Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
நீங்க எந்த கிழமையில் பிறந்தீங்கனு சொல்லுங்க... நீங்க உண்மையில் எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
Personality Test: ஒருவரின் பிறந்த ராசி மற்றும் பிறந்த தேதியை வைத்து ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. ஒருவரின் ஆளுமையைத் தெரிந்து கொள்ள அவர்களின் ராசி உதவுவது போல அவர்களின் பிறந்த நாளும் முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறியாதது.
நீங்கள் பிறந்த நாள் உங்கள் ஆளுமையை எவ்வாறு பாதிக்கிறது? நீங்கள் எபப்டிப்பட்டவர் என்பதை நிர்ணயிப்பதில் நீங்கள் வாரத்தில் எந்த நாளில் பிறந்தீர்கள் என்பதும் முக்கியமானதாகும். நீங்கள் பிறந்த கிழமை உங்களைப் பற்றிய சில ரகசியங்களை வெளிப்படுத்தும். இந்த பதிவில் உங்களின் பிறந்த நாளின் அடிப்படையில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஞாயிறு
நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிறந்தவராக இருந்தால், நீங்கள் மிகவும் தாராள குணம் கொண்டவராகவும், நகைச்சுவையாகவும், நம்பிக்கையுடனும் மற்றும் உற்சாகமாகவும் இருக்கலாம். நீங்கள் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் காந்த ஆளுமை கொண்டவராக இருக்கலாம். நீங்கள் தைரியமானவராகவும், சுதந்திரத்தின் மீது அதிக விருப்பம் கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்களுக்குள் நிறைந்திருக்கும் ஆற்றல் உங்களை மிகவும் சுதந்திரமானவர்களாக மாற்றலாம்.
நீங்கள் பிரகாசமான மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கொண்டவராக இருக்கலாம், இதனால் நீங்கள் எப்போதும் கூட்டத்தில் தனித்து நிற்கலாம். உங்கள் சக்திவாய்ந்த ஆளுமையின் காரணமாக நீங்கள் நட்பு வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவராகவும், தனித்துவமானவராகவும் இருக்கலாம். உங்களின் பேச்சாற்றல் உங்களுடைய வியாபாரம் மற்றும் வேலையில் வெற்றியைக் கொடுக்கலாம்.
திங்கள்
நீங்கள் திங்கட்கிழமை பிறந்திருந்தால், உங்கள் ஆளுமையின் படி நீங்கள் அடக்கமானவராகவும், அமைதியானவராகவும், இரக்கமுள்ளவராகவும் இருப்பீர்கள். நீங்கள் அதிக உணர்திறன் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்பவராக இருக்கலாம், மேலும் முடிவெடுப்பதில் மெதுவானவராக இருக்கலாம். நீங்கள் உடல்ரீதியாக வசீகரமானவராக இருக்கலாம் மற்றும் அமைதியான மற்றும் மர்மமான ஆற்றலை வெளிப்படுத்தலாம்.
நீங்கள் வீட்டுச் சூழலை அதிகம் விரும்பலாம், குறிப்பாக அம்மாவிடம் அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். உறவுகளில் நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும் விரும்பலாம். நீங்கள் உங்கள் குடும்ப உறவுகளை பாதுகாப்பவராக இருக்கலாம். புத்திசாலித்தனத்தை விட உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் நீங்கள். உதவியில்லாத தருணங்களில் வெடித்து அழுபவராக இருப்பீர்கள்.

செவ்வாய்
நீங்கள் செவ்வாய்க்கிழமையில் பிறந்திருந்தால், நீங்கள் சுறுசுறுப்பானவர், ஒழுக்கம், வெளிப்படையான மனது மற்றும் நேர்மையானவர்களாக இருக்கலாம். நீங்கள் ஒரு ஆற்றல்மிக்க மற்றும் அதிக உறுதியான ஆளுமை கொண்டவராக இருக்கலாம். உங்களிடம் வலிமையான, அதேசமயம் கவர்ந்திழுக்கும் கருணை நிறைந்திருக்கலாம். நீங்கள் தைரியமான அதேசமயம் பொறுமையற்ற அதிர்வுகளை வெளிப்படுத்தலாம்.
உங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிப்பதில் நீங்கள் சிறந்தவராக இருக்கலாம். நீங்கள் தைரியமான மனப்பான்மை கொண்டவராக இருக்கலாம் மற்றும் முன்பின் தெரியாத விஷயங்களை செய்ய பயப்பட மாட்டீர்கள். பணத்தின் மீது அதிக விருப்பம் கொண்டவராக இருக்கலாம், பேசுவதற்கு முன் யோசிக்காமல் பேசுபவராக இருக்கலாம். நீங்கள் விமர்சனங்களை வெறுப்பவராக இருக்கலாம் மற்றும் பெரும்பாலான நேரங்களில் வாக்குவாதத்தில் ஈடுபடலாம்.
புதன்
நீங்கள் புதன்கிழமையில் பிறந்திருந்தால், நீங்கள் அசாதாரணமான தகவல் தொடர்புத் திறனைக் கொண்டிருக்கலாம். உங்களது வேலைகளை முடிப்பதில் மற்றும் இலக்குகளை அடைவதில் நீங்கள் திறமையாகவும் சிறந்தவராகவும் இருக்கலாம். நீங்கள் எப்போதும் சாகச அனுபவங்களைத் தேடிக்கொண்டிருக்கலாம்.
எந்தவொரு விஷயத்திலும் நீங்கள் எளிதாக சலிப்படையலாம், எனவே நீங்கள் காதல் மற்றும் திருமணத்தில் சில சிக்கல்களை அனுபவிக்கலாம். உங்கள் உண்மையான திறமையைக் கண்டறியும் வரை நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் அல்லது வணிகம் அல்லது பணிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் தோல்வி அல்லது ஆபத்துக்களை சந்திக்க பயப்படாமல் இருக்கலாம். உங்கள் ஆற்றலை மீட்டெடுக்க அடிக்கடி நீங்கள் தனிமைக்கு செல்லலாம்.
வியாழன்
நீங்கள் வியாழன் அன்று பிறந்திருந்தால், நீங்கள் எதார்த்தமானவர்கள், அதிக நல்லொழுக்கம் கொண்டவர்கள், இலட்சிய வெறி கொண்டவர்கள். நீங்கள் சிறந்த பேச்சாற்றல், மென்மை, உணர்திறன் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை வெளிப்படுத்தலாம். எதிர்மறை ஆற்றல் பெரும்பாலும் உங்களை பாதிக்காமல் பாதுகாப்பாக இருப்பீர்கள்.
நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள், ஆபத்தான சூழ்நிலையிலும் உள்ள வாய்ப்பை பார்க்கிறீர்கள். நிர்வாகம், தலைமைத்துவம் போன்றவற்றில் நீங்கள் சிறந்தவராக இருக்கலாம். அனைத்தையும் விட குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பீர்கள்.
வெள்ளி
நீங்கள் வெள்ளிக்கிழமை பிறந்திருந்தால், நீங்கள் உற்சாகமான, நேர்மறை ஆற்றல் நிறைந்த மற்றும் மற்றவர்களுக்கு உதவுபவராக இருப்பீர்கள். புதிய இடங்களுக்கு பயணம் செய்வதிலும், ஆராய்வதிலும் நீங்கள் வெறி கொண்டவராக இருக்கலாம். அவசரத்தில் எப்போதும் தப்பான முடிவெடுப்பவராக இருப்பீர்கள். பார்ட்டி மற்றும் ஷாப்பிங் போன்ற விஷயங்களுக்கு நீங்கள் அதிக பணம் செலவழிக்கலாம்.
நீங்கள் அழகு, காதல், இன்பம் மற்றும் ஆடம்பரமான விஷயங்களை விரும்புபவராக இருக்கலாம். நீங்கள் கொஞ்சம் பொருள்சார்ந்தவராகவும் சோம்பேறியாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்க்கை முறையை பராமரிக்க கடினமாக உழைக்க நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க வழிவகுக்கும் கவர்ச்சியான வேலைகளை விரும்பலாம்.
சனி
நீங்கள் சனிக்கிழமையில் பிறந்திருந்தால் நீங்கள் பிடிவாதமாகவும், கண்டிப்பானவராகவும், விவேகமானவராகவும் அதேசமயம் கடின உழைப்பாளியாகவும் இருக்கலாம். நீங்கள் அதிகம் பேசக்கூடியவராக இல்லாமல் இருக்கலாம், உரையாடலில் ஏதாவது புத்திசாலித்தனமாக இருந்தால் மட்டுமே ஆர்வத்துடன் பேசுவார்கள். நீங்கள் அடக்கமான, புத்திசாலித்தனமான, கண்டிப்பான மற்றும் எதார்த்தமான நபராக வளரலாம்.
நீங்கள் அனைவரையும் கட்டுப்படுத்தவும், சர்வாதிகாரத்தை வெளிப்படுத்தவும் விரும்பலாம். உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். பெரும்பாலும் நீங்கள் கூச்ச சுபாவமுள்ளவராகவும் அல்லது திரைக்குப் பின்னால் இருக்க விரும்பும் ஒருவராகவும் இருக்கலாம். இதனால் உங்களின் திறமைக்கு ஏற்ற புகழ் உங்களுக்கு கிடைக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications