Latest Updates
-
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும்
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு சொல்றோம்...
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி சில புதிர்களைக் கொண்டிருந்தாலும், கண்களை ஈர்க்கும்படி அழகான படங்களாக இருக்கும். இந்த வகையான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
ஒருவரது கண்களுக்கு முதலில் தெரியும் விஷயங்களானது அந்நபரின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எப்படி செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாதிரி இணையத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இரண்டு உருவங்கள் ஒருவருக்கு தெரியலாம். இதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அது அந்நபர் வெளிப்படையானவரா அல்லது கூச்சசுபாசமுள்ளவரா என்பதைத் தெரியப்படுத்தும். நீங்கள் இந்த சோதனையை எடுக்க தயாராக உள்ளீர்களா? இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை அறிந்து, உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சாக்ஸபோனிஸ்ட்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு சாக்ஸபோனிஸ்ட் தெரிந்தால், நீங்கள் மற்றவர்களுடன் பேசவும் பழகவும் விரும்புவீர்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் உங்களை நண்பராக்கிக் கொள்ள விரும்புவார்கள். அந்த அளவில் நீங்கள் கலகலவென்று பேசுவீர்கள். சுற்றியிருப்பவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்கள். மனதில் பட்டதை சற்றும் தயக்கம் கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவீர்கள்.
முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு முகம் தெரிந்தால், நீங்கள் மிகவும் அமைதியானவர் மற்றும் எதையும் வெளிப்படையாக பேசமாட்டீர்கள். மற்றவர்களுடன் அதிகம் பேசி பழகமாட்டீர்கள். அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்களுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவீர்கள். மேலும் உங்களுக்கு பிடித்ததை உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் சொல்லாமலேயே செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: timesnownews



Click it and Unblock the Notifications