Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
ஒரே நாளில் கோடீஸ்வரரான டாப் 10 சாதாரண ஏழை மக்கள்... அதிர்ஷ்டம் எப்படியெல்லாம் வந்திருக்கு பாருங்க...!
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வர வேண்டுமென்று விதி இருந்தால் ஒரே இரவில் ஒருவரின் வாழ்க்கை மாறிவிடும். பலருக்கும் இதில் நம்பிக்கை இல்லையென்றாலும் இதற்கான சாட்சியாக நாம் வாழும் காலத்திலேயே பலர் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் நிதிரீதியாக மிகவும் சிரமப்பட்டவர்கள் அதிர்ஷ்டத்தால் ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியுள்ளனர். லாட்டரி, புதையல், பங்குச்சந்தை என இவர்களை செல்வந்தராக்கியது எதுவாக இருந்தாலும் அதற்கு காரணாமாக இருந்தது அவர்களின் அதிர்ஷ்டம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த பதிவில் ஒரே இரவில் கோடீஸ்வரராகிய உலகின் சில அதிர்ஷ்டசாலிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சனுன்யு லைசர்
தான்சானியாவில் கைவினை கலைஞராக இருந்த சனுன்யு லைசர், ஜூன் 2020 இல் $2 மில்லியன் மதிப்புள்ள 6 கிலோ எடையுள்ள அரியவகை ரத்தினத்தை கண்டுபிடித்தார். லைசர் இரண்டு மிகப்பெரிய டான்சானைட் கற்களைக் கண்டுபிடித்தார், இது கிரகத்தில் மிகவும் அரிதான ஒன்று என்று கூறப்படுகிறது.
அவர் கண்டுபிடித்த ஒவ்வொரு ரத்தினக் கல்லும் சுமார் 30 செ.மீ நீளமும் 10 செ.மீ தடிமனும் இருந்தது. நாட்டின் சுரங்க நிறுவனத்திற்கு அந்த ரத்தினக் கற்களை விற்று அவர் $3.4 மில்லியன் சம்பாதித்தார். அதன் இந்திய மதிப்பு 25 கோடியாகும்.
ஆனந்திலால் குஷ்வாஹா
2020 ஜூலையில் ஆழமற்ற சுரங்கத்தை குத்தகைக்கு வைத்திருக்கும் ஆனந்திலால் குஷ்வாஹா 10.69 காரட் வைரத்தைக் கண்டுபிடித்தார். அந்த வைரத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது சுரங்கத்தில் வைரத்தை கண்டெடுத்தது இது இரண்டாவது முறையாகும். வைரத்தின் தரம் நன்றாக இருப்பதாக அதிகாரிகள் கூட தெரிவித்தனர். மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் இந்த வைரம் கண்டெடுக்கப்பட்டது.
மோதிலால் பிரஜாபதி
தினக்கூலி தொழிலாளியான மோதிலால் பிரஜாபதி, அக்டோபர் 2020 இல் எம்பியின் பன்னா மாவட்டத்தில் 42.59 காரட் வைரத்தைக் கண்டுபிடித்து ஒரே இரவில் பணக்காரரானார். கடந்த ஆண்டு டிசம்பரில் அந்த வைரத்தை ஏலத்தில் வைத்து 2.5 கோடி ரூபாய்க்கு விற்றார். அவர் எடுத்த வைரம் பன்னாவின் வரலாற்றில் இரண்டாவது பெரிய வைரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹரிகிருஷ்ணன் வி நாயர்
ஹரிகிருஷ்ணன் வி நாயர், துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஜனவரி 2018 இல் $3.2 மில்லியன் மதிப்புள்ள லாட்டரியை வென்றார். ஹரிகிருஷ்ணன் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் பிக் டிக்கெட் லாட்டரியில் பங்கேற்று அதிர்ஷ்டசாலியாக மாறினார். அவர் 3 லாட்டரி சீட்டுகளை வாங்கியதாகவும், மூன்றாவது சீட்டிற்கு அபுதாபியில் இதுவரை இல்லாத மிகப் பெரிய பரிசுத் தொகையாக 20 கோடி ஜெயித்ததாகவும் கூறப்படுகிறது.
ஷிபு பால் மற்றும் லின்னெட் ஜோசப்
ஷிபு பால் மற்றும் லின்னெட் ஜோசப், இங்கிலாந்தைச் சேர்ந்த மலையாளி தம்பதியினர் ஜூலை 2020 இல் ₹1.84 கோடி மதிப்புள்ள லம்போர்கினி மற்றும் ₹18.94 லட்சம் ரொக்கப் பரிசை வென்றனர். ஷிபு தற்செயலாக 'பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்' (BOTB) என்று அழைக்கப்படும் லாட்டரி போட்டியில் பங்கேற்றார், அவருடைய கனவு காரை ஜெயிக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்த போட்டியில் பங்கேற்றார், இறுதியில் அவரது பிரார்த்தனைகள் இறுதியாக நிறைவேறியது. அந்த நாளின் பிற்பகுதியில், தம்பதியருக்கு £195,000 மதிப்புள்ள புத்தம் புதிய லம்போர்கினி மற்றும் £20,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
கிருஷ்ணா பாரி
புளோரிடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணா பாரி, டிசம்பர் 2018 இல் $14.5 மில்லியன்(இந்திய மதிப்பில் 1.5 கோடி ரூபாய்) வென்றார். பாரி ஒருபோதும் லாட்டரி சீட்டுகளை வாங்குபவராக இருந்ததில்லை, ஆனால், ஒரு முறை அவர் அதை வாங்கியபோது, அவர் ஜாக்பாட் அடித்தார்.
10 டிக்கெட்டுகளை வாங்கிய பிறகு, அவர் புளோரிடாவின் தம்பாவில் உள்ள Zephyrhills Publix மதுபானக் கடையில் $14.5 மில்லியன் வென்றார். அவர் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு உதவ தனது பணத்தை செலவழித்தார்.
என் கிரே
மே 2018-இல் சூப்பர் லோட்டோ ஜாக்பாட்டின் ஒரு பகுதியாக ஜமைக்காவைச் சேர்ந்த என் கிரே என்ற பெண் 180 மில்லியன் ஜமைக்கா டாலர்களை (சுமார் ₹1.5 கோடி) வென்றார்.
தனக்கு தெரிந்தவர்களுக்கு தான் பரிசு வென்றது தெரியக்கூடாது என்பதற்காக பரிசுத்தொகை வாங்க செல்லும் போது சிரிக்கும் எமோஜி முகமூடியை அணிந்து சென்றார்.
வனேசா வார்டு
வனேசா வார்டு என்ற அமெரிக்கப் பெண் டிசம்பர் 2018 இல் ₹1.5 கோடி மதிப்புள்ள லாட்டரியை வென்றார். வனேசா ஒரு மளிகைக் கடையில் முட்டைக்கோஸ் வாங்க சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற போது, அதிகம் எதிர்பார்க்காமல் வின் எ ஸ்பின் ஸ்கிராட்ச்-ஆஃப் டிக்கெட்டை வாங்க முடிவு செய்தார்.
அவர் வீட்டிற்கு வந்ததும், விளையாட்டின் முதல் பரிசை வென்றதை அவர் அறிந்தார். பெரிய ஸ்பின் வெயிலில் $100,000 முதல் $500,000 வரை வாய்ப்புள்ள விளையாட்டை அவர் வென்றார். அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார், அவர் $2,250,000 உடன் வீட்டிற்குச் சென்றாள், அதாவது தோராயமாக ₹1.5 கோடியாகும்.
லேஆண்ட்ரா க்ளே
ஆர்கன்சாஸில் உள்ள ஹெலினா-வெஸ்டில் வசிக்கும் LeAndra Clay, மார்ச் 2018 இல் பெரிய அதிர்ஷ்டத்தைப் பெற்றார். பிப்ரவரி 2018 இல் எதிர்பாராத விபத்தில் தனது வீட்டை தீயில் இழந்த பிறகு, க்ளே தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க ஒரு லாட்டரி சீட்டை வாங்க முடிவு செய்தார், அவரது அதிர்ஷ்டம் அவருக்கு நன்கு வேலை செய்தது. பவர்பால் டிராவில் ₹1.3 கோடியை வென்றார்.
சாம் லாட்டன்
அமெரிக்காவைச் சேர்ந்த சாம் லாட்டன் என்ற வாலிபர் ஆகஸ்ட் 2019-ல் உலகின் மிகச்சிறிய வயதில் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரரானார். 19 வயதான சாம் லாட்டனுக்கு லாட்டரி சீட்டை வாங்கும் திட்டம் எதுவும் இல்லை ஆனால், தொலைக்காட்சியில் சக வெற்றியாளரைப் பார்த்த பிறகு, அதை முயற்சிக்க முடிவு செய்தார். அவர் வாங்கிய முதல் லாட்டரி சீட்டிலேயே £1,20,000 வென்றார். இந்திய ரூபாயில் அதன் மதிப்பு 1.03 கோடியாகும்.



Click it and Unblock the Notifications
