Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த படத்துல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. நீங்க அமைதியானவரா அல்லது திடமானவரா-ன்னு சொல்றோம்...
Optical Illusion: தற்போது இணையத்தில் ஒருவரது குணாதியங்களைப் பற்றி கூறும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை பல்வேறு விஷயங்கள் நிறைந்த ஒரு அழகான மற்றும் கவர்ச்சியான படங்களாகும். இந்த மாதிரியான படங்கள் ஒவ்வொருவரின் பார்வையிலும் ஒவ்வொரு மாதிரி தெரியும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தெரிவதற்கு காரணம், அவர்களின் மூளையின் செயல்பாடு தான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களானவை புதிர் நிறைந்த விளையாட்டு. நீங்கள் சோர்ந்திக்கும் வேளையில் இம்மாதிரியான படங்களைப் பார்க்கும் போது, அவை மூளைக்கு நல்ல வேலையை கொடுத்து சுறுசுறுப்பாக செயல்படச் செய்வதோடு, ஆளுமையைப் பற்றியும் வெளிப்படுத்தும். கீழே ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரண்டு விதமான உருவங்கள் தெரியும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானது. இதை மியா யெலின் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் முதலில் கண்களுக்கு எது தெரிகிறதோ, அது அந்நபரின் சுவாரஸ்யமான குணாதிசயங்களைப் பற்றி கூறும். அதுவும் இந்த படத்தில் ஓநாயின் காலும், முகமும் உள்ளது. இதில் முதலில் எது தெரிகிறது என்று சொன்னால், அதை வைத்து நீங்கள் அமைதியானவரா அல்லது திடமான மனதைக் கொண்டவரா என்பதை அறியலாம்.
ஓநாயின் கால்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஓநாயின் கால் தெரிகிறது என்றால், நீங்கள் அதிகமாக ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருப்பவர். அனைவரிடம் மற்றும் அனைத்து விஷயங்களிலும் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். பிரச்சனைகளை தீர்க்க அனைவருமே உங்களிடம் தான் வருவார்கள். எப்பேற்பட்ட சூழ்நிலையையும் எளிதில் கையாள்வீர்கள். இருப்பினும் உங்களின் அன்பான குணத்தை அனைவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஓநாயின் தலை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஓநாயின் தலை தெரிகிறது என்றால், நீங்கள் அஞ்சா நெஞ்சம் கொண்டவர். எபபேற்பட்ட சூழ்நிலையையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். எந்த ஒரு பிரச்சனையையும் தட்டிக் கேட்க தயங்கமாட்டீர்கள். அனைவரிடமும் எளிதில் பழகுவீர்கள்.
இருப்பினும் நீங்கள்சொல்வதை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைப்பீர்கள். மற்றவர்களின் பேச்சை காது கொடுத்து கேட்கமாட்டீர்கள். ஒரு விஷயத்தை செய்ய முடிவெடுத்தால், அதை வெற்றிகரமாக முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். முக்கியமாக மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத உங்கள் குணம் உங்களின் வளர்ச்சியை பாதிக்கும்.



Click it and Unblock the Notifications