Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம்...
Optical Illusion: ஒருவரது குணாதிசயங்களை பற்றி தெரியப்படுத்தும் ஒரு புதிர் நிறைந்த படங்கள் தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். என்ன தான் உங்களைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்தாலும், உண்மையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் உங்களின் குணங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனையை எடுங்கள்.
இணையத்தில் ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகை படங்கள் ஒருவரின் குணாதியங்களை பற்றி மட்டுமின்றி, அந்நபரின் பலம், பலவீனம், சிந்திக்கும் திறன் போன்ற பல விஷயங்களை கூறும். இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகை படத்தை பார்க்கும் போது ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தென்படும். இது நீங்கள் உலகத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களின் கண்ணோட்டத்தைப் பற்றியும் தெரியப்படுத்தும். அதுவும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பல மிருங்களின் உருவங்கள் ஒளிந்துள்ளன. இதில் உங்கள் கண்களுக்கு முதலில்
ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன. நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
பறவை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு பறவை தெரிந்தால், நீங்கள் மிகவும் அமைதியானவர். யாருடனும் அவ்வளவு எளிதில் பழகமாட்டீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் போது மிகவும் வசதியாக உணர்வீர்கள். முக்கியமாக நீங்கள் மிகவும் விசுவாசமான நபர்.
கலைமான்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கலைமான் தெரிந்தால், நீங்கள் வலிமையானவர் மற்றும் நட்பை மதிப்பவர். மிகவும் நம்பிக்கையான நபர் மற்றும் மற்றவர்களை எப்போதும் நன்கு மதித்து நடப்பவர்.
அணில்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் அணில் தெரிந்தால், நீங்கள் வெளியே அதிகம் சுற்ற விரும்புவீர்கள் மற்றும் மற்றவர்களுடன் பழக ஆசைப்படுவீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் நம்பிக்கையுடன் கையாள்வீர்கள். இடத்திற்கு தகுந்தவாறு உங்களை மாற்றிக் கொள்வதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
புறா
இந்த ஆப்டிகல் இல்யூஷடன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் புறா தெரிந்தால், நீங்கள் அமைதியான ஆளுமையைக் கொண்டவர். எந்த ஒரு மோசமான சூழ்நிலையையும் அமைதியாக கையாள்வீர்கள். எதையும் பதற்றத்துடன் செய்யமாட்டீர்கள்.
கழுதை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு கழுதை தெரிந்தால், நீங்கள் தைரியமானவர் மற்றும் உங்கள் மதிப்பைப் பற்றி பேசவும், உங்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்காக ஆதரவாக இருக்கவும் தயங்கமாட்டீர்கள். உங்களின் விருப்பங்களை வெளிப்படுத்த சற்றும் தயக்கம் கொள்ளமாட்டீர்கள்.
வான்கோழி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு வான்கோழி தெரிந்தால், நீங்கள் மற்றவருக்கு உதவ தயங்கமாட்டீர்கள் மற்றும் மற்றவர்களைப் பற்றி அதிக அக்கறை கொண்டவர்கள். யாரேனும் உதவி என்று கேட்டால் தயங்காமல் உடனே செய்வீர்கள்.
பனிக்கரடி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பனிக்கரடி தெரிந்தால், நீங்கள் தனிமையையும், அமைதியையும் மதிக்கும் நபர். வெளியே அதிகம் சுற்ற விரும்பமாட்டீர்கள். மிகவும் விசுவாசமான மற்றும் நம்பகமான நபர். முக்கியமாக மற்றவர்கள் மீது அதிக அக்கறையுள்ள நபர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
