Latest Updates
-
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
இந்த படத்துல உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்ட வாழ்க்கையை விரும்புறீங்க-ன்னு சொல்றோம்...
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும் வகையில் இருக்கும் படங்களாகும். முக்கியமாக இந்த வகை படங்களானது ஒருவரது குணாதிசயங்களை பிரதிபலிக்கும். மேலும் இப்படங்கள் நமது கவனத்தை சிதறவிடாமல் சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன.
பொதுவாக நமது குணாதிசயங்களை மற்றவர்கள் கணித்து கூறுவதை தெரிந்து கொள்ள ஒருவித ஆவல் அனைவருக்கும் இருக்கும். உங்களுக்கும் அப்படியொரு ஆர்வம் இருந்தால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள புதிர்களை கண்டுபிடியுங்கள். அதுவும் நீங்கள் வாழ்க்கையில் சாகசத்தை விரும்புபவரா அல்லது மாற்றத்தைக் காண விரும்பாமல் நிலையான வாழ்க்கையை வாழ விரும்புபவரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் அதை தெரிவிக்கும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள். இந்த படத்தைக் கண்டதும், முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது என்பதை மனதில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். பின் உங்கள் கண்ணில் தென்பட்ட விஷயங்களுக்கான காரணம் என்னவென்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் உள்ளன. அவை கப்பல் மற்றும் பாலம். இந்த இரண்டில் உங்கள் கண்களுக்கு எது முதலில் தெரிந்தது என்பதை மனதில் பதித்து, அந்த படம் என்ன சொல்ல வருகிறது என்பதை பாருங்கள்.
பாலம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பாலம் தெரிந்தால், நீங்கள் வழக்கமான வாழ்க்கையை வாழ விரும்பமாட்டீர்கள். ஊர் சுற்ற அதிகம் விரும்புவீர்கள். உலகம் முழுவதும் பயணிக்க ஆசைப்படுவீர்கள். இப்படி அதிகம் சுற்றுவதாலோ என்னவோ, உங்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். மொத்தத்தில், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாடி வாழ்ந்து வருகிறீர்கள்.
கப்பல்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கப்பல் தெரிந்தால், நீங்கள் மாற்றத்தை விரும்பாதவர். புதிய விஷயங்களை முயற்சிக்க நினைத்தாலும், உங்களின் மனமோ மாற்றத்தை விரும்பாமல் நிலையான வாழ்க்கையை வாழ விரும்புகிறது. இந்நிலையில் அந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத போது, அது உங்களை அதிகமாக விரக்தியடையச் செய்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications