Latest Updates
-
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க வசீகரமான குணத்தை சொல்றோம்...
Optical Illusion Personality Test: ஒரு படம் உங்களின் குணாதிசயங்களை புட்டுபுட்டு வைக்கும் என்று கூறினால், நிச்சயம் அதை முயற்சிக்க நீங்கள் விரும்புவீர்கள் தானே? அப்படி ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஒருவிதமான ஆளுமை சோதனை தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். இந்த வகை படங்கள் கண்களை கவரும் வண்ணம் இருந்தாலும், இந்த படங்களை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் கண்களுக்கு தெரியும்.
இதற்கு ஒருவரது மூளையின் செயல்பாடு தான் காரணம். இந்த புதிர் நிறைந்த படங்களை பார்க்கும் போது, மூளை உங்கள் ஆழ் மனதை ஆழமாக ஆராய்ந்து, உங்கள் உணர்ச்சிபூர்வமான பதில்கள், முடிவெடுக்கும் முறைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள். இது நீங்கள் நேர்மையை விரும்புவீர்களா அல்லது சந்தேக பார்வையுடன் இருப்பீர்களா என்பதை வெளிப்படுத்தும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒருவர் நீர்வீழ்ச்சி அல்லது ஒரு பெண்ணின் முகத்தைக் காணலாம். உங்கள் பார்வைக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். உங்களின் முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான குணாதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு பெண்ணின் முகம்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் எதையும் நேரடியாக பேசக்கூடியவர். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே வேறு பேசும் நபர் அல்ல. இப்படி மனதில் தோன்றுவதை வெளிப்படையாகவும், நேரடியாகவும் உடனே பேசுவதால், உங்களைச் சுற்றியிருப்பவர் உங்களால் அடிக்கடி மனம் வருத்தமடைவார்கள். ஆனால் அதே சமயம் இந்த குணம் உங்களை ஒரு நல்ல நண்பராக்குகிறது. மேலும் நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்பதால் எளிதில் மற்றவர்களை நம்பிவிடுவீர்கள்.
நீர்வீழ்ச்சி...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் நீர்வீழ்ச்சி தெரிந்தால், நீங்கள் அதிகம் சந்தேகப்படுவீர்கள். அதாவது, ஒரு சிறிய முடிவு எடுக்கவே நீண்ட நேரம் எடுத்துக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிப்பவர்கள் உங்களை அமைதியானவராகவும், சாந்தமானவராகவும் நினைக்கலாம். ஆனால், உண்மையில் நீங்கள் விரைவில் எரிச்சலடைவீர்கள் மற்றும் உங்கள் கோபம் மற்றவர்களை அதிகம் காயப்படுத்தும். வேலை மற்றும் பணத்திற்கு அதிக மதிப்பை அளிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications