களையோ கவர முடியாமல் போகலாம்.
அத்தகைய நடுங்கும் குரல் குறைந்த தன்னம்பிக்கை மற்றும் பதட்டத்தை குறிக்கிறது. நீங்கள் பாதுகாப்பின்மை, சார்பு மற்றும் அமைதியின்மை போன்ற உணர்வுகளைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், உயர்ந்த குரல்களைக் கொண்ட நபர்கள் நம்பகமானவர்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
தாழ்ந்த குரல் வளம் கொண்டவர்கள்
உங்களிடம் தாழ்வான குரல் இருந்தால், நீங்கள் ஆழமான குரலைக் கொண்டிருக்கலாம். ஆளுமை பற்றிய ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, தாழ்வான ஆழமான குரல் கொண்ட நபர்கள் மேலாதிக்கம், நம்பிக்கை, உறுதியான மற்றும் எதிர் பாலினத்தவர்களிடையே மிகவும் பிரபலமானவர்களாக இருப்பார்கள்.
நீங்கள் ஒரு கவர்ச்சியான, சுதந்திரமான ஆளுமை. நீங்கள் பேச்சிலேயே மக்களைக் கவரலாம். நீங்கள் உங்கள் மீது தீர்க்கமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறீர்கள். நீங்கள் விஷயங்களை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக சூழ்நிலைகளில் நீங்கள் கட்டளையிடலாம் அல்லது அதிக செல்வாக்கைக் கொண்டிருக்கலாம். ஆழ்ந்த அல்லது உயர்ந்த குரல்களைக் கொண்ட ஆண்களும் பெண்களும் பாலுறவில் சுறுசுறுப்பாக அல்லது தீவிரமான பாலியல் ஆசைகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.



Click it and Unblock the Notifications

